Friday, 6 March 2020

சாபம் பெற்ற ஜாதகம் எப்படி இருக்கும் தெரியுமா??

ஒருவரின் முயற்சிக்கு ஏற்ப பலன்களை கொடுக்க கூடியவர் குரு.
என்ன பண்ணினாலும் செய்த பாவத்திற்கு தண்டனை கொடுத்தே தீருபவர் சனி.

பாவம் - சாபம் வேறுபாடு புரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக ஒருவரின் பணத்தை அபகரிப்பது பாவம். அவ்வாறு பணத்தை இழந்தவர் அதிக பாதிப்புகளுக்கு உள்ளாகி மன வேதனை அடைந்து தருவது சாபம்.

ஒரு ஜாதகத்தில் சாபம் இருக்கிறது என்பதனை சனி மற்றும் கேதுவின் நிலை வைத்து அறிந்து கொள்ள முடியும்.

கேதுவுடனோ அல்லது கேதுவுக்கு 5,7 ம் இடத்தில் சனி இருந்தாலோ அது சாபம் பெற்ற ஜாதகம் ஆகும்.


உதாரணமாக ரிஷபம் / துலாம் ராசியில் சனி - கேது இணைவு இருந்தால் அவர்கள் முன் ஜென்மத்தில் காதலித்து ஏமாற்றி இருக்கலாம். அல்லது கணவன்/ மனைவி க்கு கடமைகளை செய்யாமல் துரோகம் செய்து இருக்கலாம்.

இவ்வாறு அமைந்த ஜாதகருக்கு இந்த ஜென்மத்தில் திருமணம் ஆவது கடினம். அவ்வாறு திருமணம் ஆனாலும் அது மகிழ்ச்சிகரமாக இருக்காது.


கன்னி ராசியில் கேது இருந்து அதற்கு 5ல் மகரத்தில் சனி இருந்தால் அது கற்பழிப்பு சமந்தப்பட்ட சாபமாக இருக்கும்.

அவ்வாறு இருந்தால் இருந்தால் இந்த ஜென்மத்தில் அவருக்கு ஆண்மை குறைவு அல்லது தாம்பத்திய சுகம் இல்லாமை போன்றவை இருக்கும்.

மேஷத்தில் கேது இருந்து அதற்கு 7ல் துலாம் ல் சனி இருந்தால் பெண் சாபமாக இருக்கும்.

அவருக்கு இந்த ஜென்மத்தில் திருமணம் ஆகாமலோ அல்லது பெண் துணை இல்லாமலோ இருக்க கூடிய அமைப்பு இருக்கும்.

சிம்ம ராசியில் சனி - கேது இணைவு இருந்தால் அது மன ரீதியான கொடுமை செய்த சாபம் அல்லது மன நலம் பாதிக்கப்பட்டோர் சாபம் என்று சொல்லலாம்.

அவர்களுக்கு இந்த ஜென்மத்தில் மன நிம்மதி என்பது கிடையாது. தாழ்வு மனப்பான்மை, தன்னம்பிக்கை இன்மை, தைரியம் இன்மை போன்றவை இருக்கும்.

மேலும் ஒரு கிரகம் நீசம்/அஸ்தங்கம் பெற்று இருந்தாலும் அதனையும் ஒருவகை சாபம் என்று சொல்லலாம்.

பரிகாரம்:
இவர்கள் சிவனை வழிபாடு செய்து வர சாபத்தில் இருந்து விடுபட முடியும்.

மேலும் தன் சாபம் தொடர்பான வழியில் பரிகாரம் செய்ய வேண்டும்.
கணவன்/ மனைவி வழியில் சாபம் பெற்றவர்கள் பிறர் திருமணத்திற்கு உதவி செய்யலாம். பிரிந்த தம்பதிகளை சேர்த்து வைக்கலாம்.

பணம் தொடர்பான சாபம் பெற்றவர்கள் தான தர்மங்கள் செய்யலாம்.

மனரீதியாக ஒருவரை கொடுமை செய்து சாபம் பெற்றவர்கள் மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கெடுதல் செய்து சாபம் பெற்றவர்கள் பிறருக்கு உளவியல் ஆலோசனைகள் சொல்வது. அவர்களுக்கு ஆறுதலாக பேசுவது தன்னம்பிக்கை தருவது போன்றவற்றில் எடுபடலாம்.


Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.



7 comments:

  1. Sir mesham irukum idathail sevvai and danushu irukum idathail Sani irupathu saabama? Please reply me sir

    ReplyDelete
  2. Sir dhanushu irukum idathil sukiran,ketu mesham irukum Idathil sani matrum maandi irukirathu ithu saabama?

    ReplyDelete
  3. Sir enna panrathu sir?Intha saabathirku?

    ReplyDelete
  4. அய்யா கும்ப லக்னம் 7 ல் சிம்ம ராசியில் கேது சனி சுக்ரன் மூன்றும் உள்ளது இது சாபமா அப்டி ஆனால் என்ன சாபம் pls rply

    ReplyDelete