Saturday, 7 March 2020

உங்களுக்கு எப்போது சந்திராஷ்டம தினம் வரும் என்று தெரியுமா ??

உங்கள் ராசிக்கு 8ம் இடத்திற்கு சந்திரன் வரும் தினம், உங்கள் நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரம் வரும் தினமே சந்திராஷ்டமம் ஆகும்.

பொதுவாக சந்திராஷ்டம நாள்களில் மன குழப்பம் இருக்கும். கோபம் சண்டை சச்சரவுகள் ஏற்படும். எரிச்சலான மன நிலைகள் இருக்கும். எனவே இந்த நாளில் முக்கிய முடிவுகள் எடுக்க கூடாது. பேச்சை குறைத்து அமைதியாக அன்றைய தினம் இருப்பது நல்லது.

உங்கள் ஜென்ம நட்சத்திரம் அஸ்வினி என்றால் அனுஷம் நட்சத்திரம் வரும் தினமே உங்களுக்கு சந்திராஷ்டம நட்சத்திரமாக இருக்கும்.

உதாரணமாக இன்று ஆயில்யம் நட்சத்திரம். எனவே இன்று  பூராடம் நட்சத்திர காரர்களுக்கு சந்திராஷ்டமமாக இருக்கும்.


ராசிக்கு 8ல் சந்திரன் வரும் நாள்கள் முழுவதும் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக நட்சத்திரம் வரும்போது சற்று அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். அதற்காக பெரிய அளவில் பயப்பட வேண்டாம். அன்றைய தினம் என்ன நடந்தாலும் வாயை மூடிக்கொண்டு இருந்தால் போதுமானது.


அஸ்வினி - அனுஷம்
பரணி - கேட்டை
கிருத்திகை - மூலம்
ரோகிணி - பூராடம்
மிருகசீரிஷம் - உத்திராடம்
திருவாதிரை - திருவோணம்
புனர்பூசம் - அவிட்டம்
பூசம் - சதயம்
ஆயில்யம் - பூரட்டாதி
மகம் - உத்திரட்டாதி
பூரம் - ரேவதி
உத்திரம் - அஸ்வினி
அஸ்தம் - பரணி
சித்திரை - கிருத்திகை
சுவாதி - ரோகிணி
விசாகம் - மிருகசீரிஷம்
அனுஷம் - திருவாதிரை
கேட்டை - புனர்பூசம்
மூலம் - பூசம்
பூராடம் - ஆயில்யம்
உத்திராடம் - மகம்
திருவோணம் - பூரம்
அவிட்டம் - உத்திரம்
சதயம் - அஸ்தம்
பூரட்டாதி - சித்திரை
உத்திரட்டாதி - சுவாதி
ரேவதி - விசாகம்


Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.




No comments:

Post a Comment