( 14.04.2021 முதல் 14.05.2021 வரை )
மாத ஆரம்பத்தில் சூரியன் சந்திரன் சுக்ரன் ஆகியோர் மேஷத்தில் சஞ்சரிக்கின்றனர். புதன் மீனத்திலிருந்து மேஷத்திற்குப் பெயர்ச்சியாகிறார். செவ்வாய் ஏப்ரல் 25 முதல் மே 15 வரையில் திருவாதிரையில் சஞ்சரிப்பதாலும் மே மாதம் முதல் தேதி புதன் உதயமாவதாலும் மே 12 முதல் சுக்ரன் ரோகிணியில் உலவிடுவதாலும், புதனுக்கு முன்பாக சுக்ரன் உள்ளதாலும் நல்லமழையை எதிர்ப்பார்க்கலாம். விளைச்சலும் நன்றாக இருக்கும்.
செம்பு, இரும்பு. தாதுப்பொருட்களின் உற்பத்தி பெருகும். சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருக்கும், வங்கி, சட்டம் நீதி, கல்வி போன்ற துறைகள் முன்னேற்றமடையும். ஆளும் வர்க்கத்திற்கு பொதுமக்கள் ஆதரவு பெருகும்
ராகு மற்றும் செவ்வாயின் நிலையால் அராஜகம், வன்முறை, கலகம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் இழப்பும் ஏற்படக்கூடும். பங்குச் சந்தை வீழ்ச்சி அடையும்.
புதனின் ரிஷப ராசிப் பிரவேசத்தால் பொது மக்களுக்கு, பய பீதி ஏற்படும். சுக்ரனின் கிருத்திகா சஞ்சாரமும், யுரேனஸின் நிலையும் நல்ல மழையைப் பெய்விக்கும். கால்நடைகள் பாதிப்புக்குள்ளாகும், புதிய மருந்துகள் புழக்கத்திற்கு வரும்
மழை :ஏப். 16.-18, 21, 24-27, 29
மே : 1-5, 11-13
- பராசரம் பாலசுப்பிரமணியம் ( பஞ்சாங்க கணிதர் )
நட்சத்திர பலன்கள்
புனர்பூசம் சுவாதி அவிட்டம்
உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம். உடல் நலத்தில் கவனம் தேவை.
பூசம் விசாகம் சதயம்
லாபகரமான செயல்கள் நடைபெறும். பண வரவு இருக்கும்.
ஆயில்யம் அனுஷம் பூரட்டாதி
அதிக செலவுகள் ஏற்படும். பண விசயத்தில் கவனம் தேவை.
மகம் கேட்டை உத்திரட்டாதி
அலைச்சல்கள் மற்றும் நேரத்திற்கு சாப்பிட இயலாமை இருக்கும்.
அஸ்வினி கார்த்திகை பூரம் மூலம் ரேவதி
சந்தோஷமான நிகழ்வுகள் , வாய்க்கு ருசியான விருந்துகள் கிடைக்கும்.
ரோகிணி உத்திரம் பூராடம்
பொன் பொருள் நகை பண சேர்க்கை உண்டு.
பரணி மிருகசீரிஷம் அஸ்தம் உத்திராடம்
சண்டைகள் கலகங்கள் மனஸ்தாபங்கள் ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
திருவாதிரை சித்திரை திருவோணம்
காரிய தடைகள் மற்றும் அலைச்சல்கள் எற்படலாம். ஏதேனும் துக்க செய்திகள் கேட்க நேரிடலாம்.
Whatsapp மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....
No comments:
Post a Comment