Saturday, 26 February 2022

ராகு - கேது பெயர்ச்சி - 2022

நாள் : 21.03.2022

நேரம்: மதியம் 03.15 p.m


மேஷம் :

தாய் மற்றும் தந்தை உடல்நிலை பாதிப்பு  ஏற்படலாம். தந்தை / தந்தை வழி உறவுகள் மற்றும் உடன் பிறந்தோர்களுடன் கருத்து வேறுபாடுகள் சண்டைகள் ஏற்படும். நெருக்கமான உறவை பிரிய நேரிடலாம். இடமாற்றம் ஏற்படும். தொழில் பிரட்சணைகள்  ஏற்படலாம். சோம்பேறித்தனம், மன குழப்பங்கள் மற்றும் மன பயம் ஏற்படும். உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம். நெருப்பு மற்றும் விஷ பூச்சிகளிடம் கவனம் தேவை. மனம் கெட்ட வழியில் செல்லும். கெட்ட செயலுக்காக பணம் செலவழியும். முகம் கலை இழக்கும். மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் குறையும். 

கணவன் / மனைவி உறவில் சண்டைகள் ஏற்படும். கலகங்கள் உண்டாகும். எதிரிகள் தொல்லைகள் இருக்கும். அலைச்சல்கள் ஏற்படலாம். கண் / வயிறு / தோல் சம்மந்தமாக பிரச்சனைகள் ஏற்படலாம். வீண் அலைச்சல் மற்றும் கெட்ட பெயர் ஏற்படலாம். நண்பர்கள் எதிரிகளாக மாறலாம்.

ரிஷபம் :

விரும்பத்தகாத இடமாற்றம் ஏற்படும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும். அலைச்சல்கள் ஏற்படும். தூக்கம் மற்றும் இல்லற சுகம் கெடும். மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். தியாகங்கள் செய்ய நேரிடும். 

பொன் பொருள் நகை பண சேர்க்கை ஏற்படும். அதே நேரத்தில் செலவுகளும் உடனுக்குடன் இருக்கும். மருத்துவ செலவுகள் ஏற்படலாம். மன பயம்/ மன குழப்பம் நீங்கும். விரோதிகள் நண்பர்களாவர். 

மிதுனம் :

பண வரவு ஏற்படும். கணவன் / மனைவி உறவில் மகிழ்ச்சி ஏற்படுதல். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவர். காதல் விவகாரங்கள் வெற்றி அடையும். திருமண வாய்ப்புகள் கூடி வரும். வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றமும் லாபமும் உண்டாகும். பணம் பல வழியிலும் வந்து சேரும். பொன் பொருள் வண்டி வாகன சேர்க்கை உண்டாகும். 

பண சேர்க்கை உண்டாகினாலும் அதற்கு ஏற்ற செலவுகளும் உடனே ஏற்படும். எனவே பண விசயத்தில் கவனம் தேவை. சிலருக்கு களவு ஏற்படலாம். உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம். குழந்தைகளால் மன கவலைகள் / பிரச்சனைகள் ஏற்படலாம். எதிரிகளால் மன பயம் உண்டாகும்.

கடகம் :

வேலையில் பிரட்சணைகள் ஏற்படலாம். உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நலம். வேலை மாற்றம் ஏற்படலாம். அலைச்சல்கள்  மற்றும் அரசு வழியில் இடையூறுகள் ஏற்படலாம். கடின முயற்சிகள் மூலம் தொழிலில் முன்னேற்றம் காணலாம். தடைகள் வந்தாலும், தளராது உழைத்திடும் பக்குவம் உண்டாகும். 

கெட்ட சகவாசங்கள் ஏற்படலாம். கௌரவ பாதிப்புகள் ஏற்படலாம். புதிய நட்பில் கவனம் தேவை. வயிறு சமந்தப்பட்ட பிரட்சணைகள் ஏற்படும். ஜலதோஷம் சளி தொந்திரவுகள்  ஏற்படலாம். சிலருக்கு ரத்த சமந்தமாக பிரட்சணைகள் ஏற்படலாம். வைத்திய செலவுகள் ஏற்படலாம். பய உணர்வு உண்டாகும். பயணங்களை தவிர்ப்பது நலம். 

சிம்மம் :

காரிய தடைகள் ஏற்படும். கடின முயற்சிக்கு பின்னே வெற்றி கிட்டும். எதிரிகள் தொல்லைகள் ஏற்படும். இருப்பினும் எதிரிகளை சாமாளித்து வெற்றி பெறவும் முடியும்.  சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அடங்கி இருக்கும் நிலையில் இருக்க நேரிடும்.!!

