மனிதன் வாழ்க்கைக்கு மட்டும், அவன் கருவில் உருவம் பெறுவதற்குமே நவ கிரகங்களின் அருள் தேவை. ஒரு பெண் 10 மாதங்கள் கருவை சுமக்கிறாள். அந்த 10 மாதங்கள் 9 கிரகங்கள் சேர்ந்து தன் பணியை துவங்கி விடுகின்றன.
வாருங்கள்.... ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கிரகமும் என்னென்ன பணிகளை செய்கின்றன என்று பார்ப்போம்.
கர்ப்பம் தரித்த முதல் மாதத்தில் கரு திருவடிவமாகவும் அதன் அதிப தி சுக்கிரனாகவும் அமைவார்கள்.
2வது மாதத்தில் கரு கடினமானதாக உருமாற அதன் அதிபதி செவ்வாய்.
3வது மாதத்தில் கரு வளர்ந்துள்ள நிலையில் அதன் அதிபதி குரு.
4வது மாதத்தில் கருவில் எலும்பு உருவாகும் நிலையில் அதிபதி சூரியன்.
5வது மாதத்தில் கருவில் தோல் உருவாகும் நிலையில் அதிபதி சந்திரன்.
6வது மாதத்தில் குழந்தையாகி முடி உருவாகும் நிலையில் அதிபதி சனி.
7வது மாதத்தில் குழந்தைக்கு நினைவு உண்டாகும் நிலையில் அதிபதி புதன்.
8வது மாதத்தில் குழந்தைக்கு பசி தாகம் இவகளின் உணர்வு ஏற்படும் நிலையில் அதன் அதிபதிகள் சூரியன், சந்திரன்.
9வது மாதத்தில் குழந்தக்கு பசி தாகம் இவகளின் உணர்வு ஏற்படும் நிலையில். அதன் அதிபதிகள் சூரியன், சந்திரன்.
10வது மாதத்தில் குழந்தைக்கு பசி தாகம் இவகளின் உணர்வு ஏற்படும் நிலையில் அதன் அதிபதிகள் சூரியன், சந்திரன்.
அந்தந்த மாதத்திற்குரிய கிரகம் பலமானால், குழந்தயின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படா. அந்த கிரகங்கள் பலமில்லாமல் இருந்தால் வளர்ச்சி பாதிக்கப்படும். மூன்றாவது மாதத்திற்குரிய கிரகம் குரு பலமின்றி இருந்தால் அந்த மாதம் குறைப்பிரசவமாகிவிடும். அதற்குப்பின் உள்ள மாதத்திற்குரிய கிரகம் பாதிக்கப்பட்டிருந்தால் மற்ற நிலைகளில் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படலாம். குழந்தை உண்டான காலத்தில் சூரியன் பலமானால் தந்தையின் உருவ அமைப்பையும் சந்திரன் பலமானால் தாயின் உருவ அமைப்பையும் கொண்டதாக அமையும்.
சுகப்பிரசவம்:-
பிரசவம் என்பதே மறுபிறவிக் கொப்பாகும் என்பார்கள். அது சுகமானால் நலம்தானே!.
சுபர் லக்கணத்திலும், (அ) சந்திரனுக்கு 2,4,6,7,9,10இல் சுபர் இருந்தாலும், அவர்கள குருபார்த்தாலும் சுகப்பிரசவமாம்.
https://chat.whatsapp.com/IaiK8oDZfIf3FtMNZNByEn
No comments:
Post a Comment