Monday, 15 February 2021

நாளைய நட்சத்திர பலன்கள். நாள் 16.02.2021

( இன்று இரவு 7.26 முதல் நாளை இரவு 9.42 வரை )

சந்திராஷ்டமம் – பூரம்  .

சந்திராஷ்டமம் இருப்பதால் புது முயற்சிகளை தவிர்த்து, அன்றாட வேலைகளை மட்டும் செய்துவருவது நல்லது. பேசுவதை குறைத்துக்கொண்டு அமைதியாக இருப்பது மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வீண் விவாதங்கள் மற்றும் விமர்சனங்களை தவிர்க்கவும். துர்க்கை அம்மனை வழிபாடு செய்துவர நன்மை உண்டாகும்.

திருவாதிரை சுவாதி சதயம் 

நட்சத்திரகாரர்களுக்கு....


வேலைப்பளு அல்லது பலவித சிந்தனைகளால் தலைவலி ஏற்படலாம். அலைச்சல்கள் ஏற்படலாம். அரசு மற்றும் அரசு அதிகாரிகள் சமந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. அஜீரண கோளாறுகள் ஏற்படலாம். உணவு விசயத்தில் கவனம் தேவை. நாராயணன் வழிபாடு நன்மை அளிக்கும்.


பரணி பூராடம்  

நட்சத்திரகாரர்களுக்கு....


காரிய வெற்றி ஏற்படும் நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். நண்பர்கள் உறவுகள் வருகை ஏற்படும். காதல் விசயங்களில் மகிழ்ச்சி உண்டாகும். விருந்து உணவுகள் மற்றும் மன மகிழ்ச்சி ஏற்படும் நாள். 


புனர்பூசம் விசாகம் பூரட்டாதி 

நட்சத்திரகாரர்களுக்கு....


உடல் உஷ்ணம் ஏற்படலாம். அலைச்சல்கள் ஏற்படலாம், வீண் விவாதங்களை தவிர்க்கவும். பணம் சமந்தமாக பிரச்சனைகள் ஏற்படலாம். உதவி தேடி அலைய நேரிடலாம். முருகர் வழிபாடு சிறப்பு.


கார்த்திகை உதிரம் உத்திராடம் 

நட்சத்திரகாரர்களுக்கு....


எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். பண வரவு ஏற்படும். நண்பர்கள் உறவுகள் வருகை ஏற்படும். சினிமா போன்ற கேளிக்கை கொண்டாட்டங்களில் ஈடுபடுவீர்கள். தொழில் சிறப்பு ஏற்படும். தொழிலில் திறமையை வெளிப்படுத்தும் நாள். தொழில் சமந்தமாக எடுக்கும் முயற்சிகளில் லாபம் கிடைக்கும்.


பூசம் அனுஷம் உத்திரட்டாதி 

நட்சத்திரகாரர்களுக்கு....

மனதில் உற்சாகம் ஏற்படும் நாள். நண்பர்கள் உறவுகள் வருகை ஏற்படும். பண வரவு ஏற்படும். நல்லோர்களை சந்தித்தல் மற்றும் நல்ல காரியங்களில் ஈடுபடுவீர்கள். காரிய வெற்றி ஏற்படும் நாள்.


ரோகினி அஸ்தம் திருவோணம் 

நட்சத்திரகாரர்களுக்கு....

மனம் மிகுந்த சந்தோசங்களை அடையும் நாள். புதிய முயற்சிகள் மற்றும் பயணங்கள் ஏற்படலாம், பண வரவு ஏற்படும். நண்பர்கள் உறவுகள் வருகை ஏற்படும், சினிமா போன்ற கேளிக்கை கொண்டாட்டங்களில் ஈடுபடும் நாள். விருந்து உணவுகள் மற்றும் காதல் விசயங்களால் மகிழ்ச்சி அடையும் நாள்.

 

ஆயில்யம் கேட்டை ரேவதி 

நட்சத்திரகாரர்களுக்கு....

வீண் அலைச்சல் ஏற்படலாம். தெண்ட செலவுகள் ஏற்படலாம். பண விசயங்களில் கவனம் தேவை. கொஞ்சம்  சிரம பட்டு காரியங்களை செய்து முடிப்பீர்கள். மன சஞ்சலம் ஏற்படலாம். வீண் விவாதங்கள் மற்றும் விமர்சனங்களை தவிர்க்கவும். முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நலம். எள்ளு உணவை எடுத்துக்கொள்ளலாம். ஆஞ்சிநேயர் வழிபாடு சிறப்பு. 


மிருகசிரிஷம் சித்திரை அவிட்டம் 

நட்சத்திரகாரர்களுக்கு....

ஒருவித எரிச்சலான மன நிலை மற்றும் சோம்பேறித்தனம் ஏற்படலாம். சாப்பிட பிடிக்காமை அல்லது அஜீரணம் ஏற்படலாம். புதிய நட்பில் கவனம் தேவை. அலைச்சல்கள் ஏற்படலாம்.  வீண் விவாதங்களை தவிர்க்கவும். பண விசயங்களில் கவனம் தேவை. தொழிலில் கவனம் தேவை. துர்க்கை அம்மனை வழிபாடு செய்வது சிறப்பு. 


அஸ்வினி மகம் மூலம் 

நட்சத்திரகாரர்களுக்கு....


உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம். வண்டி வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. எதிர்பாலினருடான விவாதங்களை தவிர்க்கவும். கோபத்தை குறைத்து பொறுமை கடைபிடிக்கவும். பேச்சில் நிதானம் தேவை. முன்பு தொலைந்த ஒரு பொருள் இன்று கிடைக்கப்பெறலாம். அஜீரணம் ஏற்படலாம். உணவு விசயத்தில் கவனம் தேவை. விநாயகர் வழிபாடு நன்மை அளிக்கும். 

No comments:

Post a Comment