Saturday, 2 May 2020

திருமண தடை நீங்க எளிய பரிகாரம்.!!

கிரகங்கள் தான் திருமணத்திற்கு தடையாக இருக்கிறது என்று எண்ணிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் உண்மையில் எண்ணங்கள் தான் திருமணத்திற்கு தடையாக இருக்கும்.

திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது வேறு விஷயம். திருமணமே ஆகாமல் இருக்க காரணங்கள் இவை.

ஒருவர் கல்யாணம் பண்ணனும் னு நினைச்சுட்டா யாரோ ஒருத்தரை உடனே பண்ண முடியும்.
பண்ண கூடாது னு நினைச்சுட்டா எத்தனை பேரு வந்தாலும் கல்யாணம் நடக்காது.

சரி. எண்ணங்கள் எவ்வாறு தடையாக இருக்கிறது.


ஒருவருக்கு தன் தகுதியை விட, குறைவான தோற்றத்தில் முதிர்ந்த வரன் அமையும் என்று இருக்கும். ஆனால் அவர்கள் வசதியான அழகான வரன் தேடி கொண்டு இருப்பார்கள்.

சிலருக்கு சொந்தத்தில் இருக்கும். அசலில் தேடிக்கொண்டு இருப்பார்கள். சிலருக்கு வேறு ஜாதி னு இருக்கும். சொந்தத்தில் தேடி கொண்டு இருப்பார்கள்.

சிலருக்கு அப்பா அம்மா சம்மதம் இல்லாமல் திருமணம் நடக்கும் என்று இருக்கும். அவர்கள் அப்பா அம்மா சமதத்தோடு பண்ண வேண்டும் என்று இருப்பார்கள்.

சிலருக்கு இரண்டாம் தாரம் என்று இருக்கும். முதல் தாரமாக போக வேண்டும் என்று இருப்பார்கள்.

இன்னும் சிலருக்கு முடிவு எடுக்க தெரியாது. யோசிச்சு யோசிச்சே காலம் தாழ்த்துவார்கள்.

சிலர் அளவுக்கு அதிகமாக கற்பனை செய்வார்கள். நாத்தனார் முதற்கொண்டு இப்படி தான் இருக்க வேண்டும் எனும் அளவுக்கு எதிர்பார்புகள் இருக்கும்.

நல்ல குடும்பம் கிடைத்து ஜாதகம் பொருந்தி வருவதே பெரிய விஷயம். இதில் நாத்தனார் அளவுக்கு லாம் யோசிச்சா எப்படி.

ஒரு ஜாதகருக்கு திருமண வாழ்க்கை  கிடையாது என்று அமைப்பு பலருக்கு இருக்கும். விவாகரத்து செய்வார்கள். ஆனால் திருமணமே ஆகாது என்ற அளவுக்கு லாம் அமைப்புகள் மிக மிக மிக குறைவு.

எனவே திருமண தடை என்றால் மாற்ற வேண்டியது உங்கள் எண்ணங்களை மட்டும் தான்.
நீங்கள் உங்கள் எண்ணங்களை அனுசரித்து கொள்ளுவதே பரிகாரமாகும்.


Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.




No comments:

Post a Comment