நவகிரகங்களில் சனிபகவான் நீதி தவறாதவர். அவரவர் கர்மவினைகளுக்கு உரிய பலனை தவறாமல் வழங்குபவர். கிரகங்களிலேயே ஈஸ்வர பட்டம் பெற்றவர் சனிபகவான் ஒருவரே. பொதுவாக சனிப் பெயர்ச்சி என்றாலே எல்லோரும் பயப்படுவார்கள். அப்படி பயப்படவேண்டிய அவசியமே இல்லை. சனி கிரகத்தினால் பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில், பாதிப்பில் இருந்து விடுபட பல எளிய பரிகாரங்கள் உள்ளன.
ஒருவருக்கு சனி தசை வந்து விட்டால், அவருக்கு சந்தேக புத்தி வந்துவிடுகிறது. யார் சொல்வதையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். குறிப்பாக அஷ்டமத்துச் சனி மிகவும் கஷ்டப்படுத்திவிடும். ஏழரைச் சனியின் பாதிப்பை விடவும் அஷ்டமத்து சனி மிக அதிக பாதிப்பை ஏற்படுத்துவார். அஷ்டம சனி நடப்பவர்கள் சனியினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து விடுபட இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் நியதிகளைக் கடைப்பிடித்தால், பாதிப்புகளின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.
சனி தசை நடக்கும் போது எந்த செயல் செய்தாலும் தாமதமாகும். அதற்காக கோபப்படக் கூடாது. பொறுமையாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும்.
சனி தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சனி தசை அல்லது சனி அந்தர் தசையின் போது:
சனியின் கடவுளான அனுமனைத் தினமும் வழிபடவேண்டும்.
தினசரி அனுமன் சாலிசா அல்லது அனுமான் ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.
1 ) ஒரு கைப்பிடி பச்சரிசியை எடுத்துக்கொண்டு, அதை நன்றாக பொடி செய்துகொள்ளவேண்டும். பிறகு சூரியனை வழிபடவேண்டும்.
சூரியனை வழிபட்ட பிறகு குளக்கரையிலோ மரத்தின் அடியிலோ உள்ள விநாயகரை மூன்றுமுறை வலம் வந்து வழிபட்டுவிட்டு, பொடித்த பச்சரிசி மாவை தரையில் போடவேண்டும். அப்படி போடும் மாவை எறும்புகள் எடுத்துச் செல்லும். குறிப்பாக வன்னிமரத்தின் அடியில் இருக்கும் விநாயகரை வலம் வருவது மிகவும் விசேஷம். பச்சரிசி மாவை எறும்புகள் மழைக்காலத்தில் பயன்படுத்துவதற்காக சேமித்து வைத்துக்கொள்ளும். வீட்டு வாசலில் பச்சரிசி மாவினால் கோலம் போடவேண்டும் என்று சொல்வதுகூட இதற்குத்தான். இந்த பரிகாரத்தை எப்போதுமே தொடர்ந்து செய்வது மிகவும் நல்லது.
2 ) தினமும் காகத்துக்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.
சனிக்கிழமைதோறும் சனிபகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடவும்.
3) கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.
வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமைதோறும் சாற்றி வணங்கி வழிபடவும்.
4) சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.
சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும்.
5) ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.
தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.
சனி மூல மந்திர ஜபம்:
"ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ",
40 நாட்களில் 19000 முறை சொல்ல வேண்டும்.
சனி ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.
நீலாஞ்ஜன ஸமாபாஸம்
ரவிபுத்ரம் யமாக்ரஜம்!
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி சனைச்சரம்!!
தமிழில்,
சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்!
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா!!
தொண்டு:
சனிக்கிழமையன்று நன்கொடையாக ஒரு எருமை அல்லது எள் விதைகள் கொடுக்கவேண்டும்.
நோன்பு நாள்: சனிக்கிழமை.
பூஜை: அனுமான் பூஜை.
ருத்ராட்சம்: 14 முக ருத்ராட்சம் அணியவேண்டும்.
சனி காயத்ரி மந்திரம்
காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி|
தந்நோ மந்த: ப்ரசோதயாத்||
சனி தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் பாலா காண்டத்தின், 30 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும்.
அனைத்து சனி தொடர்பான பிரச்சனைக்கும் தசரத சனி ஸ்தோத்திரம் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.
https://chat.whatsapp.com/IaiK8oDZfIf3FtMNZNByEn
No comments:
Post a Comment