Friday, 16 July 2021

ஆடி மாதம் - 2021 பலன்கள்.

ஆடி மாத பலன்கள்.!!

( 17.07.2021 முதல் 16.08.2021 வரை )

சூரியன், சுக்ரன், செவ்வாய் கடகராசியில் சஞ்சரிக்க மாதம் தொடங்குகிறது. வியாபாரம், தொழில் பாதிக்கப்படக்கூடும். விலைவாசி உயரும். ராகுவின் ரிஷபராசி சஞ்சாரத்தால் வன்முறை, அராஜகம், மதக்கலவரம் அதிகரிக்கும். கேதுவின் விருச்சிக சஞ்சாரத்தால் நோய் பரவும். சுற்றுலாத்துறை பாதிக்கப்படும். 

ஜூலை 20-ல் செவ்வாய் சிம்மத்திற்குச் செல்கிறார். குருவும். செவ்வாயும் ஒருவருக்கொருவர் ஏழாவது ராசியில் உலவிடுகின்றனர். அனாவ்ருஷ்டி, சுக்ரன் ஜூலை 17 முதல் -27 ஜூலை வரை மகத்தில் உலவிடுகிறார். கால்நடைகளுக்கு நோய் தோன்றும். 

புதன் ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 8 வரை ஆயில்யத்தில் சஞ்சரிப்பார். நல்ல மழையுண்டு. ஆகஸ்ட் 9 வரை சரிவை சந்திக்கும் பங்குச் சந்தை அதன் பின்னர் உயரும். பத்திரிகைத் துறையில் இழப்பு ஏற்படக்கூடும். விளைச்சல் நன்றாக இருக்கும்.

மழை :

ஜூலை: 16-20. 21(கடல் சீற்றம்) 22, 24-26, 29, 30, 31,

ஆகஸ்ட் : 1-3, 5, 7-9, 11-12, 14

- பராசரம் பாலசுப்பிரமணியம் ( பஞ்சாங்க கணிதர் )

நட்சத்திர பலன்கள் 


பூசம் மூலம் ரேவதி 

உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம். உடல் நலத்தில் கவனம் தேவை. 


அஸ்வினி ஆயில்யம் பூராடம்   

லாபகரமான செயல்கள் நடைபெறும். பண வரவு இருக்கும். 


பரணி மகம் உத்திராடம்  

அதிக செலவுகள் ஏற்படும். பண விசயத்தில் கவனம் தேவை. 


கார்த்திகை பூரம் திருவோணம்  

அலைச்சல்கள் மற்றும் நேரத்திற்கு சாப்பிட இயலாமை இருக்கும்.


ரோகிணி உத்திரம் சுவாதி அவிட்டம் 

சந்தோஷமான நிகழ்வுகள் , வாய்க்கு ருசியான விருந்துகள் கிடைக்கும்.


மிருகசிரிசம் அஸ்தம் விசாகம் சதயம்   

பொன் பொருள் நகை பண சேர்க்கை உண்டு.


திருவாதிரை சித்திரை அனுஷம் பூரட்டாதி  

சண்டைகள் கலகங்கள் மனஸ்தாபங்கள் ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். 


புனர்பூசம் கேட்டை உத்திரட்டாதி   

காரிய தடைகள் மற்றும் அலைச்சல்கள் எற்படலாம்.  ஏதேனும் துக்க செய்திகள் கேட்க நேரிடலாம். 


Whatsapp மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....


Facebook மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....

No comments:

Post a Comment