( 16.06.2021 முதல் 14.09.2021 வரை )
மேஷம் :
வேலையில் பிரச்சனை இருக்கும். வேலை பளு அதிகமாக இருக்கலாம். அல்லது வேலை செய்யும் இடத்தில் தொந்தரவுகள் இருக்கலாம். பண தட்டுப்பாடு ஏற்படும். உடல்நல பாதிப்புகள் ஏற்படும். விரயங்கள் ஏற்படும். பெற்றோர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படலாம். பணத்திற்காக அலைய நேரிடும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். எடுக்கும் தவறான முடிவுகளால் செயல்களால் பிரச்னைகள் ஏற்படும்.
ரிஷபம் :
பண வரவு ஏற்படும். முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். புதுமையான எண்ணங்கள் சிந்தனைகள் தோன்றும். நல்ல வேலை கிடைக்கும். குழந்தை அமைப்பு ஏற்படும். செய்யும் காரியங்களில் வெற்றி ஏற்படும். இடம் நிலம் வாங்குதல் ஏற்படும். திருமண அமைப்பு ஏற்படும். உயர் கல்வி பயிலலாம். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும் கடன்கள் தீரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வெளிநாட்டில் வேலை ஏற்படும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். சம்பள உயர்வு பதவி உயர்வு ஏற்படும்.
மிதுனம் :
அரசு வழியில் பிரட்சணைகள் ஏற்படும். பண விரயங்கள் ஏற்படும். இடமாற்றம் ஏற்படலாம். உடல் நல பாதிப்புகள் ஏற்படும். வண்டி வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வேலையில் பிரச்சனை ஏற்படும். பயணங்களில் பிரச்சினைகள் ஏற்படும். டென்ஷன் அதிகமாகும். புதிய நட்பில் கவனம் தேவை.
கடகம் :
பண வரவு ஏற்படும். திருமண வாய்ப்புகள் கூடி வரும். புகழ் ஏற்படும். குழந்தை அமைப்பு ஏற்படும். புதிய தொழில் அமையும். தொழில் சிறப்படையும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். கடன்கள் தீரும்.
சிம்மம் :
அரசு வழியில் பிரச்சனை ஏற்படும். மன குழப்பம் மன பயம் ஏற்படும். சண்டை சச்சரவுகள் ஏற்படும். உடல் நல பாதிப்புகள் ஏற்படும். இடமாற்றம் ஏற்படலாம். சிலருக்கு பொருள்கள் களவு போகலாம். விஷ பூச்சிகளிடம் கவனம் தேவை. செய்யாத தவறுக்கு தண்டனை ஏற்படலாம். கணவன்/ மனைவி எதிரியாக மாறலாம். உடல் பாதிப்பு ஏற்படும். நண்பர்களிடம் தகராறு. வெளியூர் அல்லது வெளி நாட்டில் வேலை வாய்ப்பு ஏற்படும். அலைச்சல்கள் அதிகமாகும். விரயங்கள் ஏற்படும். பயணங்களில் பிரச்சனைகள் ஏற்படலாம்.
கன்னி :
பண வரவு ஏற்படும். திருமண வாய்ப்புகள் கூடி வரும். குழந்தை அமைப்பு ஏற்படும். வீட்டில் சுபகாரியங்கள் ஏற்படும். புதிய வீடு கட்டுதல் அல்லது வாங்குதல். புதிய தொழில் ஆரம்பிக்கலாம். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். பூர்வீக சொத்தில் வில்லங்கம் இருந்தால் அது அகலும்.
துலாம் :
உறவினர்கள் மற்றும் உடன் பிறந்தவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படுதல். உடல் நல பாதிப்புகள் ஏற்படுதல். யாருடனும் பேச பிடிக்காது.வீண் பழி உண்டாகும். தனிமையை உணருவீர்கள். போட்டி பந்தயம் சூதாட்டம் போன்றவற்றால் பண விரயங்கள் ஏற்படும். நண்பர்கள்/ உறவுகள் எதிரியாக மாறலாம். நேரத்துக்கு சாப்பிட இயலாமை இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகலாம். உடல் நிலையில் கவனம் தேவை. ஒரு சொத்தை விற்று இன்னொரு சொத்து வாங்கலாம். வண்டி வாகனங்கள் பழுது பார்க்கலாம். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். தொலைந்து போன பொருள் கிடைக்கும். புதிய நட்பு கிடைக்கும்.
