Monday, 18 January 2021

வாழ்க்கை தத்துவங்கள்.!!

 * காதலிப்பதால் ஏற்படும் நன்மையை விட அக் குறுகிய காலத்தில் ஏற்றப்படும் தீமை அதிகம்...நான் காதலித்தவனும் அல்ல காதலிப்பவனும் அல்ல..

* கனவே உன் கடலில் என்னை முழ்கடித்து விடாதே எனக்கு நீந்த தெரியும். அவ்வாறு நான் நீந்தித் தப்பி விட்டால் நீ தோற்று விடுவாய்.

* நம்பிக்கை நற்கனவை நனவாக்கிவிடும். அவநம்பிக்கை உன் வாழ்க்கையையே கனவாக்கிவிடும்.....

* ஒருவரின் அன்பு பற்றி நீ அறிய வேண்டுமா.. ஒரு முறை பிரிவை சந்தித்து விடு...

* பொய்யை அறிந்து கொள்வதை விட உண்மையை அறிந்து கொள்வது இலகு.

* தோல்வி ஏற்ப்படின் தோற்று விட்டோமே என்று எண்ணாதே நீ ஒரு நாள் வென்று விடுவாய், ஆனால் நேரத்தை வீணாக்காதே அது உன் தோல்வியை பல மடங்கு அதிகரித்து விடும்.

* உனது பொறுமையே உன் வயதினை சித்தரிக்கும்..

* இரவில் கண்ணை முடிய போது கனவுகள் தோன்றுகிறது. உண்மையில் நடப்பது போன்று மனதில் தோன்றும். கண் விழித்த பிறகுதான் தெரிகிறது கண்டது கனவு என்று. அக் கனவு நிஜமாக வேண்டுமெனின் நம் முயற்சி பல மடங்காக வேண்டும். கனவு காண் அது நற்கனவாயின் நிகழ்த்தி முடி....

* தோல்வி உன்னை சந்திக்க சிந்திக்கிறதா? ஒரு கணம் நீ ஏன் தோற்றாய் என்று சிந்தி. அதன் பிறகு உன்னை தோல்வி சந்திக்க சிந்திக்கும்.

* அன்பு என்பது சிறந்த ஒன்று அது அழிவதற்கு நீங்கள் காரணம் ஆகி விடாதீர்கள்..


.* புரியாத வாழ்க்கைப் பாதைகள்....... தொடரும் பயணங்கள் முடியும் இடம் தெரியாமல் தவிக்கும் உள்ளம்.......

* அழுவதற்கு எனக்கு மனம் இல்லை காரணம் நான் அழுதால் என் தாய் அழுது விடுவாளே என்று..

* உனக்கு அடுத்தவனை பிடிக்கவில்லையா ஒதுங்கிகொள். உன்னைப் பிடிக்கவில்லையா நீ தலை சிறந்தவன் என நிரூபித்து விடு. அதன் பின் அவர்கள் தாமே வருந்துவார்கள் உன்னை எண்ணி..

* வானம் பூமியைத் தொட்டால் அது அதிசயம் ஆனால் மனிதன் வானத்தை தொட்டால் அது சாதனை. அதிசயத்தை பார்த்துக் கொண்டிருப்பதை விட வானத்தை தொட முயற்சிப்பவனாக இருந்தால் அதுவே உன் வாழ்வை வெற்றி பயணத்தில் தொடக்கி வைக்கும்...

* வாழ்க்கையில எவ்வளவு தான் உச்சிக்கு போனாலும் கடைசில ஒரு பெட்டிக்க தான் முடியும்.

* படிப்பதற்காக எல்லா சந்தர்ப்பங்களையும் இழக்கத் தயாராக இருங்கள். எந்த சந்தர்ப்பத்திற்காகவும் படிப்பை இழக்கத் தயாராகி விடாதீர்கள்! எனில் நீங்கள் எங்கிருந்து வந்தாலும் எங்கு வேண்டுமானாலும் போகலாம்...


