பெண்கள் எப்பொழுதும் தங்கள் பிறந்த வீட்டிற்குச் செல்ல பிள்ளைகள் தான். ஆனால் திருமணம் ஆனப் பின்னர் அவர்கள் என்னதான் செல்லப் பிள்ளையாக இருந்தாலும் புகுந்த வீட்டில் தான் அவர்களின் அதிர்ஷ்டம் எல்லாம் அடங்கும். எனவே திருமணத்திற்கு பிறகு பெண்கள் தங்கள் தாய் வீட்டிலிருந்து எடுத்துச் செல்லக் கூடாத ஒரு சில பொருட்கள் இருக்கின்றன. தவறறியும் இந்த பொருட்களை நாம் நம் வீடு தானே என்று அங்கிருந்து எடுத்து வந்தால் நமக்கும் அவர்களுக்கும் இடையிலான உறவு பலவீனமாகும். தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும். எனவே எந்தெந்த பொருட்களை நம் தாய் வீட்டிலிருந்து எடுத்துச் செல்லக் கூடாது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
முதலாவதாக சமையலுக்கு பயன்படுத்தும் உப்பை எந்தவித காரணத்தினாலும் தாய் வீட்டிலிருந்து இலவசமாகவும், கடனாகவும் எடுத்து வரக்கூடாது இதனால் நமது வீட்டில் லட்சுமி கடாட்சம் வெளியில் சென்று விடும். அடுத்ததாக புளியையும் தாய் வீட்டிலிருந்து கொண்டு வரக்கூடாது. இவ்வாறு செய்வதால் இரு வீட்டிற்கும் இடையே பிரச்சனைகள் உண்டாகும்.
புளி மற்றும் உப்பு சேர்த்து செய்யும் ஊறுகாயும் தாய் வீட்டிலிருந்து நமது வீட்டிற்கு கொண்டு வரக்கூடாது. இதனை இலவசமாகவோ அல்லது பணம் கொடுத்து எவ்வாறாக இருந்தாலும் கொண்டு வருவது என்பது கூடாது. தேவையில்லாத பிரச்சினைகளில் நம்மை மாற்றி விடும்.
அடுத்ததாக நல்லெண்ணையை எக்காரணம் கொண்டும் பிறந்த வீட்டில் இருந்து கொண்டு வரக்கூடாது. இந்த எண்ணெய் ஈமை சடங்கிற்கு பயன்படுத்தும் எண்ணெய் ஆகும். எனவே இரு வீட்டிற்கும் சிறிய பிரச்சினை இருந்தாலும் அவற்றைப் பெரிதாக மாற்றி விடும்.
அதுபோல கசப்பு நிறைந்த காய்கறிகளை தாய் வீட்டிலிருந்து கொண்டு வரக்கூடாது. அம்மா வீட்டில் தோட்டத்தில் வளரும் காய்கறிகளாக இருந்தாலும் சுண்டக்காய், பாகற்காய் போன்ற கசப்பு சுவை மிக்க உணவுகளை பணம் கொடுத்து வீட்டிற்கு வெளியே இருந்து எடுத்து வரலாமே தவிர தாய் வீட்டில் உள்ளிருந்து எடுத்து வரக்கூடாது.
அவ்வாறு தாய் வீட்டில் பூஜை அறையில் வைத்திருக்கும் பூஜை பொருட்களை எக்காரணம் கொண்டும் எடுத்து வரக்கூடாது. நமது அம்மா வீட்டில் பரிசாக புதிய பூஜை பொருட்களை கொடுத்தால் வாங்கிக் கொள்ளலாமே தவிர அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பூஜை பொருட்களை எடுத்து வரக்கூடாது.
அதுபோல கூர்மையான அருவாமனை, கத்தி போன்ற ஆயுதங்களை அங்கிருந்து எடுத்து வரக்கூடாது. இவற்றால் இரு வீட்டிற்கும் இடையே பகைமை உணர்வு அதிகரிக்கும். அடுத்ததாக தாய் வீட்டிலிருந்து துடைப்பத்தை எடுத்து வரக்கூடாது இதனால் நமது வீட்டில் எதிர்மறை சக்தி அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.
அவ்வாறு செடிகொடி வகைகளையும் தாய் வீட்டிலிருந்து எடுத்து வரக்கூடாது. அதுமட்டுமல்லாமல் அரிசி அளக்க பயன்படுத்தும் உழக்கு மற்றும் முறம் போன்றவற்றை எக்காரணம் கொண்டும் அங்கிருந்து எடுத்து வரக்கூடாது. இவ்வாறு செய்வதால் நிதி நிலைமை பிரச்சனை உண்டாகும்.
Whatsapp மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....
No comments:
Post a Comment