( 15.03.2022 முதல் 13.04.2022 வரை )
லக்னாதிபதி செவ்வாய் உச்ச ஸ்தானத்தில் உலவிட இம்மாதம் ஆரம்பமாகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை உடனுக்குடன் அடக்கி அமைதி ஏற்படுத்தப்படும். ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் வெளிநாட்டில் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு மிகுந்த பயபீதி உண்டாகும். சாலை விபத்துக்கள் அதிகரிக்கும். பத்திரிகைத் துறையைச் சார்ந்த பெண்ணொருவரின் இழப்பு ஏற்படக் கூடும்.
தொழில் வீட்டை குரு நோக்குகிறார். புதிய தொழில்கள் தோன்றும். கல்வி நிறுவனங்கள் நல்ல முன்னேற்றமடையும். மத வழிபாடுகள் அதிகரிக்கும். வியாபாரிகள் பெரிய அளவில் லாபம் ஈட்டுவர். கலையுலகம். திரையரங்குகள் முன்னேற்றமடையும். புதிய கல்வி நிறுவனங்கள் தோன்றும். நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகள் வெளிச்சத்திற்கு வரும். ராகுவின் நிலையால் விவாகரத்து வழக்குகள் பெருகும். மார்ச் மாதம் செவ்வாய் சனி ஒன்று சேர்வதால் இடி மின்னல், வெள்ளப் பெருக்கு ஏற்படும். மார்ச் 22-ல் குரு புதனிடையே கிரக யுத்தம் ஏற்படுவதால் நில நடுக்கம் தோன்றும்.
மழை :
மார்ச் : 17, 18, 21 (பெருமழை, நிலநடுக்கம்) 22 (நில நடுக்கம்) 28,30,31
ஏப்ரல்: 4 (இயற்கைச் சீற்றம்) 6 (இடி மின்னல் வெள்ளப்பெருக்கு). 7, 8.
- பராசரம் பாலசுப்பிரமணியம் ( பஞ்சாங்க கணிதர் )
நட்சத்திர பலன்கள்
கார்த்திகை, சித்திரை, திருவோணம்
உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம். உடல் நலத்தில் கவனம் தேவை.
ரோகிணி, சுவாதி, அவிட்டம்
லாபகரமான செயல்கள் நடைபெறும். பண வரவு இருக்கும்.
மிருகசிரிசம், விசாகம், சதயம்
அதிக செலவுகள் ஏற்படும். பண விசயத்தில் கவனம் தேவை.
திருவாதிரை, அனுஷம், பூரட்டாதி
அலைச்சல்கள் மற்றும் நேரத்திற்கு சாப்பிட இயலாமை இருக்கும்.
புனர்பூசம், மகம், கேட்டை, உத்திரட்டாதி
சந்தோஷமான நிகழ்வுகள் , வாய்க்கு ருசியான விருந்துகள் கிடைக்கும்.
பூசம், பூரம், மூலம், ரேவதி
பொன் பொருள் நகை பண சேர்க்கை உண்டு.
அஸ்வினி, ஆயில்யம், உத்திரம், பூராடம்
சண்டைகள் கலகங்கள் மனஸ்தாபங்கள் ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
பரணி, அஸ்தம், உத்திராடம்
காரிய தடைகள் மற்றும் அலைச்சல்கள் எற்படலாம். ஏதேனும் துக்க செய்திகள் கேட்க நேரிடலாம்.
சென்ற மாசி மாத பலனுக்கு ......
Whatsapp மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....
No comments:
Post a Comment