( 17.08.2021 முதல் 16.09.2021 வரை )
இம்மாதம் ஆரம்பத்தில் சூரியன். புதன். செவ்வாய் ஆகியோர் லக்ன கேந்திரம், சந்திர கேந்திரத்தில் உலவுவதுடன் அக்கோள்களை குரு நோக்குவதாலும் தேவைக்கேற்ற நல்ல மழைப் பெய்யும். விளைச்சல் அமோகமாக இருக்கும். செப்டம்பர் 14-ல் குரு மகரராசிக்கு வக்ரமாக பிரவேசிப்பதாலும், சனி ஏற்கனவே மகரத்தில் வக்ரியாகச் சஞ்சரித்து வருவதாலும் பயிர்கள். பழத்தோட்டங்கள் போன்றவற்றிற்கு அனுகூலமற்ற பருவநிலை உண்டாகிறது.
சுக்ரன் செப்டம்பர் 2 முதல் 10 வரை ஹஸ்தா நட்சத்திரத்தில் உலவிடும் போது பெருமழைப் பெய்யும். விருச்சிகத்தில் கேது சஞ்சரிக்க இம்மாதம் பிறப்பதால் பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரிக்கும். இம்மாதம் புதன் உதயமும் செவ்வாய் அஸ்தமனமும் நிகழ்கிறது. பெருங்காற்றுடன் பெருமழை பெய்யும்.
மழை:
ஆகஸ்ட் : 16, 17, 19, 20-22, 26, 28,
செப்டம்பர் : 1, 3, 6, 10, 11 (பேரலைகள்) 13, 14.
- பராசரம் பாலசுப்பிரமணியம் ( பஞ்சாங்க கணிதர் )
நட்சத்திர பலன்கள்
ரோகிணி உத்திரம் அவிட்டம்
உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம். உடல் நலத்தில் கவனம் தேவை.
மிருகசிரிசம் அஸ்தம் சதயம்
லாபகரமான செயல்கள் நடைபெறும். பண வரவு இருக்கும்.
திருவாதிரை சித்திரை பூரட்டாதி
அதிக செலவுகள் ஏற்படும். பண விசயத்தில் கவனம் தேவை.
புனர்பூசம் சுவாதி உத்திரட்டாதி
அலைச்சல்கள் மற்றும் நேரத்திற்கு சாப்பிட இயலாமை இருக்கும்.
பூசம் விசாகம் மூலம் ரேவதி
சந்தோஷமான நிகழ்வுகள் , வாய்க்கு ருசியான விருந்துகள் கிடைக்கும்.
அசுவினி ஆயில்யம் அனுஷம் பூராடம்
பொன் பொருள் நகை பண சேர்க்கை உண்டு.
பரணி மகம் கேட்டை உத்திராடம்
சண்டைகள் கலகங்கள் மனஸ்தாபங்கள் ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
கார்த்திகை பூரம் திருவோணம்
காரிய தடைகள் மற்றும் அலைச்சல்கள் எற்படலாம். ஏதேனும் துக்க செய்திகள் கேட்க நேரிடலாம்.
சொன்னதும் நடந்ததும்.!!
விலைவாசி உயர்வு :
பெட்ரோல் டீசல் விலை உயர்வு அடைந்தது. மேலும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருள்கள் விலையும் உயர்வு அடைந்தது.
வன்முறை அராஜகம் மத கலவரம் அதிகரிக்கும் :
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கை பற்றியது, டெல்லி கலவரம்.
சுற்றுலா துறை பாதிப்பு:
உலகளவில் கொரோனாவால் சுற்றுலா துறை பாதிக்கப்பட்டதை அடுத்து, இது, உலக பொருளாதாரத்தில் 300 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை ஏற்படுத்தும் என, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்தது.
கால்நடை நோய் :
'கெனைன் பார்வோ வைரஸால் நாய்கள் பாதிக்கப்பட்டன. நாமக்கல்-கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் பரவியது.
பத்திரிகை துறையில் இழப்பு :
திண்டுக்கல் அருகே பொட்டிகுளம் பகுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் நிருபர் ஷாலினி மறைவுக்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் இரங்கல் தெரிவித்தது. மேலும் சில முக்கிய பத்திரிக்கையாளர்களும் மரணம் அடைந்தனர்.
Whatsapp மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....
No comments:
Post a Comment