( 17.09.2021 முதல் 17.10.2021 வரை )
இம்மாதத் தொடக்கத்தில் சூரியன், புதன், செவ்வாய் கன்னி ராசியில் சஞ்சரிக்க அவர்களை குரு நோக்குகிறார். மழைக் கோளான சுக்ரன் துலாத்தில் வலிமையாக அமர, அவரை பாக்கியாதிபதி சனி பார்க்கிறார். அரசுக்கு பொது மக்களின் ஆதரவு பெருமளவில் பெருகும். விவசாயம் செழிக்கும். இரும்பு. எஃகு. தாதுப்பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும்.
செவ்வாயின் சஞ்சாரத்தாலும் கேதுவின் நிலையாலும் தீவிபத்துக்கள். கலவரம். வன்முறை. சுங்கத் துறையிலும், துறைமுகத்திலும் வேலை நிறுத்தம் பொருட் சேதம் உண்டாகும். சட்டம், நீதி, மதம் சார்ந்த துறைகளில் உள்ள பிரபலங்களின் இழப்பு ஏற்படலாம். ஊழல்வாதிகளும் பிரிவினை வாதிகளும் சிறைதண்டனை பெறுவர்.
அக்டோபர் 4 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை உள்ள கிரகநிலைகளால் நிலநடுக்கம் ஏற்படும். செப்டம்பர் 22 க்கு மேல் பங்குச்சந்தை உயரும்.
ராகு ரோகிணி நட்சத்திர சஞ்சாரத்தால் அண்டை நாட்டு எல்லையில் போர் பதட்டம் அதிகரிக்கும். சில மாநில ஆளும் கட்சிகள் வலுவிழக்கும்.
மழை :
செப்டம்பர். 17, 20, 21, 23-27
அக்டோபர் : 1-4, 5, 6-10, 14-16
- பராசரம் பாலசுப்பிரமணியம் ( பஞ்சாங்க கணிதர் )
நட்சத்திர பலன்கள்
பூசம் விசாகம் ரேவதி
உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம். உடல் நலத்தில் கவனம் தேவை.
அசுவினி ஆயில்யம் அனுஷம்
லாபகரமான செயல்கள் நடைபெறும். பண வரவு இருக்கும்.
பரணி மகம் கேட்டை
அதிக செலவுகள் ஏற்படும். பண விசயத்தில் கவனம் தேவை.
கார்த்திகை பூரம் மூலம்
அலைச்சல்கள் மற்றும் நேரத்திற்கு சாப்பிட இயலாமை இருக்கும்.
ரோகிணி உத்திரம் பூராடம் அவிட்டம்
சந்தோஷமான நிகழ்வுகள் , வாய்க்கு ருசியான விருந்துகள் கிடைக்கும்.
மிருகசிரிசம் அஸ்தம் உத்திராடம் சதயம்
பொன் பொருள் நகை பண சேர்க்கை உண்டு.
திருவாதிரை சித்திரை திருவோணம் பூரட்டாதி
சண்டைகள் கலகங்கள் மனஸ்தாபங்கள் ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
புனர்பூசம் சுவாதி உத்திரட்டாதி
காரிய தடைகள் மற்றும் அலைச்சல்கள் எற்படலாம். ஏதேனும் துக்க செய்திகள் கேட்க நேரிடலாம்.
சென்ற ஆவணி மாத பலனுக்கு ......
Whatsapp மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....
No comments:
Post a Comment