Saturday, 17 July 2021

சுக்கிரன் - பெயர்ச்சி பலன்கள் 2021

( 18.07.2021 முதல் 12.08.2021 வரை.... )

மேஷம் :

பணவரவு , புதிய நட்பு / உறவுகள் ஏற்படுதல். ஆன்மீக பயணங்கள் ஏற்படுதல். மனைவி குழந்தைகள் ஆதரவு கிடைத்தல். நண்பர்கள் / உறவுகள் மூலம் நன்மைகள் ஏற்படுதல். குழந்தை அமைப்பு ஏற்படுதல். 

ரிஷபம் :

பிரிந்த உறவுகள் சேர்க்கை ஏற்படுதல். சொந்த பந்தங்களை சந்தித்தல். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுதல். வீடு வாகனங்கள் மூலம் லாபம் பெறுதல்.

மிதுனம்  :

புதிய நபர்களிடம் கவனம் தேவை. உடல் நல முன்னேற்றம் ஏற்படுதல், குழந்தை அமைப்பு ஏற்படுதல், புதிய பதவி ஏற்படுதல், மன மகிழ்ச்சி ஏற்படுதல். எதிரிகளை வெல்லுதல். 

கடகம் :

பண வரவு ஏற்படுதல், மதிப்பு மரியாதை ஏற்படுதல். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுதல். 

சிம்மம் :

புதிய பொன் பொருள் வாங்குதல். கணவன் / மனைவி  உடல் நிலை பாதிப்பு ஏற்படுதல். பணம் சமந்தமாக பிரட்சணைகள் ஏற்படுதல். 

கன்னி :

பண வரவு ஏற்படுதல். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படுதல். திருமண வாய்ப்பு ஏற்படுதல். பெண்களுக்கு ஆண்களால் பிரட்சனை ஏற்படுதல். ஆண்கள் மூலம் செலவுகள் ஏற்படலாம். கெட்ட பெயர் உண்டாதல். கணவன் / மனைவி உறவு மற்றும் காதல் விஷயங்களில் மகிழ்ச்சி ஏற்படும். 

துலாம் :

பண வரவு, புதிய நட்புகள் கிடைத்தல். நண்பர்கள்/ உடன் பிறந்தோர் ஆதரவு. வாய்க்கு ருசியான விருந்துகள் கிடைக்கும். 

விருச்சிகம் :

ஆண்களுக்கு பெண்கள் மூலமாகவும், பெண்களுக்கு ஆண்கள் மூலமாகவும் சண்டைகள் சச்சரவுகள் அவமானங்கள் ஏற்படலாம். வீண் விவாதங்கள் மற்றும் விமர்சனங்களை தவிர்க்கவும். பிடிவாத  குணம் ஏற்படும். விட்டு கொடுத்து செல்வது நல்லது. எதிரிகள் செயல் நன்மையில் முடியலாம்.

தனுசு :

பண வரவு, கணவன் / மனைவி உறவில் மகிழ்ச்சி, காதல் கை கூடுதல். செய்தொழில் லாபங்கள் ஏற்படும்.

மகரம் :

கணவன் / மனைவி உறவில் மகிழ்ச்சி, காதல் கை கூடுதல். முன்னேற்றம் ஏற்படுதல். வேண்டா வெறுப்பாக செய்யும் காரியங்களில் நன்மைகள் ஏற்படும். 

கும்பம் :

ஆண்களுக்கு பெண்களாலும் பெண்களுக்கு ஆண்களாலும் தொல்லைகள் பிரட்சணைகள் ஏற்படலாம். கணவன் / மனைவி உறவில் சண்டைகள் ஏற்படலாம். வீண் கோபத்தை விடுத்து பொறுமை கடைபிடிக்கவும். உறவுகளுடன் சண்டை சச்சரவுகள் ஏற்படலாம். விவாதங்களை தவிர்க்கவும். செய் தொழிலில் லாபங்கள் ஏற்படும்.

மீனம் :

காரிய தடைகள் ஏற்படலாம். அம்மன் வழிபாடு சிறப்பு.  அவமானங்கள் ஏற்படலாம். விவாதங்களை தவிர்ப்பது நலம். நண்பர்கள் எதிரிகளாக மாறலாம். கவனம் தேவை. உறவுகளுடன் சண்டைகள் ஏற்படலாம். உடல் நலத்தில் கவனம் தேவை. கடன் பிரச்சினை ஏற்படலாம். பண விஷயத்தில் கவனம். 

ஆவணி மாதம் பிறந்தவர்கள் :

தந்தைக்கு பண வரவுகள் ஏற்படும்.


Whatsapp மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....


Facebook மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....

No comments:

Post a Comment