Sunday, 30 October 2022

பித்ரு தோஷம் நீங்க எளிய பரிகாரம்.!!

சூரியன் மற்றும் சந்திரனுடன் ராகு - கேது சேர்க்கை இருந்தாலும், 9 ம் இடத்தில் ராகு - கேது இருந்தாலும் பித்ரு தோஷமாகும்.

இதனால் வாழ்வில் முன்னேற்ற தடைகள், காரிய தடைகள் இருக்கும். சிலருக்கு புத்திர பாக்கிய தடையும் ஏற்படலாம். 

வீட்டில் சடலம் இருக்கும்போது சண்டையிடுதல், முன்னோர்களுக்கு திதி சரிவர கொடுக்காமல் இருப்பது, முற்பிறவியில் தாய் தந்தையரை சரியாக கவனிக்காமல் இருப்பது போன்றவற்றால் பித்ரு தோஷம் ஏற்படுகிறது.

இவர்கள் தினசரி காலையில் எழுந்து குளித்து, சுத்தமான ஆடை அணிந்து,  7 மணிக்குள் பிதுர்காரகனான சூரியனை நோக்கி இந்த மந்திரம் சொல்லி வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

மந்திரம்:

// ஹரி ஓம் ஹ்ராம் ஹ்ரீம்! சஹசிவ சூரியாய!

வா வா ஐயும் கிலியும் சவ்வும் வசி வசி ஸ்வாஹா // 

முதன்முறை தொடங்கும்போது, ஞாயிற்றுகிழமை வரும் அமாவாசையன்று தொடங்கலாம். பின்பு முடிந்தவரை தினசரி செய்து வர, பாவங்கள் அனைத்தும் தீர்ந்து வாழ்வில் சுபகாரியங்கள் நடக்க துவங்கும்.  


Whatsapp மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....


Facebook மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....

No comments:

Post a Comment