Saturday, 12 February 2022

மாசி மாத பலன்கள் - 2022

 ( 13.02.2022 முதல் 14.03.2022 வரை )

செவ்வாய் லக்னத்தில் அமர இம்மாதம் பிறப்பதால் தீ மற்றும் சாலை விபத்துக்கள் அதிகரிக்கும். அராஜகம். வன்முறை. கலவரம் போன்றவற்றால் பொதுச் சொத்துக்களுக்குச் சேதாரம் உண்டாகும். தொழிலாளர்களுடன் சமாதானம் ஏற்படும். வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படும். வியாபாரம். தொழில் நன்கு முன்னேற்றமடையும். அரசுக்கு வருமானம் அதிகரிக்கும். அரசு அதிகாரிகள் பொறுப்புடன் செயல்பட சட்ட திருத்தங்கள் கொண்டுவரப்படலாம். எழுத்து, பத்திரிகைத் துறையைச் சேர்ந்தவர் பாராட்டப்படுவார்.

கப்பல் போக்குவரத்தில் தகராறுகள் உருவாகும். நோய் பரவும். பருத்தி மற்றும் கனரக இயந்திர தொழிற்சாலைகள் பாதிப்புக்குள்ளாகும். பெண்ணொருவர் பாராட்டப்படுவார். குரு சூரியனுக்கு முன்பு உலவிடுவதால் கடலோரப் பகுதிகளில் பெருமழை பெய்யும். வேகமான காற்றும் வீசக்கூடும். பருவ நிலையில் மாற்றம் ஏற்படும். மலைச் சார்ந்த பிரதேசங்களில் குளிர் அதிகரிக்கும். செவ்வாய் சனி மகரத்தில் உள்ளபோது இடி, மின்னல், வெள்ளப் பெருக்கு. இயற்கைச் சீற்றம் உண்டாகும். செவ்வாய் பதங்கமார்க்கத்தில் உலவிடுவதால் நல்லமழையுண்டு.

மழை : 

பிப்ரவரி : 16, 17, 22, 26, 27, 28

மார்ச் : 1, 3, 6.

- பராசரம் பாலசுப்பிரமணியம் ( பஞ்சாங்க கணிதர் )

நட்சத்திர பலன்கள்

பூரம், மூலம், ரேவதி  

உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம். உடல் நலத்தில் கவனம் தேவை. 


அஸ்வினி, உத்திரம், பூராடம், 

லாபகரமான செயல்கள் நடைபெறும். பண வரவு இருக்கும். 

பரணி, அஸ்தம், உத்திராடம்,  

அதிக செலவுகள் ஏற்படும். பண விசயத்தில் கவனம் தேவை. 


கார்த்திகை, சித்திரை, திருவோணம், 

அலைச்சல்கள் மற்றும் நேரத்திற்கு சாப்பிட இயலாமை இருக்கும்.

ரோகிணி, புனர்பூசம், சுவாதி, அவிட்டம்,

சந்தோஷமான நிகழ்வுகள் , வாய்க்கு ருசியான விருந்துகள் கிடைக்கும்.


மிருகசிரிசம், பூசம், விசாகம், சதயம், 

பொன் பொருள் நகை பண சேர்க்கை உண்டு.

திருவாதிரை, ஆயில்யம், அனுஷம், பூரட்டாதி

சண்டைகள் கலகங்கள் மனஸ்தாபங்கள் ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். 


மகம், கேட்டை, உத்திரட்டாதி. 

காரிய தடைகள் மற்றும் அலைச்சல்கள் எற்படலாம்.  ஏதேனும் துக்க செய்திகள் கேட்க நேரிடலாம். 


சென்ற தை மாத பலனுக்கு ......

https://bit.ly/3qo2YSq



Whatsapp மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....


Facebook மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....

No comments:

Post a Comment