Thursday, 14 October 2021

தார தோஷம் - சிறந்த பரிகாரம்.!!

திருமணம் நடக்காமல் தடை எற்படுபவர்களும் , கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு உள்ளவர்களும், சரியான தாம்த்ய வாழ்க்கை இல்லாதவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். பரிகாரம் செய்யும் இடம் - ஸ்ரீ ரங்கம் சென்று ஸ்ரீ அரங்க நாதருக்கு எதிரில் அம்மா மண்டபம் அருகில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 - 5.30 மணிக்குள் பிரம்ம முகூர்த்ததில் செய்து விட வேண்டும்.


தேவையான பொருள்கள்:

1) பரிகார தாலி ( மஞ்சள் கயிற்றில் கட்டி வைக்கவும் )

2 ) பச்சரிசி 200 கிராம் 

3 ) மல்லிகை பூ 1 முழம் 

4 ) குங்குமம் 1 பாக்கெட் 

5 ) மஞ்சள் 1 பாக்கெட் 

6 ) வெற்றிலை பாக்கு 1 செட் 

7 ) வாழைபழம் 1 செட் 

8 ) வளையல் 1 செட் 

9 ) சிறிய மஞ்சள் துண்டு ( வஸ்திரம் அணிய ) 

1௦ ) வாழை இலை 1 

11 ) மிளகு 50 கிராம் 

12) காணிக்கை ரூபாய் 10 

13 ) புதிய வஸ்திரம் ( துணி - குளித்தபின்பு உடுத்த ) 

காவிரி ஆற்றின் ஓரத்தில் வாழை இலையை நுனியை வடக்கு நோக்கி போட்டு, அந்த இலையில் மேலே கண்ட பொருள்களை எல்லாம் வைத்து, கிழக்கு முகமாக நின்று, என் ஜாதகத்தில் கிரக தோஷங்களால் ஏற்படும் எல்லா வித களத்திர தோஷமும் இன்று முதல் விலகி விட வேண்டும். இனி மேல் எனக்கு நல்ல களத்திரம் ஏற்பட்டு நல்ல மன வாழ்க்கை , மாங்கல்ய பாக்கியம் , மகப்பேறு அனைத்தும் பெற்று வளமுடன் வாழ என்னை ஆசிர்வதிக்க வேண்டும் என்று வேண்டி தியானித்து , மஞ்சள் கயிற்றில் உள்ள தாலியில் சிறிது பச்சரிசி , மிளகாய் போட்டு ஆசிர்வதித்து சிறுது மல்லிகை பூவை தாலியில் வைத்து , பெண்ணாக இருந்தால் கழுத்தில் கட்டிக்கொள்ளவும். ஆணாக இருந்தால் இடுப்பில் கட்டிக்கொள்ளவும். 

பிறகு இரண்டு கைகளையும் ஏந்தி பரிகார பொருள்களை வாழை எடுத்து கொள்ளவும். துணைக்கு ஒருவரை கூட்டிக்கொண்டு அவரிடம் நீங்கள் உடுத்திக்கொள்ள புது வஸ்திரம் கொடுத்து இருவரும் ஆற்றில் இறங்கி கிழக்கு முகமாக நின்று இறைவனை வேண்டி எனக்குள்ள களத்திர தோஷம் இன்றோடு நீங்கி விட வேண்டும் என்று 3 முறை கூறி தோஷப் பொருள்களை ஓடும் ஆற்று நீரில் விட்டு விட வேண்டும்.  நீங்கள் ஆற்று நீரில் 3 முறை மூழ்கி எழுந்திருக்க வேண்டும். 3 வது முறை எழுந்தவுடன் பக்கத்தில் இருப்பவர் நீங்கள் கட்டியிருந்த தாலியையும் , உடுத்தி இருந்த  துணியையும் ஓடும் நீரில் அவிழ்த்து விட்டு விடவும். 

அவை நீரில் அடித்து செல்லப்பட வேண்டும். உங்கள் உடம்பில் வேறு எந்த பழைய பொருள்களும் இருக்க கூடாது. இப்போது நீங்கள் புண்ணிய நதியிலிருந்து புதுபிறவி எடுக்கிறீர்கள் என்று அர்த்தம். அதன் பின் பக்கத்தில் இருக்கும் புது துணியை வாங்கி உடுத்திக்கொண்டு கரை ஏறி , கரையில்  ஒரு சூடத்தை கொளுத்தி தொட்டு கும்பிட்டுவிட்டு , நேரடியாக கோவிலுக்கு வந்து 6 முதல் 7 மணிக்குள் சுக்கிர ஓரையில் ஒரு அர்ச்சனை தட்டு வாங்கி அதில் ஒரு மாதுளை பழம் வாங்கி வைத்து அர்ச்சனை செய்து ரெங்க நாதரையும் , தாயாரையும் , ஸ்ரீ ராமானுஜரையும் நெய் தீபம் ஏற்றி வழிபடவும். 

அர்ச்சனை செய்ய இயலவில்லை எனில் மாதுளம் பழத்தை சுவாமி காலடியில் வைத்து வணங்கி எடுத்துக் கொள்ளலாம். அதன் பின் வேறு கோவிலுக்கு செல்லாமல் நேரடியாக உங்கள் வீட்டிற்கு வந்து வெள்ளி இரவு 8 முதல் 9 மணிக்கு சுக்கிர ஹோரையில் உங்கள் வீட்டு பூஜை அறையில் அந்த பழத்தை வைத்து வணங்கி, ஒரு சுமங்கலி பெண் ஒருவர் அந்த பழத்தை அறுத்து உங்களுக்கு ஊட்டி விட வேண்டும். அதை நீங்கள் ருசித்து சாப்பிட அந்த பழம் இனிப்பது போல உங்கள் மண வாழ்க்கையும் இனிப்பாக இருக்கும். 

உங்களுக்கு பழம் ஊட்டிய சுமங்கலி பெண்ணிற்கு தாம்பூலம் தட்சிணை துணிமணிகள் வைத்து அவர்களுக்கு கொடுத்து அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி பரிகாரத்தை நிறைவு செய்ய வேண்டும்.


குறிப்பு: 

பரிகாரத்துக்கு புறப்படும் முன் உங்கள் குலதெய்வத்திற்கு காணிக்கை முடிந்து போட்டு விடவும். இது ஒரு சிறப்பான களத்திர தோஷ பரிகாரம். நல்ல தோஷ நிவர்த்தி ஏற்படும். 


Whatsapp மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....


Facebook மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....

No comments:

Post a Comment