பஞ்சாங்கம் என்ற ஐந்து அங்கங்களில் யோகம் என்ற வடமொழி சொல்லுக்கு சேர்க்கை என்று பொருள்படும். இதில் சில வகைகள் உண்டு. சூரியன் மற்றும் சந்திரன் செல்லும் தூரங்களை சேர்த்துப் பார்ப்பது ஒரு யோகம். இது ஒருவரின் பிறந்தநாளின் அடிப்படையில் 27 வகைப்படும்.
இது ஒவ்வொருவரது ஜாதகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். இவற்றை வைத்து ஒருவருக்கு எந்த நட்சத்திரம் மிகவும் நன்மை தரும். எந்த நட்சத்திரம் தீமை தரும் என்று அறியலாம்.
கீழே கண்ட யோகங்களில் பிறந்தவர்கள் அதற்கு நேராக உள்ள யோக நட்சத்திரத்தில் செய்யும் காரியங்கள் வெற்றி அடையும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குறிப்பிட்ட யோகத்தில் பிறந்தவர்களுடன் நட்புடன் இருப்பார்கள். ஆனால் அதற்கு அடுத்துள்ள அவயோக நட்சத்திரத்தில் செய்யும் காரியங்கள் தோல்வியில் முடியும் அல்லது பிரச்சினையில் சிக்கும். அவயோக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுடன் பழகுவதில் கவனம் தேவை.
No comments:
Post a Comment