விருச்சிகம்:
வேலை மாற்றம் ஏற்படலாம். முயற்சிகளுக்கு தடை ஏற்படும். சிலருக்கு பொருள்கள் களவு போகலாம். உடல்நல பாதிப்பு குறித்து பயம் ஏற்படும். வண்டி வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வீண் பழி ஏற்படும். அலைச்சல்கள் உண்டாகும். தேவையற்ற சிந்தனைகள் ஏற்படும். பண தட்டுப்பாடு ஏற்படும். தாயார் உடல்நிலை பாதிப்பு ஏற்படும். அடிக்கடி பயணங்கள் ஏற்படும். தந்தை வழி சொத்துக்களில் பிரச்சனைகள் இருந்தால் பிரச்சனை சுமூகமாக முடிவுக்கு வரும். சகோதரர்களின் ஆதரவு ஏற்படும். திருமண முயற்சிகளில் நல்ல செய்திகள் கிடைக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து இட வேண்டாம். முகம் தெரியாத நபர்களால்/ புதிய உறவால் மனமகிழ்ச்சி ஏற்படும்
தனுசு:
பண வரவு ஏற்படும். எதிரிகளை வெல்வீர்கள். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை ஏற்படும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். குழந்தை அமைப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வண்டி வாகனங்கள் வாங்கலாம். கடன் பிரச்சினைகள் தீரும். எதிரிகள் தொல்லைகள் அகலும்
மகரம் :
கணவன் / மனைவி உறவுகளை விட்டு விலகி இருத்தல். வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேர்வதில் தடை தாமதம் ஏற்படுதல். வேலையில் பிரச்சனை ஏற்படுதல். வீண் கவலைகள் ஏற்படுதல். தொழிலில் விருப்பமில்லாத இடமாற்றம் ஏற்படலாம். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைத்தல். சொத்து பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். குழந்தை அமைப்பு ஏற்படும் பிள்ளைகளால் பெருமை ஏற்படும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். பண விரயம் ஏற்படும். அரசு வழியில் பிரட்சணைகள் ஏற்படும். இடமாற்றம் ஏற்படும். சோம்பேறித்தனம் ஏற்படும். சண்டை சச்சரவுகள் ஏற்படும்.
கும்பம் :
பண விரயம் ஏற்படும். உடல் நல பாதிப்புகள் ஏற்படும். வண்டி வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. இட மாற்றம் ஏற்படும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். தவறான வழியில் செல்ல நேரலாம். கவனமாக முடிவெடுக்க வேண்டும். அரசு வழியில் தொல்லைகள் ஏற்படும். உடல்நல பாதிப்புகள் ஏற்படும் .பெண்களால் தொல்லை ஏற்படும். சிலருடன் மோதல்கள் ஏற்படலாம். கூட பிறந்தவருடன் மனக்கசப்பு ஏற்படும். உடல் நலம் குறித்து மன பயம் ஏற்படும்.
மீனம் :
பண வரவு ஏற்படும். தொழில் சிறப்பு ஏற்படும். நினைத்தது நடக்கும். இழந்த வேலை மீண்டும் கிடைக்கும். குழந்தை அமைப்பு ஏற்படும். உடல் நலம் முன்னேற்றம் ஏற்படும். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். அரசு வழியிலும் ஆதரவு கிடைக்கும். உறவுகளுடன் நல்லுறவு ஏற்படும். வெளிநாடு பயணங்கள் ஏற்படும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். பழைய கடன்கள் வசூலாகும். சகோதர ஒற்றுமை மேலோங்கும். ஆன்மிக பயணங்கள் சுற்றுலா ஏற்படும். கணவன் மனைவி உறவு வலுப்படும்.
தை மாதம் பிறந்தவர்கள்:
பதவி உயர்வு கிட்டும். அரசு வேலை முயற்சிப்பவர்களுக்கு அரசு வேலை கிட்டும். பெயர் புகழ் கௌரவங்கள் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்,. ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். ஆண் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது.
பின் குறிப்பு:
கோச்சார பலன்கள் 30% மட்டுமே வேலை செய்யும். உங்கள் ஜாதகத்தில் நடப்பு திசா புத்தி பலன்கள்தான் 70% வேலை செய்யும்.
- உங்கள் நடப்பு திசா புத்தி நன்றாக இருந்து, கோச்சார பலன்களும் நன்றாக இருந்தால், உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி ராஜ யோகம் தான்.
- உங்கள் நடப்பு திசா புத்தி மோசமாக இருந்து, கோச்சார பலன்கள் நன்றாக இருந்தால், வரும் பிரச்சனைகள் சமாளிக்கும்படியும் மீண்டு வருவது போலவும் இருக்கும்.
- உங்கள் நடப்பு திசா புத்தியும் மோசமாக இருந்து, கோச்சார பலன்களும் மோசமாக இருப்பவர்கள் மட்டும், மிக கவனமாக இருக்க வேண்டும்.
Whatsapp மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....
No comments:
Post a Comment