Saturday, 7 March 2020

மாந்தி என்பர் யார்.?? என்னவிதமான பலன்களை கொடுப்பார்.??

ஜாதகத்தில் மாந்தி கிரகம் மிக முக்கியமான ஒன்றாகும். கேரளாவில் இதற்கு முக்கியத்துவம் உண்டு. ஆனால் நம்மூரில் இதனை பெரிதாக பார்ப்பதும் இல்லை ஜாதகத்தில் குறிப்பது கூட இல்லை. பலர் ஜாதகத்தில் மாந்தி குறிக்கப்பட்டு இருக்காது.

ஒருவர் ஜாதகத்தில் பல நல்ல அமைப்புகள் இருக்கும். ஆனால் அவர் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பார். காரணம் மாந்தி. 

இப்போது மாந்தியின் முக்கியத்துவம் ஓரளவு புரிந்து இருக்கும். சரி மாந்தி என்பர் யார் எனும் புராண கதையை பார்ப்போம்.


இராமாயணத்தில் மாந்திக்கு ஒரு பங்கு உண்டு. அதிபலசாலியான இலங்கேஸ்வரன் ராவணன் எல்லா கிரகங்களையும் தன் கைக்குள் அடக்கவேண்டும் என்று நினைத்தான்.

அவனின் சிவ பக்தி; தவ வலிமையால் கிரகங்களை தன் வசம் கொண்டுவந்தான்.

இவனைவிட இவன் மகன் பலசாலியாகவும், ஆயுளோடும் இருக்க ஒரு சதி செய்தான். தன் மகன் இந்திரஜித் ஜெனிக்கும் சமயத்தில் சனியானவரை வரவழைத்து "என் மகன் ஜனனம் புரியும் நேரத்தில் அவன் ஜாதக கட்டத்தில் உன்னுடைய சிறந்த இடமான 11ல் இருக்கவேண்டும் என்று கட்டளை இட்டான்".

சனிக்கு 12ஆம் வீடுதான் மோசமான வீடு என்று ராவணனுக்குத் தெரியும். சனியானவர் கர்மாவை தராசு கொண்டு நடக்கும் ஒரு நீதிமான் வேறு வழியில்லாமல் சரி என்று ஒப்புக்கொண்டார்.

இந்திரஜித் பிறக்கும் நேரத்தில் 11ல் நின்ற சனி தன் ஒரு கால் 12ம் வீட்டின் கால் சென்றதாம். அதைப் பார்த்த இராவணன் கோபதால் தன் நீண்ட வாளால், சனியின் அந்தக் காலை வெட்டிவீழ்த்தினான். அதுவே மாந்தி ஆகும்.

இதனை வேறு விதமாகவும் சில புராண கதைகள் சொல்லும்.

உதாரணமாக மாந்தி என்பர் லக்கினத்தில் இருந்தால் அவருக்கு உடல் நல பாதிப்புகள் இருக்கும். யார் பேச்சுக்கும் கட்டுப்பட மாட்டார்.

8ல் இருந்தால் பரோட்டா சூரி மாதிரி அதிகமாக சாப்பிடுவார். ஆனால் ஒல்லியாக இருப்பார்.

3ல் இருந்தால் எல்லார் கூடயும் வாக்கு வாதம் சண்டை போடுவார்.

11ல் இருந்தால் அழகாக இருப்பார். எல்லாருக்கும் பிடித்தவர்.

12ல் இருந்தால் விரயங்கள் அதிகம் இருக்கும்.

இப்படி ஒவ்வொரு பாவத்திற்கும் ஒருவிதமான பலன்கள் உண்டு.



பரிகாரம் :

திருவாலங்காடு : வடாரண்யேஸ்வரர் கோவிலில்,  சனிக்கிழமை காலை நேரத்தில் மாந்தீஸ்வரர் பரிகார பூஜை செய்யலாம். அல்லது உங்கள் ஊர் அருகில் இருக்கும் சிவன் கோவில்களில் மாந்தி கிரகம் இருந்தால் , அங்கேயும் வழிபாடு செய்து வரலாம். 




Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.




No comments:

Post a Comment