ஜாதகத்தில் மாந்தி கிரகம் மிக முக்கியமான ஒன்றாகும். கேரளாவில் மற்றும் ஆந்திராவில் இதற்கு முக்கியத்துவம் உண்டு. ஆனால் நம்மூரில் இதனை பெரிதாக பார்ப்பதும் இல்லை ஜாதகத்தில் குறிப்பது கூட இல்லை. பலர் ஜாதகத்தில் மாந்தி குறிக்கப்பட்டு இருக்காது.
ஒருவர் ஜாதகத்தில் பல நல்ல அமைப்புகள் இருக்கும். ஆனால் அவர் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பார். சில ஜோதிடர்களுக்கு கூட அதற்கு சரியான காரணம் பிடிபடாமல் ஆடி வந்தால் சரியாகிரும் ஆவணி வந்தா சரி ஆகிரும் என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள். ஜாதகரும் பல கோவில்களுக்கு செல்வார். பரிகாரங்கள் செய்வார் எதுவும் மாறி இருக்காது. தன் வாழ்வின் முன்னேற்றத்துக்கு அந்த ஜாதகரே தடையாக இருப்பார்.
காரணம் மாந்தி.
இப்போது மாந்தியின் முக்கியத்துவம் ஓரளவு புரிந்து இருக்கும். சரி மாந்தி என்பர் யார் எனும் புராண கதையை பார்ப்போம்.
இராமாயணத்தில் மாந்திக்கு ஒரு பங்கு உண்டு. அதிபலசாலியான இலங்கேஸ்வரன் ராவணன் எல்லா கிரகங்களையும் தன் கைக்குள் அடக்கவேண்டும் என்று நினைத்தான்.
அவனின் சிவ பக்தி; தவ வலிமையால் கிரகங்களை தன் வசம் கொண்டுவந்தான்.
இவனைவிட இவன் மகன் பலசாலியாகவும், ஆயுளோடும் இருக்க ஒரு சதி செய்தான். தன் மகன் இந்திரஜித் ஜெனிக்கும் சமயத்தில் சனியானவரை வரவழைத்து "என் மகன் ஜனனம் புரியும் நேரத்தில் அவன் ஜாதக கட்டத்தில் உன்னுடைய சிறந்த இடமான 11ல் இருக்கவேண்டும் என்று கட்டளை இட்டான்".
சனிக்கு 12ஆம் வீடுதான் மோசமான வீடு என்று ராவணனுக்குத் தெரியும். சனியானவர் கர்மாவை தராசு கொண்டு நடக்கும் ஒரு நீதிமான் வேறு வழியில்லாமல் சரி என்று ஒப்புக்கொண்டார்.
இந்திரஜித் பிறக்கும் நேரத்தில் 11ல் நின்ற சனி தன் ஒரு கால் 12ம் வீட்டின் கால் சென்றதாம். அதைப் பார்த்த இராவணன் கோபதால் தன் நீண்ட வாளால், சனியின் அந்தக் காலை வெட்டிவீழ்த்தினான். அதுவே மாந்தி ஆகும்.
இதனை வேறு விதமாகவும் சில புராண கதைகள் சொல்லும்.
உதாரணமாக மாந்தி என்பர் லக்கினத்தில் இருந்தால் அவருக்கு உடல் நல பாதிப்புகள் இருக்கும். யார் பேச்சுக்கும் கட்டுப்பட மாட்டார்.
8ல் இருந்தால் பரோட்டா சூரி மாதிரி அதிகமாக சாப்பிடுவார். ஆனால் ஒல்லியாக இருப்பார்.
3ல் இருந்தால் எல்லார் கூடயும் வாக்கு வாதம் சண்டை போடுவார்.
11ல் இருந்தால் அழகாக இருப்பார். எல்லாருக்கும் பிடித்தவர்.
12ல் இருந்தால் விரயங்கள் அதிகம் இருக்கும்.
இப்படி ஒவ்வொரு பாவத்திற்கும் ஒருவிதமான பலன்கள் உண்டு.
மாந்தி என்பவர் 4 மற்றும் 12 ம் இடத்தில் இருப்பவர்கள் நிச்சயம் மாந்திக்கு பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். அவர்கள் தான் தீரா கடன், தனிமை போன்ற பிரச்சனைகளில் மிகுந்த கஷ்டம் மற்றும் மன உளைச்சலில் இருப்பார்கள். அவர்கள் மட்டும் அல்ல அவர்களால் அவர்களது பெற்றோர்கள் மற்றும் வாழ்க்கை துணைக்கும் மன கவலைகள் ஏற்படும்.
