( 14.01.2022 முதல் 12.02.2022 வரை )
சந்திரனும் ராகுவும் லக்னத்தில் அமர இம்மாதம் தொடங்குவதால் பெண்கள், குழந்தைகள் விஷயத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன - மதக்கலவரம் வலுக்கும். பெரும் தீ விபத்து போர் பதட்டம், எல்லையில் வாழும் மக்களுக்கு மன அமைதியின்மை. அடிக்கடி குண்டு வெடிப்பு. துப்பாக்கிச் சண்டை ஏற்படும். குற்றங்கள் அதிகரிக்கும். தீவிரவாதிகளின் ஊடுருவல் உண்டு. எனினும் நமது ராணுவம் உஷார் நிலையிலிருந்து அவற்றை முறியடிக்கும்.
சுக்ரன் எட்டில் உலவிடுவதால் கலையுலகத்தைச் சேர்ந்தவரின் இழப்பு ஏற்படலாம். தொழில் வீட்டில் குருவின் சஞ்சாரம் தொடர்வதால் புதிய கல்வி நிறுவனங்கள் தோன்றும். வேலைவாய்ப்புக்கள் கூடும். மத வழிபாடுகள். கோயில் திருவிழாக்கள் அதிகரிக்கும். வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கி பொது மக்களின் பாராட்டுக்களைப் பெறும். செவ்வாய் உத்திராடத்தில் உள்ளபோது நல்ல மழையுண்டு.
மழை :
ஜனவரி : 16, 17, 18, 23, 29, 30
பிப்ரவரி : 1, 2, 4, 8, 11.
- பராசரம் பாலசுப்பிரமணியம் ( பஞ்சாங்க கணிதர் )
நட்சத்திர பலன்கள்
ஆயில்யம், அனுஷம், பூரட்டாதி
உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம். உடல் நலத்தில் கவனம் தேவை.
மகம், கேட்டை, உத்திரட்டாதி
லாபகரமான செயல்கள் நடைபெறும். பண வரவு இருக்கும்.
பூரம், மூலம், ரேவதி
அதிக செலவுகள் ஏற்படும். பண விசயத்தில் கவனம் தேவை.
அஸ்வினி, உத்திரம், பூராடம்
அலைச்சல்கள் மற்றும் நேரத்திற்கு சாப்பிட இயலாமை இருக்கும்.
பரணி, மிருகசிரிசம், அஸ்தம், உத்திராடம்,
சந்தோஷமான நிகழ்வுகள் , வாய்க்கு ருசியான விருந்துகள் கிடைக்கும்.
கார்த்திகை, திருவாதிரை, சித்திரை, திருவோணம்
பொன் பொருள் நகை பண சேர்க்கை உண்டு.
ரோகிணி, புனர்பூசம், சுவாதி, அவிட்டம்.
சண்டைகள் கலகங்கள் மனஸ்தாபங்கள் ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
பூசம், விசாகம், சதயம்
காரிய தடைகள் மற்றும் அலைச்சல்கள் எற்படலாம். ஏதேனும் துக்க செய்திகள் கேட்க நேரிடலாம்.
சென்ற மார்கழி மாத பலனுக்கு ......
Whatsapp மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....
No comments:
Post a Comment