( 17.11.2021 முதல் 15.12.2021 வரை )
குரு கும்பராசிக்குப் பெயர்ச்சியாகிறார். பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வு ஏற்படக்கூடும். வங்கி இழப்பு ஏற்படும். நான்காமிடத்தில் (ரிஷபத்தில்) ராகு இருப்பது நல்லதல்ல. விளைச்சல் பாதிக்கும். நிலச்சரிவு. சுரங்க விபத்துக்கள் ஏற்படக்கூடும். திடீர் கிளர்ச்சி. வன்முறைகள் தோன்றும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வணிகம். வியாபாரம் பாதிப்புக்குள்ளாகும். கப்பல். ஓடம், படகு விபத்துக்குள்ளாகும்.
சூரியனும் கேதுவும் இணைவதால் அரசு அதிகாரிகள். அரசியல் பிரபலங்களின் இழப்பு ஏற்படும். பெண்களுக்காதரவாக சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும். அறக்கட்டளைகள், திருவிழாக்கள் பெருகும். மருத்துவச் சாலைகளில் மாற்றங்கள் உருவாகும். நோய் அதிகரிக்கும். நில நடுக்கம், போர்பதட்டம் ஏற்படும். புதனின் கேட்டை நட்சத்திர சஞ்சாரத்தால் குதிரைகளுக்கு நோய்தோன்றும். கடல் சீற்றம் ஏற்படும். பொதுச் சொத்துக்களுக்குச் சேதாரம் ஏற்படும்.
மழை :
நவம்பர். 17, 19-23, 25, 26, 29
டிசம்பர் 1, 2, 4, 7, 8, 9, 11, 14
- பராசரம் பாலசுப்பிரமணியம் ( பஞ்சாங்க கணிதர் )
நட்சத்திர பலன்கள்
திருவாதிரை , சித்திரை , திருவோணம்
உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம். உடல் நலத்தில் கவனம் தேவை.
புனர்பூசம், சுவாதி , அவிட்டம்
லாபகரமான செயல்கள் நடைபெறும். பண வரவு இருக்கும்.
பூசம், விசாகம், சதயம்
அதிக செலவுகள் ஏற்படும். பண விசயத்தில் கவனம் தேவை.
ஆயில்யம், அனுஷம், பூரட்டாதி
அலைச்சல்கள் மற்றும் நேரத்திற்கு சாப்பிட இயலாமை இருக்கும்.
பரணி , மகம், கேட்டை , உத்திரட்டாதி
சந்தோஷமான நிகழ்வுகள் , வாய்க்கு ருசியான விருந்துகள் கிடைக்கும்.
கார்த்திகை , பூரம், மூலம் , ரேவதி
பொன் பொருள் நகை பண சேர்க்கை உண்டு.
அஸ்வினி , ரோகிணி , உத்திரம், பூராடம் ,
சண்டைகள் கலகங்கள் மனஸ்தாபங்கள் ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
மிருகசிரிஷம் , அஸ்தம் , உத்திராடம்
காரிய தடைகள் மற்றும் அலைச்சல்கள் எற்படலாம். ஏதேனும் துக்க செய்திகள் கேட்க நேரிடலாம்.
சென்ற ஐப்பசி மாத பலனுக்கு ......
Whatsapp மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....
No comments:
Post a Comment