* இன்பம் என்பது கானல் நீர் போன்றது ஒரு சில மணித்துளிகளுக்கு மட்டும் இருக்கும் ஆனால் துன்பம் என்பது வாழ்க்கையில் மரம் போன்று வளர்ந்தே செல்லும்...கானல் நீரைக் கண்டால் எம் மனதில் பூரிப்பு தோன்றும் அது போன்று கிடைக்கும் இன்பத்தை நீ வீணாக்காதே...வாழ்வில் துன்பம் வருவது சகஜமே...அதைக் கண்டு துவண்டு விடாதே பிறகு அது உன்னை வாழ விடாது.......( கானல் நீர் குளிர் நாடுகளில் தெரிவதில்லை காரணம் குளிர் நாடு என்பதால்.)


* பொறுமை, விட்டு கொடுத்தல் இரண்டும் மிக முக்கியம் மனித வாழ்வில்... ஆனால் இவை இரண்டிற்கும் எல்லைகள் உண்டு.... அன்புக்கு மட்டும். என்றும் எல்லையும் இல்லை எதிரியும் இல்லை... மற்றவரின் பொறுமையை சோதிக்காதீர் அவ்வாறு சோதித்து பொறுமை இழந்தால் பிரச்சனை நமக்கு தான் அதிகம்..


* கலகலப்பாய் இருங்கள் வேண்டாம் என்று ஒரு போதும் உங்களுக்கு சொல்லவில்லை. ஆனால் மற்றவனை கலங்கப்படுத்தாது இருங்கள் ..அவ்வாறு இருப்பீர்கள் ஆனால் நீங்கள் என்றுமே புன்னகை நிரம்பிய முகத்தோடு இருப்பீர்கள்....


* நாம் எப்போதும் மேலே போகும் விமானத்தை அண்ணார்ந்து பார்த்து கழுத்தை நோக வைப்பதை விட நேரே பார்த்து எமது முன்னேற்றத்தை பார்த்திருந்தால் என்றோ வாழ்க்கையில் முன்னேறியிருப்போம். இது மேல் அண்ணார்ந்து பார்க்கும் விமானத்துக்கு மட்டும் அல்ல அடுத்தவனை பார்த்து செய்வதற்கும் பொருந்தும்...


* நல்ல நண்பன் உனக்கு வேண்டும் ஆனால் நீ நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது நீ உண்மையாகவும் இருக்கவேண்டும்..( நீ உனது நண்பனை பற்றி கதைப்பதாக இருந்தால் அவன் உன்னருகே இருக்கும் போது கதை அவன் சென்ற பிறகு கதைக்காதே அவ்வாறு கதைப்பாயாக இருந்தால் நீ உனது நண்பனை இழந்து விடுவாய்)


* நட்பின் இலக்கணம் தெரிய வேண்டுமானால் உங்கள் நட்பை நேசியுங்கள் அதன் இலக்கணம் மட்டுமல்லாது அதன் ஆழத்தையும் புரிந்து கொள்ளவீர்கள்.


* எதையும் தூரத்தில் இருந்து பார்த்து நம்பாதீர்கள்.........அங்கே என்ன நடக்குது என்ன நடந்தது என்று தெரியாமல் கதைக்காதீர்கள்.............இதுக்கு தான் சொல்வார்கள் காதால் கேட்பதும் பொய் கண்ணால் பார்ப்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்று..


* கடன் கொடுங்கள் அதை திரும்பப் பெற்று விடுவீர்கள் ஆனால் களவு கொடுத்து விடாதீர்கள் அதை திரும்பப் பெற முடியாது...


* கண்கள் எமது முதுகை பார்த்ததில்லை கால்த் தடங்கல் கூட மாறிப் பதிவதில்லை ஆனால் மனிதன் மட்டும் மாறுகிறான் காரணம் மட்டும் புரியவில்லை ஏனோ ..


* நட்பு என்பது என்றும் அழியாச் சொத்து குடும்பம் என்பது பெரிய சொத்து ஆசிரியர் என்பது கிடைத்த சொத்து இச் சொத்துக்களை இழந்து விடக் கூடாது.......



பின் குறிப்பு: 

Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.

No comments:

Post a Comment