எந்த ஒரு தோஷத்துக்கு வெறும் வழிபாடு மற்றும் பூஜைகள் மட்டுமே பரிகாரமாக அமையாது. அந்த தோஷத்தை பொறுத்து அந்த தோஷம் சார்ந்த சில புண்ணிய காரியங்களையும் வழிபாட்டோடு சேர்த்து செய்ய வேண்டும். அப்போது தான் அந்த தோஷம் விலகி ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். மாந்தி தோஷத்துக்கான பரிகாரங்களை பற்றி பார்ப்போம்.
பரிகாரம்:
1) பஞ்ச சபைகளில் ஒன்றான திருவாலங்காடு ஆலயம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது. இந்தத் தலத்தில் மாந்தி வழிபட்ட லிங்கம் உள்ளது, அங்கே சென்று அந்த சிவலிங்கத்தை வழிபட்டாலும் மாந்தி தோஷம் நீங்கும். திருவாலங்காடு - வடாரண்யேஸ்வரர் கோவிலில், சனிக்கிழமை காலை நேரத்தில் அங்கு இருக்கும் பத்திரகாளி அம்மனை வணங்கிவிட்டு மாந்தீஸ்வரர் பரிகார பூஜை செய்யலாம்.
2) கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் பக்கத்தில் திருநரையூர் எனும் ஸ்தலத்தில் சனிபகவான் தனிச்சந்நிதியில் எழுந்தருளுகிறார். அதுமட்டுமா? தன் மனைவி நீலாதேவி மகன்கள் குளிகன் மற்றும் மாந்தி என குடும்பத்தோடு அருள்பாலிக்கிறார். அங்கே சென்று முறையாக பூஜை செய்து வழிபட்டால் மாந்தி தோஷம் விலகும்.
3) பட்டுகோட்டைக்கு அருகே விளங்குளம் எனும் ஊரில் அமைந்துள்ள சிவாலயத்தில் சனி பகவான் குடும்பத்தோடு காட்சி தருகிறார். அங்கே சென்று வழிபட்டாலும் மாந்தி தோஷம் இல்லாமல் போகும்.
4) மாந்தியல் ஏற்படும் கேடுப்பலன்களை நீக்க நீங்கள் வசிக்கும் இடத்திலோ அல்லது அருகிலுள்ள ஆலயத்திலோ மஹா மிருத்யுஞ்சய யாகம், சுதர்சன யாகம் செய்து, யாக கும்ப நீரில் ஸ்நானம் எனப்படும் குளியல் செய்வதால் நீங்கும். தரமான கனக புஷ்பராக கல்லை, வெள்ளி மோதிரத்தில் பதித்து, உங்கள் கைகளில் எப்போதும் அணிந்து கொள்ள வேண்டும்.
பொதுவாக எந்த ஒரு மனிதர் இறந்தாலும் அவரை தூற்றுவது, அதாவது அவர் கெட்டவராகவே இருந்தாலும் இறந்த பிறகு அவரை தூற்றுவது "பிரேத சாபம்" என்னும் கடுமையான தோஷத்தைத் தரும். இதுவும் மாந்தி தோஷத்தில் ஒரு பகுதியே! எனவே எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் இறந்தவர்களைப் பற்றி விமர்சனம் செய்து பேசாதீர்கள். அது உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் குடும்பத்தினரையும் பாதிக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் செயல்பாடுகளே உங்கள் குடும்பத்தின் முன்னேற்றத்திற்கு உதவும் என்பதை மறந்துவிடாதீர்கள்!
சவ ஊர்வலங்கள் வரும்போது எழுந்து நின்று மரியாதை செய்வதும், இறந்தவரின் ஆன்மாவுக்காக ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்வதும், சவ அடக்கத்துக்கு நம்மால் முயன்ற உதவிகளைச் செய்வதும், மாந்தியின் தோஷத்தை வெகுவாகக் குறைக்கும். இன்னும் சொல்லப்போனால் மாந்தி தோஷம் இல்லாமலே போகும்!
மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிலும் குறிப்பாக கால்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிந்தவரை உதவி செய்யுங்கள். அவர்களுக்குத் தேவையான உபகரணங்களை வாங்கிக் கொடுத்து இந்த மாந்தி தோஷத்தின் வீரியத்தைக் குறைத்துக்கொள்ளலாம்.
Whatsapp மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....
யாரு குருஜி நன்மை செய்றாங்க.. 🤷♀️🤷♀️🤷♀️
ReplyDeleteஇருக்கும் போதே வாழ விடல இதுல செத்தும் எப்படி தூற்றாம இருப்பாங்க