( 15.05.2021 முதல் 14.06.2021 வரை )
நாடு நிலையான வளர்ச்சியை நோக்கிச் செல்லும். ஆட்சி ஸ்திரமாக இருக்கும். பொருளாதார வளர்ச்சிமிகும். வங்கி வணிகத்துறைகளில் வெற்றியும், அபிவிருத்தியும் உண்டு. வரிவிதிப்பில் மாற்றம் கொண்டுவரப்படும். செவ்வாயை குரு நோக்குவதால் அறக்கட்டளைகள், மருத்துவச் சாலைகள் பொதுமக்களின் கவனத்திற்கு வரும். சுகாதாரத்துறை மக்கள் சேவையில் முழுமையாக ஈடுபடும். திருவிழாக்கள் பெருகும். கல்வித்துறையில் புதிய மாற்றங்களும் சட்டத்திருத்தங்களும் கொண்டு வரப்படும். கலைத்துறை முன்னேற்றமடையும். பிரபலங்களின் உடல் நலம் பாதிக்கப்படும். பதினொன்றில் உலவிடும் கேதுவால் நாடாளுமன்ற உறுப்பினரின் இழப்பு ஏற்படும்.
மாத ஆரம்பத்தில் புதனும் சுக்ரனும் ரிஷபத்தில் உள்ளதாலும், சுக்ரன் திருவாதிரையில் உலவுவதாலும், காற்றுடன் பெருமழை எதிர்ப்பார்க்கலாம். செவ்வாய் ஜூன் 2-ல் கடகப்பிரவேசம் செய்வதால் இயற்கைப் பாதிப்புகள் உண்டு. இம்மாதத்தில் சூரிய, சந்திரகிரஹணங்கள் ஏற்படுகின்றன. தேர்தலில் ஆளும் கட்சிக்கு வெற்றி கிடைக்கும். சனி மகரத்தில் வக்ரகதியடைகிறார். அரசியல் பிரபலங்களின் இழப்பு ஏற்படும். செவ்வாய், புதன் - சனி - 6/8 ஆக உலவுவதால் நிலநடுக்கம் இயற்கைச் சீற்றம் ஏற்படும்.
மழை: மே 14.15,20,23,24,26-30
ஜூன்: 1-3.7.11.12(நிலநடுக்கம்)
- பராசரம் பாலசுப்பிரமணியம் ( பஞ்சாங்க கணிதர் )
நட்சத்திர பலன்கள்
பூரம் மூலம் ரேவதி
உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம். உடல் நலத்தில் கவனம் தேவை.
அஸ்வினி உத்திரம் பூராடம்
லாபகரமான செயல்கள் நடைபெறும். பண வரவு இருக்கும்.
பரணி அஸ்தம் உத்திராடம்
அதிக செலவுகள் ஏற்படும். பண விசயத்தில் கவனம் தேவை.
கார்த்திகை சித்திரை திருவோணம்
அலைச்சல்கள் மற்றும் நேரத்திற்கு சாப்பிட இயலாமை இருக்கும்.
ரோகிணி புனர்பூசம் சுவாதி அவிட்டம்
சந்தோஷமான நிகழ்வுகள் , வாய்க்கு ருசியான விருந்துகள் கிடைக்கும்.
மிருகசிரிசம் பூசம் விசாகம் சதயம்
பொன் பொருள் நகை பண சேர்க்கை உண்டு.
திருவாதிரை ஆயில்யம் அனுஷம் பூரட்டாதி
சண்டைகள் கலகங்கள் மனஸ்தாபங்கள் ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
மகம் கேட்டை உத்திரட்டாதி
காரிய தடைகள் மற்றும் அலைச்சல்கள் எற்படலாம். ஏதேனும் துக்க செய்திகள் கேட்க நேரிடலாம்.
Whatsapp மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....
No comments:
Post a Comment