Tuesday, 15 June 2021

ஆனி மாதம் - 2021 பலன்கள்

 ஆனி மாத பலன்கள்.!!

( 15.06.2021 முதல் 16.07.2021 வரை )

ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான அயல் நாட்டு வாணிபம் நன்கு அபிவிருத்தியடையும். அரசுக்கு வருவாய் பெருகும். பொருளாதார வளர்ச்சிமிகும். சாலை போக்குவரத்து விபத்துக்கள் பெருகும். விவாஹரத்து வழக்குகள் அதிகரிக்கும். ஒற்றர்கள் மற்றும் தீவிரவாதிகளின் ஊடுருவல் கண்டுபிடிக்கப்பட்டு முறியடிக்கப்படும். புதனின் உதயம். வக்ரநிவர்த்தி நிகழ்கிறது. புதன் திருவாதிரையில் உலவிடுகிறார்.

பெருங்காற்றுடன் பெருமழை எதிர்ப்பார்க்கலாம். செவ்வாய் ஜூன் 2 ல் கடகத்தில் பிரவேசிக்கிறார். சனியும் செவ்வாயும் ஒருவருக்கொருவர் ஏழாவது ராசியில்(ஸமஸப்தமம்)  உள்ளதாலும், செவ்வாயின் பார்வை மகரத்தில் உலவிடும் சனிக்கு உண்டாவதால் (ஜூலை 1-ம் தேதி) நிலநடுக்கம் ஏற்படும். யுரேனஸுக்கு நான்கில் செவ்வாய் உள்ளதால் பங்குச்சந்தை இறக்கம் காணும். 29-06-2021 முதல் 19-07-2021 வரை செவ்வாய் ஸெளம்யமார்க்கத்தில் சஞ்சரிப்பதால் நல்ல மழையுண்டு.

மழை: ஜூன்: 19-24, 27,28

ஜூலை: 1 (நிலநடுக்கம்) 7,8,10,12,13

- பராசரம் பாலசுப்பிரமணியம் ( பஞ்சாங்க கணிதர் )

நட்சத்திர பலன்கள் 


கார்த்திகை சித்திரை திருவோணம் 

உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம். உடல் நலத்தில் கவனம் தேவை. 


ரோகிணி சுவாதி அவிட்டம் 

லாபகரமான செயல்கள் நடைபெறும். பண வரவு இருக்கும். 


மிருகசிரிசம் விசாகம் சதயம் 

அதிக செலவுகள் ஏற்படும். பண விசயத்தில் கவனம் தேவை. 


திருவாதிரை அனுஷம் பூரட்டாதி 

அலைச்சல்கள் மற்றும் நேரத்திற்கு சாப்பிட இயலாமை இருக்கும்.


புனர்பூசம் மகம் கேட்டை உத்திரட்டாதி 

சந்தோஷமான நிகழ்வுகள் , வாய்க்கு ருசியான விருந்துகள் கிடைக்கும்.


பூசம் பூரம் மூலம் ரேவதி  

பொன் பொருள் நகை பண சேர்க்கை உண்டு.


அஸ்வினி ஆயில்யம் உத்திரம்  பூராடம்  

சண்டைகள் கலகங்கள் மனஸ்தாபங்கள் ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். 


பரணி அஸ்தம் உத்திராடம்  

காரிய தடைகள் மற்றும் அலைச்சல்கள் எற்படலாம்.  ஏதேனும் துக்க செய்திகள் கேட்க நேரிடலாம். 


Whatsapp மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....


Facebook மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....

No comments:

Post a Comment