Monday, 2 November 2020

குரு பெயர்ச்சி எளிய பரிகாரங்கள்.!!

குரு பெயர்ச்சியால் பாதிப்பு அடையும் ராசிகள்:

மேஷம்
மிதுனம்
சிம்மம்
துலாம்
விருச்சிகம்
மகரம்
கும்பம்

குரு பெயர்ச்சி பலன்களுக்கு
click here
https://agasthesha.blogspot.com/2020/11/32.html

குரு பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், அவர்கள் பிறக்கும் போது நல்ல தசை இருந்தால் குரு சாதகமான பலன்களையே தருவார். அதனால் எந்தப் பெயர்ச்சியாக இருந்தாலும், அவரவர் தசா புக்தியை முதலில் கருத்தில் கொள்ள வேண்டும். தசா புக்தி நன்றாக இருந்தால் தற்கால கிரக அமைப்புகளால் மொத்தமாக கெடுபலன்கள் ஏற்படாது.

பொதுவாக குரு கல்விக்கு உரிய கிரகமாகும். குருபெயர்ச்சியால் பாதிக்கப்படும் நபர்கள்/ராசிக்காரர்கள் பழைய பள்ளிகளை புதுப்பிக்க உதவலாம். ஏழை மாணவர்களின் கல்விச் செலவை ஏற்கலாம். அப்படி முடியாமல் போனால், பணம் வாங்காமல் டியூஷன் எடுக்கலாம். எழுதப், படிக்க சொல்லித் தந்த ஆசிரியர்களைச் சந்தித்து நலம் விசாரிக்கலாம். அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளைச் செய்யலாம்.
எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுப்பது, ஏழை மாணவர்களுக்கு உரிய ஜாதிச் சான்றிதழ் பெற்றுத் தருவது போன்ற உதவிகளும் குருவால் ஏற்படும் பாதிப்பில் இருந்து மீள உதவும். ஒருவர் கல்வி பெறுவதற்கு ஏதாவது ஒரு வகையில் உதவினால் அது குருவை மகிழ்ச்சியடையச் செய்யும்.

அகதிகளுக்கு உதவலாம். வேதங்கள், உபநிடதங்களைப் படிப்பது மட்டுமின்றி அந்த நூல்களைப் புதுப்பிக்கவும், மதநல்லிணக்கம் தொடர்பான நூல்கள் வெளிவர உதவுவதும் நல்ல பரிகாரமாகும்.

பசு மாட்டிற்கு மஞ்சள் வாழைப்பழம் கொடுத்தல். அகத்திக்கீரை, கோதுமை போன்ற உணவு அளித்தல். அது உணவு உண்ணும் நேரத்தில் தலைப்பகுதியை தடவி கொடுத்தல்.

மேற்கூறியவற்றை மனநிறைவுடன், உண்மையாகச் செய்யும் போது குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும் நிலையில் உள்ளவர்கள், ஓரளவு பாதிப்பின்றித் தப்பலாம். நல்ல பலன்கள் பெறுபவர்கள் கூடுதலாக சில சலுகைகளை குருவிடம் இருந்து பெறலாம்.

குரு (வியாழன்) தொடர்பான பிரச்சனைகள் மற்றும் குரு தசை அல்லது குரு அந்தர் தசையின் போது,
குருவின் கடவுளான சிவபெருமானைத் தினமும் வழிபடவேண்டும்.
தினசரி ஸ்ரீ ருத்ரம் படிக்க வேண்டும்.

குரு மூல மந்திர ஜபம்:
"ஓம் ஜ்ரம் ஜ்ரீம் ஜ்ரௌம் ஷக் குரவே நமஹ",

40 நாட்களில் 16000 முறை சொல்ல வேண்டும்.

குரு ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.

தேவானாம் ச ரிஷஷீணாம் ச
குரும் காஞ்சன ஸந்நிபம்!
புத்தி பூதம் த்ரிலோகேசம்
தம் நமமாமி ப்ருஹஸ்பதிம்!!

தமிழில்,

குணமிகு வியாழக் குருபகவானே
மணமுடன் வாழ மகிழ்வுடனருள்வாய்!
பிருகஸ்பதி வியாழப் பரதகுரு நேசா
கிரக தோஷமின்றிக் கடாஷித் தருள்வாய்!!

வியாழனன்று நன்கொடையாக குங்குமப்பூ அல்லது மஞ்சள் அல்லது சர்க்கரை கொடுக்கவேண்டும்.

நோன்பு நாள்: வியாழன்.

பூஜை: ருத்ர அபிஷேகம்.

ருத்ராட்சம்: 5 முக ருத்ராட்சம் அணியவேண்டும்.

குரு காயத்ரி மந்திரம்:
வருஷபத்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி|
தந்நோ குரு: ப்ரசோதயாத்||

குரு தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் சுந்தர காண்டத்தின், 11 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும்.


பின் குறிப்பு:

Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.

https://chat.whatsapp.com/JZYkatdPTtZAPDP5HQx2Hf


No comments:

Post a Comment