உடல்நல பாதிப்புகள் மற்றும் அலைச்சல்கள் ஏற்படும். மனம் அமைதி இழக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டலாம். பண வரவு ஏற்படும். தந்தை உடல்நிலை பாதிப்பு ஏற்படும். பூர்வீக சொத்தில் அனுகூலமற்ற நிலை ஏற்படும். தந்தை வழி உறவுகளுடன் விரோதம் ஏற்படலாம். தந்தை சொத்துக்கள் சில இழப்பு ஏற்படலாம்.!! 

கன்னி :

காரிய தடைகள் ஏற்படலாம். இட மாற்றங்கள் ஏற்படும். வம்பு வழக்கு பிரட்சணைகள் ஏற்படலாம். பட்னி கிடக்கும் நிலை கூட எற்படலாம். கீழ் நிலையில் உள்ளவர்கள் கூட மதிக்க மாட்டார்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. உங்கள் வேலைகளை நீங்களே செய்யுங்கள். மற்றவர்களிடம் பொறுப்பை கொடுக்காதீர்கள். சிறு தவறு செய்தாலும், பெரிய குற்றவாளியாக ஆக்கப்டுவீர்கள். குடும்ப செலவுகள் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகளுக்கு வெற்றி கிட்டும். தொழில் கூட்டாளி விஷயத்தில் கவனம் தேவை. பண விசயத்திலும் கவனம் தேவை. பண இழப்பு  ஏற்படலாம்.

பயங்கர கோபங்கள் ஏற்படும். சண்டைகள் ஏற்படும். விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிரிகள் தொல்லைகள் ஏற்படுதல். சிலருக்கு களவு ஏற்படலாம். சிலருக்கு தீ காயங்கள் ஏற்படலாம். எதிர்பாரா விபத்துக்கள், விஷ பூச்சிகளால் ஆபத்து உண்டாகலாம். சிலருக்கு Food Poison ஆகலாம்.

துலாம் :

தாயார் உடல்நிலை பாதிப்பு ஏற்படும். இட மாற்றம் ஏற்படும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். ஆன்மீக பயணங்கள் ஏற்படும். தான தர்மங்கள் செய்வார்கள். அலைச்சல்கள் ஏற்படலாம். கணவன் / மனைவி உறவில் பிரட்சணைகள் ஏற்படலாம். குடும்பத்தில் சுப காரிய தடை ஏற்படும். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடுகள் மற்றும் உறவுகளுடன் சண்டை சச்சரவுகள் ஏற்படலாம். சிலருக்கு ஆண்/ பெண் தொடர்புகள் ஏற்படலாம். வரவை விட செலவுகள் அதிகம் இருக்கும். உடல் நிலை பாதிப்பு ஏற்படலாம். மஞ்சள் காமாலை ஏற்படலாம். இரத்த சமந்தமான பிரட்சணைகள் ஏற்படலாம். சிலருக்கு வெட்டு காயங்கள் ஏற்படலாம். மருத்துவ செலவுகள் ஏற்படும். வண்டி வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. தன்னம்பிக்கை குறைய நேரிடும். முன் கோபத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். அண்டை வீட்டாரால் தொல்லைகள் ஏற்படலாம். தகப்பனார் சொத்தில் பாகப்பிரிவினை எற்படலாம். பூர்வீக சொத்தை விற்று புதிய சொத்துக்களை வாங்க நேரிடலாம். 

மன குழப்பங்கள் ஏற்படும். கவலைகள் உண்டாகும். வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் போகும். அவசர குணம் உண்டாகும். நிலையற்ற புத்தி ஏற்படும். காரிய தடை மற்றும் எதிரிகள் தொல்லைகள் உண்டாகும். நண்பர்கள் எதிரிகளாக மாறலாம். உடன் பிறந்தோர்களுக்கு நல்ல பலன்கள் ஏற்படும். ஒரு சிலரின் சகோதரர் / கணவர் க்கு பயணங்கள் ஏற்படலாம். 

விருச்சிகம் :

கடின முயற்சிகளுக்கே பின்னே காரிய வெற்றி ஏற்படும். எதிர்பாலினம் மூலம் கெட்ட பெயர் ஏற்படும். எதிரிகள் தொல்லைகள் இருந்தாலும், எதிரிகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும்.

