Tuesday, 9 March 2021

தற்போதைய கிரக நிலவரப்படி உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் தெரியுமா ???

 ( 08.03.2021 முதல் 24.03.2021 வரை )

மேஷம் :

கணவன் / மனைவி உறவில் சந்தோஷங்கள் ஏற்படுதல். தொழில் மேன்மை. பதவி உயர்வு.  நண்பர்களால் மன மகிழ்ச்சி. நண்பர்கள் / சகோதர்கள் மூலம் பண வரவு. குடும்பத்தில் சுப நிகழ்சிகள் ஏற்படும். 


ரிஷபம் :

திடீர் பண வரவு, கணவன் / மனைவி உறவில் சந்தோஷங்கள் ஏற்படுதல். காதல் விஷயங்களில் மகிழ்ச்சி ஏற்படுதல். நகை வாங்குதல். அதிக செலவு செய்து அதன் மூலம் லாபங்கள் ஏற்படும்


மிதுனம் :

உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம். வீண் பழி மற்றும் அலைச்சல்கள் ஏற்படலாம். தொழில் மற்றும் வேலையில் பிரச்சனைகள் ஏற்படலாம். தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். குழந்தையால் மன கவலை ஏற்படும். சொல் பேச்சு கேட்க மாட்டார்கள். 


கடகம்  :

காரிய வெற்றி ஏற்படுதல். கல்வியில் முன்னேற்றம் ஏற்படுதல். சேவை மனப்பான்மை அதிகரிக்கும். குழந்தை அமைப்பு ஏற்படுதல், ஆடை ஆபரண சேர்க்கை. பண வரவு உண்டாகும். பயணங்கள் மூலம் லாபம் ஏற்படும். நண்பர்கள் ஆதரவு கிட்டும். நெடு நாள்கள் தடைப்பட்டு  இருந்த பணவரவு தற்போது கிடைக்கும்.


சிம்மம் :

கணவன் / மனைவி உறவில் சண்டைகள் கலகங்கள் ஏற்படுதல். உடல் நலம் பாதிப்புகள் ஏற்படலாம். வீண் ஆசைகள் உண்டாகும். துணிச்சல் முன் கோபம் ஏற்படும். புதிய நட்பால் அவமானம் ஏற்படலாம். 


கன்னி :

காரிய வெற்றி, பெண்களால் பண வரவு, வேலை கிடைத்தல், தொழில் மேன்மை. சுப நிகழ்ச்சிகள் நடைபெறுதல். இடம் நிலம் வாங்குதல்.


துலாம் :

குழந்தைகள் மற்றும் கணவன் / மனைவி உறவில் பிரிவு மனஸ்தாபம் ஏற்படுதல். குழந்தைகளால் தொல்லைகள் ஏற்படும். மனதிற்கு பிடிக்காத  இடமாற்றம் ஏற்படலாம் , தொழில் தடைகள்  மற்றும்  நஷ்டம் ஏற்படலாம். பெண்கள் மூலம் செலவு ஏற்படும்.


விருச்சிகம்:

பண வரவு , குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுதல். உறவினர்களை சந்தித்தல், மாமா மூலம் பண வரவு. தொழில் மேன்மை ஏற்படும்.


தனுசு :

புதிய நட்பு கிடைத்தல். நண்பர்களால்  மன பயம் ஏற்படலாம். அரசு மற்றும் எதிரிகள் வழியில் தொல்லைகள் ஏற்படலாம் . வேலையில் பிரச்சினை. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுதல். குல தெய்வ வழிபாடு நன்மை அளிக்கும்.


மகரம்:

கோபத்தால் வாக்குவாதம் ஏற்பட்டு அவமானங்கள் ஏற்படுதல். குடும்ப செலவு அதிகமாக ஏற்படுதல். தொழிலில் கெட்ட பெயர். பண உதவி கிடைக்கும். வீண் மன பயம் ஏற்படலாம்.


கும்பம்:

கெட்ட பெயர். பழி ஏற்படுதல். எதிர்பாலின நட்பு/ காதல் மூலம் மன நிம்மதி இழத்தல். பயணங்கள்/ இடமாற்றம் ஏற்படுதல். பண விரயங்கள் ஏற்படுதல். உறவுகளுடன் சண்டை சச்சரவுகள் ஏற்படலாம். மன பயம் ஏற்படும்.  குழந்தைகளால் கவலை மற்றும் பண செலவு. வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளால் தொல்லைகள் ஏற்படலாம்.


மீனம்:

காரிய தடை ஏற்படும். வீண் செலவுகள் அதிகரிக்கும். கண் சமந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். எதிர் பாலினருடன் சண்டை சச்சரவுகள் மற்றும் அவமானங்கள் ஏற்படலாம். எதிரிகள் தொல்லை, உடல் நல பாதிப்புகள் ஏற்படும். உடல் நலத்தில் கவனம் தேவை.  தோல் பிரச்சினை. மருத்துவ செலவு. கடன் பிரச்சனை ஏற்படலாம்.


மாசி மாதம் பிறந்தவர்கள் :

தந்தைக்கு நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைத்தல். இடம் / நிலம் மூலமாக பணவரவு கிடைத்தல். குழந்தைக்கு படிப்பில் ஆர்வம் அதிகரித்தல். 

Whatsapp மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....


Facebook மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....

No comments:

Post a Comment