ஒரு படத்தில் வடிவேலுவிடம் ஒரு ஜோதிடர் சொல்லுவார். உனக்கு மிருக தோஷம் என்று.... பிறகு ஒவ்வொரு மிருகத்திடமும் வடிவேலு தாக்கப்படுவதை காமெடி யாக சொல்லி இருப்பார்கள்.
மனிதர்களில் பலர் பாம்பு தேள் மாடு நாய் என்று தாக்கப்பட்டு இறப்பதை பார்க்கிறோம். மேலும் சிலர் அரிதாக காட்டு விலங்கினாலும் இறக்கின்றனர்.
சிலருக்கு நாய் என்றாலே ஆகாது. அவரை மட்டும் எங்கு இருந்தாலும் கூட்டத்தில் குறி வைத்து தாக்கும்.
இப்படி பலர் விலங்குகளால் பாதிப்பு அடைகின்றனர்.
இதற்கு ஒரே காரணம் விலங்குகளை சக உயிராக மதிக்காமல் போனது தான் காரணம்.
சிலர் செடியை தின்கிறது என்று பசு மாட்டை அடிப்பது. நாயை கல் கொண்டு எரிவது போன்று விலங்கினங்களை துன்புறுத்துவது ஒரு பாவ செயலாகும்.
ஒரு விலங்கை துன்புறுத்தியவர் அதே விலங்காளோ அல்லது வேறு ஏதோ ஒரு விலங்காளோ நிச்சயம் பாதிப்பு அடைவார்.
மனிதர்களுக்கு உதவுவது மட்டும் புண்ணியம் அல்ல. விலங்குகளுக்கு உதவுவதும் புண்ணியம் தான்.
வீட்டு வாசலில் வட மேற்கு திசையில் பறவைகளுக்கு தண்ணீர் வைப்பதன் மூலம் புண்ணியம் பெறுவீர்கள். அந்த புண்ணியம் உங்களை எந்த விலங்குகளும் தீண்டாமல் காக்கும்.
மனிதனாக இருந்து கொண்டு யாருக்கு உதவினால் நமக்கு லாபம் எனும் நோக்கிலேயே உதவுவதை விட்டுவிட்டு, இல்லாதோர் இயலாதோர் என சிறு பூச்சிகளுக்கு கூட உதவி செய்யும் மனப்பாங்கு வந்து விட்டால் இந்த உலகில் நீங்கள் சகலமும் பெற்று சௌபாக்கியமாக வாழ்வீர்கள்.
பின் குறிப்பு:
Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.
https://chat.whatsapp.com/JZYkatdPTtZAPDP5HQx2Hf
No comments:
Post a Comment