Saturday, 31 October 2020

12 வகையான திருமண பொருத்தங்கள்.!!

ஒவ்வொரு ராசி நட்சத்திரத்துக்கும் ஒரு குணங்கள் உண்டு. அதை வைத்து நட்சத்திர பொருத்தங்கள் பார்க்கப்படுகின்றன. ஜோதிடர்கள் சொல்லி கேட்டு இருப்பீர்கள். 8 பொருத்தம் இருக்கு. 10 பொருத்தம் இருக்கு னு. ஆனால் அவை என்னனென்ன. அதன் விளக்கம் என்ன என்பதை பெரும்பாலானோர் அறிந்து இருக்க மாட்டீர்கள். வாருங்கள். அவற்றை பார்ப்போம். 


தினப் பொருத்தம் :

மணமக்களின் ஆயுள் ஆரோக்கியம் இவை இரண்டையும் குறிப்பிடுவது. இது முக்கியம்.


கணப்பொருத்தம் :

இது குணநலன் பண்பு நலனைக் குறிக்கும் இது மூன்று வகை தேவகானம் மனித கனம இராட்சஷ கணம். 27 நட்சத்திரங்கலியா முன்று பிரிவாகப் பிரித்து இன்ன நட்சத்திரத்தில் பிறந்தவர் இன்ன கணம் என்று முனிவர்கள் வகுத்துள்ளார்கள். இது முக்கியம். குண நலம் வாழ்விற்கு எத்துணை அவசியம் என்பது நீங்கள் அறிவீர்கள்.


மாகேந்திரப் பொருத்தம் :

பொருளாதார வளமாக அமைந்திட இப் பொருத்தம் வேண்டும்.


ஸ்திரீ தீர்க்கம் :

மணமகள் தீர்க்க சுமங்கலியாய் வாழ்ந்து சுமங்கலியாயாகவே வாழ்வு நிறைவு பெறுவாள் என்பதாகும்.


யோனிப் பொருத்தம் :

இது மிக முக்கியமானது. பெரும்பான்மையான மனிதர்கள் உடல் தேவையே வாழ்வு என மயங்குகின்றனர். உடல் தேவையைப் பூர்த்தி செய்ய இப் பொருத்தம் வேண்டும். வேறு ஏதோ குறிக்கோளுக்காக இந்த வாழ்வை இறையருள் தந்துள்ளது என்பதை அறிந்து கொள்ள மனிதனை இழுக்கும் ஒரு மாயப் பொறி என்பதனை அனுபவஸ்தர்கள் அறிவார்கள். எனினும் உடலுடன் கூடிய வாழ்வில் தான் குறிக்கோளை அடைய முடியும். வாலிபக் காலத்தில் உடலில் கட்டளைக்கு மனக் ஒத்துழைத்து செயற்படும். அறிவு ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்க்கும். சில காலம் சென்ற பின் இயற்கைச் சட்டப்படி உடல் தளரும் ஞானம் பிறக்கும் அறிவுப்பூர்வமாக சிந்திப்பார். கடந்த கால வாழ்வை எண்ணி கலி விரக்கம் கொள்வார். வாழ்வில் இளமையில் பிழையும் நடுப் பகுதில் போராட்டமும் முதுமையில் கடந்த கால வாழ்வை எண்ணி கழிவிரக்கம் கொள்வதுதான் பெரும்பான்மையானவர்களின் வாழ்வாக இருக்கிறது. விதிவிலக்காக தற்சோதனை செய்து வாழ்வின் குறிக்கோளை உணர்ந்து மரணமில்லாத வாழ்வை அடைந்தவர் பலருண்டு. இதைக்கூறிடும் தகுதி எனக்கு உண்டு. ஏனெனில் பல்லாயிரக்கான மானிடரின் தனிப்பட்ட வாழ்வை அறியும் சூழ்நிலையில் என்பணி அமைந்தது தான் காரணம். எனவே மனிதன் மனிதப் பண்போடு பிற்காலத்தில் வாழ்ந்திட இப்பொருத்தம் துணை செய்யும். எனவே இது முக்கியம்.


இராசிப் பொருத்தம் :

இது வம்ஸ விருத்திக்காக. இது முக்கியம்.

இராசி அதிபதி பொருத்தம் :

சந்ததிகள் விருத்திக்காகவும் ஒருவர்க்கொருவர் நேசமுடன் வாழ வழி வகுப்பதற்காகவும் இது உதவும்.


வசியப் பொருத்தம் :

மணமக்களின் நேச வாழ்விற்காக


ரஜ்ஜிப்பொருத்தம் :

இது உயிர்நாடி போன்ற பொருத்தமாகும். வாழ்வில் முக்கியமான ஆயுள் புத்தோஷம் பிரயாணத்தில் தீமைக் பொருள் இழப்பு இவைகளைப் குறிப்பிடுவது. இதற்கு தீர்க்க சுமங்கலிப் பொருத்தம் என்று பெயரும் உண்டு இப்பொருத்தம் இல்லை எனில் மனம் முடிக்கக் கூடாது. இது மிக முக்கியம்.


வேதைப் பொருத்தம் :

துக்கத்தை நீக்கக்கூடிய பொருத்தம்.


நாடிப் பொருத்தம் :

இந்த பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும். அதாவது, வாழையடி வாழையாக குடும்பம் தழைக்கும்.


விருட்சப் பொருத்தம் :

ஆண், பெண் இருவரில் யாருக்காவது பால் மரமாக இருந்தால் புத்திர பாக்கியம் உண்டு.


மிக முக்கியமாக இருக்க வேண்டிய பொருத்தங்கள்.!


தினப்பொருத்தம்

கனபோருத்தம்

யோனிப்போருத்தம்

ராசிப்போருத்தம்

ரஜ்ஜிப்பொருத்தம்


இவை பொதுவாக பார்க்கப்படும் நட்சத்திர பொருத்தங்கள் தான். மிக முக்கியமாக பார்க்க வேண்டியது ஜாதக ரீதியான பொருத்தங்கள் மட்டுமே. 


நட்சத்திர பொருத்தம் 10 இருந்தும் ஜாதக கட்டம் பொருந்தி வர வில்லை என்றால் பிரச்சினை தான். அதுபோல நட்சத்திர பொருத்தம் இல்லாமல் , ஜாதக கட்டம் பொருந்தி வந்தால் திருமணம் செய்து கொள்ளலாம் . 


ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றாலும் ஜாதகத்தில் ஆயுள் பலம் பார்க்க வேண்டும். ராசி பொருத்தம் இல்லை என்றால் ஜாதககத்தில் குழந்தை அமைப்பு பார்க்க வேண்டும். நட்சத்திர பொருத்தம் இல்லாமல் இருந்தாலும், ஜாதக அமைப்பு நல்ல படியாக இருந்தால் திருமணம் செய்து கொள்ளலாம். 


மேலும் யாருக்கும் 100 % பொருத்தங்கள் இருந்து விடாது. முக்கியமான சில பொருத்தங்கள் மட்டும் பார்த்துட்டுவிட்டு, மீதியை விட்டு கொடுக்கும் குணத்தால் மட்டுமே திருமண வாழ்கையை சிறப்பாக அமைக்க முடியும்.



பின் குறிப்பு:

Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.

https://chat.whatsapp.com/IaiK8oDZfIf3FtMNZNByEn

Or

https://chat.whatsapp.com/JZYkatdPTtZAPDP5HQx2Hf


1 comment: