Friday, 12 February 2021

மாசி மாதம் - 2021 பலன்கள்.

( 13.02.2021 முதல் 13.03.2021 வரை )

15-02-2021-ல் சூரியன் குரு இணைவது இயற்கைச் சீற்றத்தை உண்டாக்கும். இம்மாதம் 4.5 ஆம் தேதிகளில் குரு - புதனிடையே கிரக யுத்தம் ஏற்படுகிறது. மார்ச் 11 ஆம் தேதி செவ்வாய் ரோகிணியில் பிரவேசிக்கிறார். நிலநடுக்கம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும். 

நாடாளுமன்ற நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படும். சனியின் சஞ்சாரத்தால் அனுகூலமற்ற பருவநிலை ஏற்படும் ராணுவம், நீதி ஆகிய துறைகளில் பெரிய அதிகாரிகளின் இழப்பு ஏற்படும். (14-02-2021 -ல் புதன் குரு இடையே கிரக யுத்தம் ஏற்படுகிறது. நிலநடுக்கம் தோன்றும்) பங்குச் சந்தை உயரும்

மழை : பிப்ரவரி : 13 (பெருமழை). 15. 19. 21. 22. 25, 27 மார்ச் : 1. 4, 5. (நிலநடுக்கம்), 6. 10. 11. 14.

- பராசரம் பாலசுப்பிரமணியம் ( பஞ்சாங்க கணிதர் )

நட்சத்திர பலன்கள் 


பரணி மகம் கேட்டை

உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம். உடல் நலத்தில் கவனம் தேவை. 


கார்த்திகை பூரம் மூலம்

லாபகரமான செயல்கள் நடைபெறும். பண வரவு ஏற்படும். 


ரோகிணி உத்திரம் பூராடம்

அதிக செலவுகள் ஏற்படும். பண  விசயத்தில் கவனம் தேவை. 


மிருகசீரிஷம் அஸ்தம் உத்திராடம்

அலைச்சல்கள் மற்றும் நேரத்திற்கு சாப்பிட இயலாமை இருக்கும்.


திருவாதிரை சித்திரை திருவோணம் பூரட்டாதி

சந்தோஷமான நிகழ்வுகள் , வாய்க்கு ருசியான விருந்துகள் கிடைக்கும்.


புனர்பூசம் சுவாதி அவிட்டம் உத்திரட்டாதி

பொன் பொருள் நகை பண சேர்க்கை ஏற்படும்.


பூசம் விசாகம் சதயம் ரேவதி

சண்டைகள் கலகங்கள் மனஸ்தாபங்கள் ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். 


அஸ்வினி  ஆயில்யம் அனுஷம்

ஏதேனும் துக்க செய்திகள் கேட்க நேரிடலாம்.  காரிய தடைகள் எற்படலாம். 


No comments:

Post a Comment