( 16.12.2021 முதல் 13.01.2022 வரை )
இலையுதிர்க்கால பயிர்கள் நன்கு விளையும். பனிப் பொழிவு அதிகமாக இருக்கும். வடநாட்டில் குளிர் உச்சகட்டத்தில் இருக்கும். புதிய கல்வி நிறுவனங்கள் தோன்றும். கலைஞர்கள் பாராட்டப்படுவர். புதிய தொழில்கள் தோன்றும். அந்நிய முதலீடு அதிகரிக்கும். வேலை வாய்ப்பு பெருகும். இரும்பு, எஃகு, தோல். கம்பளி சம்பந்தமான தொழில் வளர்ச்சியடையும். எண்ணெய். எண்ணெய் வித்துக்கள் பருத்தி விதை விலை கூடும்.
இரண்டில் செவ்வாயும் கேதுவும் உள்ளதால் கொள்ளை. திருடு. வழிப்பறி அதிகரிக்கும். புத்தகம், பத்திரிகை, ஊடகம், தொலைபேசி ஆகிய துறைகள் நல்ல முன்னேற்றம் காணும். பெண்ணொருவர் பெரும் விருதும் பாராட்டும் பெறுவார். அரசுக்கு ஆதரவு பெருகும். செவ்வாய் கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் நோய் பரவும். வெள்ளி விலை குறையும், தற்கொலைகள் பெருகும்.
மழை :
டிசம்பர் : 19, 24, 26, 29
ஜனவரி: 3.4,5, 6, 9, 12.
- பராசரம் பாலசுப்பிரமணியம் ( பஞ்சாங்க கணிதர் )
நட்சத்திர பலன்கள்
புனர்பூசம் , சுவாதி , அவிட்டம்.
உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம். உடல் நலத்தில் கவனம் தேவை.
பூசம், விசாகம், சதயம் .
லாபகரமான செயல்கள் நடைபெறும். பண வரவு இருக்கும்.
ஆயில்யம், அனுஷம், பூரட்டாதி.
அதிக செலவுகள் ஏற்படும். பண விசயத்தில் கவனம் தேவை.
மகம், கேட்டை , உத்திரட்டாதி
அலைச்சல்கள் மற்றும் நேரத்திற்கு சாப்பிட இயலாமை இருக்கும்.
கார்த்திகை, பூரம் , மூலம், ரேவதி
சந்தோஷமான நிகழ்வுகள் , வாய்க்கு ருசியான விருந்துகள் கிடைக்கும்.
ரோகிணி, உத்திரம், பூராடம்.
பொன் பொருள் நகை பண சேர்க்கை உண்டு.
பரணி , மிருகசிரிசம் , அஸ்தம் , உத்திராடம்.
சண்டைகள் கலகங்கள் மனஸ்தாபங்கள் ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
திருவாதிரை , சித்திரை , திருவோணம்.
காரிய தடைகள் மற்றும் அலைச்சல்கள் எற்படலாம். ஏதேனும் துக்க செய்திகள் கேட்க நேரிடலாம்.
சென்ற கார்த்திகை மாத பலனுக்கு ......
No comments:
Post a Comment