Sunday, 15 November 2020

விடை கொடு மனமே....பகுதி -1

 வணக்கம்.

என்னுடைய பெயர் நர்மதா. எனக்கு திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகிறது. ஒரு ஆண் குழந்தை உள்ளது. எனது கணவர் கடந்த ஒரு வருடமாக வீட்டிற்கே வருவது இல்லை. அவரது அண்ணன் வீட்டில் இருக்கிறார். அவருக்கு ஒரு தோட்டம் உள்ளது. அங்கு ஒரு குடிசை போட்டு 3 வேளை சாப்பிட்டு தூங்குவது மட்டுமே வேலையாக செய்து வருகிறார்.


மனைவி குழந்தை என்று ஒரு அக்கறை எண்ணம் இல்லை. அது கூட பரவாயில்லை. வேலைக்கு செல்ல வேண்டும் சம்பாதிக்க வேண்டும் வாழ்க்கையில் ஏதாவது பண்ண வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாமல் இருக்கிறார்.


அவருக்கும் அவரது அண்ணிக்கும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகமும் உள்ளது. 


நிறைய ஜோதிடம் மாந்திரிகம் வசியம் என்று செலவு செய்து ஏமாந்தது தான் மிச்சம். அவருக்கு யாரேனும் செய்வினை வைத்து இருப்பார்களா என்றும் தோன்றுகிறது.


அவரை என்ன செய்வது எப்படி திருத்துவது என் எதிர்காலத்தை நினைத்து பயமாக உள்ளது. 


Msc பட்டதாரி என்று பொய் சொல்லி என்னை ஏமாற்றி திருமணம் செய்து விட்டார். அவர் படிக்கவும் இல்லை வேலையும் இல்லை என்பது எனக்கு பின்னாளில் தான் தெரிய வந்தது.


எனது தந்தை அவருக்கு ஒரு வேலை வாங்கி தந்தாலும், அதற்கும் செல்ல மாட்டேன் என்று இருக்கிறார். 


இவரால் மிகுந்த மன உளைச்சலும் நிம்மதியும் இல்லாமல் இருக்கிறேன். 


- நர்மதா

  திருச்சி


உங்கள் பிரச்சினைகளுக்கும் தீர்வு மற்றும் ஆலோசனை பெற வேண்டுவோர்

agasthesha.solutions@gmail.com

என்ற முகவரிக்கு எழுதி அனுப்புங்கள்.

1 comment:

  1. தங்களின் கல்வி தகுதி என்ன?

    ReplyDelete