 திருமண வாய்ப்புகள் கூடி வரும். வழக்கில் வெற்றி கிட்டும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். பணவரவு நன்றாக இருந்தாலும் செலவுகளும் இருக்கும். மருத்துவ செலவுகள்  ஏற்படலாம். கண் சமந்தப்பட்ட பிரட்சணைகள் வரலாம். 

தனுசு :

பணவரவு ஏற்படும். நல்ல பெயர் புகழ் உண்டாகும். உடன் பிறந்தோர் / நண்பர்கள் மூலம் பண வரவு ஏற்படலாம். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறுவதில் தடைகள் தாமதங்கள் ஏற்படலாம். 

கணவன் / மனைவி உறவில் பிரிவு/ மனஸ்தாபம் ஏற்படலாம். மன குழப்பம் / கவலைகள் ஏற்படும். பிள்ளைகளால் தொல்லைகள்/ சண்டைகள் ஏற்படும். பூர்வீக சொத்தில் சிக்கல்கள் / விரயங்கள் ஏற்படலாம். 

மகரம் :

தாயின் உடல் நிலை பாதிப்பு ஏற்படலாம். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படும். இட மாற்றம் ஏற்படும். அலைச்சல் உண்டாகும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும். சொத்துக்கள் வாங்க விற்க கவனம் தேவை.  பத்திரங்கள் விஷயங்களில் கவனம் தேவை. எல்லா முயற்சிகளிலும் அலைச்சல்கள் இடையூறுகள் தடைகள் ஏற்படும். மன பயம் ஏற்படும். போராடி செயல்பட வேண்டியதாக இருக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. வண்டி வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. மாணவர்களுக்கு படிப்பில் பாதிப்பு மற்றும் தடை ஏற்படலாம்.

தோல் சமந்தப்பட்ட பிரட்சணைகள் ஏற்படலாம். ஆயுதங்களை கவனமாக கையாள வேண்டும். காயங்கள் ஏற்படலாம். சிலருக்கு திடீர் பண வரவு ஏற்படலாம். சிலருக்கு களவும் ஏற்படலாம். 

கும்பம் :

காரிய வெற்றி ஏற்படும். முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். பண வரவு ஏற்படும். எதிரிகளை வெல்வீர்கள். முன்னேற்றம் ஏற்படும். தடைபட்டு வந்த சுப காரியங்கள் நடை பெரும். உடன் பிறப்புகள் ஆதரவு கிட்டும். பயணங்கள் ஏற்படும். சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும். 

பண வரவுகள் இருந்தாலும் அதிக செலவுகளும் ஏற்படும். போராடியே ஒவ்வொரு காரியத்தையும் வெற்றிகரமாக செய்ய நேரிடும். உறவுகள் மற்றும் நண்பர்கள் உதவி மற்றும் ஆதரவு கிட்டும். உடல் நல பாதிப்புகள் மற்றும்  அலைச்சல்கள் ஏற்படலாம். பாவ செயல்களை மனம் நாடும்.

மீனம் :

பண வரவில் பிரட்சணைகள் ஏற்படும். விரயங்கள் ஏற்படலாம். சிலருக்கு களவு ஏற்படலாம். பழுது பார்க்கும் செலவுகள் ஏற்படலாம். இடமாற்றம் ஏற்படும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும். கௌரவ பாதிப்புகள் ஏற்படலாம்.  பேச்சில் கவனம் தேவை. கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகலாம். பேசும் வார்த்தைகள் மற்றவர்களால் தவறாக புரிந்து கொள்ள நேரிடலாம். முகத்தில் ஏதுனும் பாதிப்புகள் எற்படலாம். கண்களில் பிரச்சனை ஏற்படலாம். 

உடல் நல பாதிப்புகள் ஏற்படும். ரத்த காயங்கள் ஏற்படலாம். மற்றவருக்கு பணிந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். சிலருக்கு தற்கொலை எண்ணங்கள் தோன்றலாம். 


சித்திரை மற்றும் ஐப்பசி மாதம் பிறந்தவர்களுக்கு.......

தந்தை உடல்நிலை பாதிப்பு ஏற்படலாம். தந்தை மற்றும் குடும்ப பெரியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அரசு வழியில் ஏதேனும் முயற்சித்தால் இழுபறியாக இருக்கும். 


Whatsapp மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....


Facebook மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....

No comments:

Post a Comment