Sunday, 9 February 2020

லக்கினம் சரி பார்த்தல்.!!

பொதுவாக ஒரு ஜாதகம் பார்த்த உடனே இவர் எதற்காக ஜாதகம் பார்க்க வந்துள்ளார் என்று தெரிந்து விடும்.

அப்படி தான் ஒருவர் ஜாதகம் பார்த்தேன். அவருக்கு நாக தோஷம் இருந்தது. திருமணம் பற்றி கேட்க போகிறார் என்று நினைத்தேன்.
காம உணர்வு அதிகம் கொண்டவர். நிறைய பெண் நட்புகளை கொண்டவர்.

பொதுவாக எந்த ஜாதகம் வந்தாலும் முதலில் ஜாதகம் சரியா உள்ளதா என பார்த்து விட்டு தான் பலன் சொல்ல ஆரம்பிப்பேன். அப்படி தான் அவர் ஜாதகம் பார்க்கும்போது லக்கினம் தவறாக இருந்தது.

தனுசு லக்கினம் க்கு மகர லக்கினம் என்று இருந்தது.

அப்போது நான் நினைத்தது எல்லாமே தவறாக போனது.

தனுசு லக்கினம் என்னும்போது அவருக்கு நாக தோஷம் இல்லை. நல்ல பையன். தவறு செய்ய மாட்டார்.

தனுசு லக்கினம் வைத்தே பலன்கள் சொன்னேன். பாதி சரி என்றார். மீதி எதிர்காலம் தான் பதில் சொல்ல வேண்டும். நடக்கும்போது புரிந்து கொள்வார்.

இதில் கொடுமை என்ன என்றால் இல்லாத நாக தோஷத்துக்கு நாக தோஷம் உள்ள ஒரு பொண்ணை தேடி திருமணம் செய்தது தான். மனைவியுடன் கருத்து வேறுபாடுகள்.

என்னதான் தவறாக ஜாதகம் வைத்து தவறாக பொருத்தம் பார்த்து திருமணம் செய்தாலும், விதி என்று ஒன்று உள்ளது அல்லவா...

அந்த ஜாதகத்துக்கு மகரம் என்றால் திருமண வாழ்க்கை 95 % problem. தனுசு என்றால் 60 % problem. அவ்ளோ தான். மேலும் அந்த பெண்ணின் திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்சனையின் தாக்கம் இவருக்கும் இருக்கும்.

என்னிடம் ஜாதகம் பார்த்த எல்லாருக்கும் தெரியும். நான் கிடைக்கும் கிடைக்காது நடக்கும் நடக்காது என்று மட்டும் பலன்கள் சொல்லாமல்.....
உங்க அம்மா இப்படி அப்பா இப்படி உங்களுக்கு இது பிடிக்கும் அது பிடிக்கும் உங்க குணம் இப்படி னு பல்வேறு விஷயங்களை சொல்வேன். அப்போது தான் ஜாதக தவறுகளை கண்டு பிடிக்க முடியும். மேலும் ஜோதிடர் பற்றியும் உங்களுக்கு தெரிய வரும்.

ஆனால் பலருக்கு யோசிச்சு ஆமா இல்லை னு சொல்வதற்கு கூட பொறுமை இல்லை. நடக்குமா நடக்காதா னு மட்டும் சொல்லுங்க என்பது தான் அவர்கள் கேள்வியாக இருக்கும். மேலும் கேள்வியை புரிந்து யோசிச்சு பதில் சொல்வது இல்லை. யோசிக்காம இல்லை என்று சொல்லி விடுவார்கள்.

உதாரணமாக ஒருவற்கு நீங்க இஷ்டப்பட்டு வேலை செய்ய மாட்டிங்க என்றேன். அப்டிலாம் இல்லை பிடிச்சு தான் வேலை செய்யுறேன் என்றார். பிறகு கேள்வியை புரிந்து கொண்டு, வேலை செய்ய சோம்பேறித்தனம் உண்டு. நாளை என தள்ளி போடுவேன். ஆனால் செஞ்சா பிடிச்சு செய்வேன் என்றார்.

ஒருவரிடம் உங்களுக்கு பிடித்த மாதிரி வேலை கிடைக்காது என்றேன். அப்படி லாம் இல்லை. எனக்கு பிடிச்ச வேலை தான் என்றார். பிறகு வேலை பார்க்கேன். ஆனால் 1 வருசமா சம்பளம் தரல னு சொல்றார். 1 வருசமா சம்பளம் வாங்காம அப்படி என்ன பிடிச்சு வேலை செய்யுறாரோ தெரில....

இப்படி யோசிக்காம இல்லை னு பதில் சொல்லும்போது, அடுத்த பலன்கள் சொல்லும் போது mind disturb ஆகும்.

முதலில் வைத்து இருக்கும் ஜாதகம் சரியா னு பாருங்க... ஜோதிடரிடம் பலன் கேட்கும்போது நடந்தது லாம் சரியா இருக்கா னு பாருங்க. லக்கினம் உறுதி பண்ணிக்கோங்க...

அதுக்கு அப்புறம் பொருத்தம் பாருங்க...

No comments:

Post a Comment