Monday, 31 May 2021

மிதுனம் - ராசி / லக்கினம் குணங்கள்.!!

 மிதுன ராசி/ இலக்கின குணங்கள்.!!

இவர்கள் மாநிற தோற்றமுடையவர்கள். எப்போதும் சிரித்து பேசி ஜாலியாக இருக்க நினைக்கும் ஒரு பிறவி. கலை ஆர்வம் கொண்டவர்கள். காமத்தில் அதிக நாட்டம் உடையவர். நல்ல கம்பீரமான தோற்றம் இருக்கும். சூது நிறைந்தவர். மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம் இருக்கும். 

பல கோவில் குளம் என சுற்றினாலும் எதையும் அறியியல் ரீதியாக அணுக கூடியவர். 

வாழ்க்கையில் முற்பகுதியில் மிகுந்த கஷ்டங்கள் , பிரச்சனைகளை சந்தித்து இருப்பீர்கள். 32 வயதிற்கு மேல் வாழ்வில் முன்னேற்றம் இருக்கும். பல வசதிகள் சுக போக வாழ்க்கை அமையும். 

மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் இருக்கும். புகழ்ச்சிக்கு ஏங்குபவர். மயங்குபவர். 

ருசியாக சாப்பிட விருப்பம் இருக்கும். அரசு மற்றும் சமுதாயத்தில் நல்ல பேர் இருக்கும். 

நுரையிரல் மார்பு சமந்த்தபட்ட நோய்கள் ஏற்படலாம். 

குடும்ப வழியில் பல தொல்லைகள் இருக்கும். 

எதையும் எளிதில் கற்றுகொள்வீர்கள்.  பலதரப்பட்ட வேலைகளை ஒரே நேரத்தில் செய்யக்கூடியவர். அதுதான் உங்களிடம் இருக்கும் குறையாகவும் சொல்லலாம், 

இரவில் அதிக நேரம் கண் விழிக்கும் பழக்கம் அல்லது அதிகாலையில் எழும் பழக்கம் இருக்கலாம். எதிலுமே ஒரு குறுக்கு வழியை தேடுபவர்கள். 

ஜோதிடதில் ஆர்வம் இருக்கும். ஆசிரியர் சினிமா கார்டுனிஸ்ட்' சங்கீதம் போன்ற துறைகளில் பணி அமையலாம். பொதுவாக உடல் உழைப்பு இன்றி புத்தியை உபயோகப்படுத்தும் தொழில் அமையும். 

இனிமையாக பேசி மற்றவர்களை வசப்படுத்துவார்கள். வாழ்க்கை துணை பேச்சை அதிகம் கேட்பார்கள். நிலையான புத்தி இருக்காது. சுயநல வாதியும் கூட.... எதிரிகளை நேரடியாக தாக்காமல் மறைமுகமாக தாக்குவார்கள்.

எதிர்பாலினத்தினரிடம் அதிக நாட்டம் உடையவர்கள். வீம்புக்கு அதிக பணம் செலவு செய்பவர்கள். பணத்தை விட புரட்சி தான் இவர்களுக்கு முக்கியம். 


 

Whatsapp மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....


Facebook மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....

No comments:

Post a Comment