Saturday, 9 May 2020

கனவுகளும் அதன் காரணங்களும் பலன்களும்.!!

நீங்க எல்லாரும் சந்திரமுகி படம் பார்த்து இருப்பீங்க. அது பேய் படமா இல்லை உளவியல் படமா னு கேட்டா, பேய் படம் னு நினைச்சு பார்த்தா பேய் படம், உளவியல் படம் னு நினைச்சு பார்த்தா உளவியல் படம் என்று தான் பதில் சொல்ல முடியும்.

கனவுகளும் அது மாதிரி தான். உங்கள் அடி மனது எண்ணங்கள் ஆசைகள் தான் கணவவாக வரும்.

ஒரு 8 வயசு பையன் கனவுல என்ன வரும். அவன் பார்த்த கார்ட்டூன் தான் வரும்.
16 வயசு பையன் கனவுல என்ன வரும். நயன்தாரா தான் வருவாள்.

நம்ம அடி மனசுல எதுக்கு ஏங்குறமோ, எதுக்கு பயப்படுறமோ, எதுக்கு ஆசை படுறமோ அது தான் கனவாக வரும்.

உதாரணமாக ஏதோ பரீட்சை result க்கு பயப்படுறீங்க...அல்லது court case னு எதுக்கோ பயப்படுறீங்க. அப்போ உங்க கனவுல என்ன வரும்.

ஏதோ நாய் துரத்துறது மாதிரி, பாம்பு துரத்துறது மாதிரி, போலீஸ் துரத்துர மாதிரி கனவு வரும். அதாவது உங்களை நிஜத்தில் துரத்தும் பிரச்சனை கனவில் நாயாக பாம்பாக போலீசாக வரும்.

அந்த காலத்து பக்தி படங்களை பார்த்திங்க னா... ஒரு பக்தர் இருப்பார். அவர் கனவில் ஒரு கடவுள் வந்து ஏதோ சொல்லிட்டு போகுற மாதிரி காட்சி இருக்கும்.

கிட்டத்தட்ட இதுவும் சந்திரமுகி கதை மாதிரி தான். அந்த பக்தி படங்களை லாம் பார்த்து, நம்ம கனவிலும் கடவுள் வந்து ஏதோ சொல்றார் னு நினைச்சுகிறது தான்.

பெரிய பிரச்சனையில் இருப்பவர்கள் தூங்குறதுக்கு முன்னாடி எனக்கு ஏன் கடவுளே இவ்ளோ கஷ்டம் னு புலம்பிட்டு தூங்குவாங்க. அப்போ கனவுல அந்த கடவுள் வந்த மாதிரி ஒரு பிரம்மை ஏற்படும்.

நிறைய பேரு கனவுல அதை கண்டேன் இதை கண்டேன். அப்படி ஆகிருமோ இப்படி ஆகிருமோ னு பயப்படுறாங்க. இன்னும் சில பேரு கடவுள் வந்ததாக நினைச்சுகிறாங்க. சிலர் பெருமைக்காக 10 sec கனவை 1 மணி நேரத்துக்கு கதையாக கடவுள் அது இது னு அடிச்சு விடுவாங்க.


எல்லாமே உங்கள் அடி மனசு எண்ணங்கள் தான். இதை நினைச்சு பயப்படவோ, இல்லை சந்தோசப்படவோ ஒன்னும் இல்லை.

அப்போ கடவுளுக்கும் மனுசனுக்கும் எந்த தொடர்பும் இல்லையா. மனிதன் கடவுளை உணரவே முடியாது. கடவுள் மனிதனை தொடர்பு கொள்ளவே மாட்டாரா.... என்று கேட்டால்......

நிச்சயம் தொடர்பு இருக்கிறது. கடவுள் தொடர்பு கொண்டு பல விஷயங்களை உணர்த்திக்கொண்டு இருக்கிறார்.

// நீங்கள் எதையெல்லாம் தீண்ட தகாதவை தாழ்த்தப்பட்டவை அசிங்கம் அருவருப்பு என்று எண்ணுகிறீர்களோ அந்த வடிவிலயே கடவுள் காட்சி அளிப்பார்.

எந்த உள்ளத்தில் தீண்ட தகாதவை தாழ்த்தப்பட்டவை அசிங்கம் அருவருப்பு என்ற எண்ணம் இல்லையோ...அந்த உள்ளத்தில் கடவுள் குடி இருக்கிறார். //

உலகில் அருவருப்பாக பார்க்கப்படும் விலங்கு பன்றி. அந்த பன்றி உருவத்தில் கடவுள் அவதாரம் எடுத்து உள்ளார். அது தான் வராகம்.

விஷ்ணு பகவான் வராக அவதாரம் எடுத்து உலகை காத்தார்.
ஹனுமன் வராக அவதாரம் எடுத்தார்.
வராகி அம்மன் உள்ளது.

// இந்த உலகில் எதையுமே இழிவாக எண்ண கூடாது என்று உணர்த்தவே இந்த அவதாரங்கள்.//

நீங்கள் கடவுளுக்கு படைக்க பொங்கல் வைத்து கோவிலுக்கு செல்கிறீர்கள். வழியில் ஒரு குஷ்டரோகி வந்து பிச்சை கேட்பார். அது தான் கடவுள்.

மனிதன் கடவுளை அலங்கரிக்கிறான். ஆனால் கடவுள் என்றுமே அலங்காரத்துடன் மனிதனுக்கு காட்சி தருவதே இல்லை.

இதை உணர்ந்தவர்கள் யாரோ அவர்களே கடவுளை கண்டவராவர். கடவுளுடன் பேசியவர் ஆவர். அவர்களுக்கே கடவுள் காட்சி அளிக்கிறார்.

கனவுகளை தூங்க வைத்து விட்டு, ஞான கண்ணை விழிக்க செய்யுங்கள். கடவுளின் தரிசனமும் அருளும் கிடைக்கும்.!!

ஜெய் ஸ்ரீராம்.


Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.



No comments:

Post a Comment