Sunday, 4 April 2021

மேஷம் - ராசி/ லக்கினம் குண நலன்கள்.!!

அஜீரணம், தோல் சமந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கும். காதல் விசயங்களில் வெளிப்படையாக இருப்பார்கள். நாசுக்காக பேசாமல் வெளிப்படியாக பேசி சண்டை பிடிப்பவர்கள். கோபக்காரர்கள். அவசர குணம் உடையவர்கள். 

தைரியமானவர்கள். அதிகார குணம் கொண்டவர்கள். கர்வம் உடையவர்கள். மற்றவர்களின் திறமைகளை குறைத்து மதிப்பிடுபவர்கள். புதிய கருத்துக்கள் புதிய யோசனைகள் சிந்தனைகள் உடையவர்கள். எளிதில்  உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். தன் சொந்தங்களை விட வேறு உறவுகளிடம் அதிக நெருக்கம் காட்டுவார்கள். 

ஓடி நடந்து திரியும் சுறுசுறுப்பானவர்கள். காம உணர்வுகள் அதிகம் கொண்டவர்கள். எதிர்பாலின நட்பு அதிகம் இருக்கும். சூழ்நிலை காரணமாக கணவர்/ மனைவி க்கு அடங்கி போவார்கள். 32 வயது வரை ஏதேனும் வம்பு வழக்கு பிரச்சனைகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். இவர்களுக்கு அமையும் எல்லா உறவுகளும்  பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். பண வரவு செலவு இரண்டும் சமமாக இருக்கும். 

தர்ம சிந்தனைகள் மற்றும் இரக்க குணம் கொண்டவர்கள். சூடாக சாப்பிட விரும்புவார்கள். இலையில் கறி விருந்து விரும்புவார்கள். கொஞ்சமாக சாப்பிடுபவர்கள். கோபத்தை காட்டினாலும் உடனே சமாதானம் ஆகிவிடுவார்கள். தண்ணீர் என்றால் ஒருவித பயம் இருக்கும். தலையில் ஒரு தழும்பு இருக்கும். 


Whatsapp மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....


Facebook மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....

No comments:

Post a Comment