Saturday, 4 July 2020

ராகு கேது பெயர்ச்சி 2020 உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் தெரியுமா.??

நாள் : 01.09.2020.
நேரம்: மதியம் 2.24p.m

மேஷம் :
பண வரவில் பிரட்சணைகள் ஏற்படுதல். விரயங்கள் ஏற்படுதல். இடமாற்றம் ஏற்படுதல். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு களவு ஏற்படலாம். பேச்சில் கவனம் தேவை.

ரத்த காயங்கள் / ரத்த சமந்தமான பிரட்சணைகள் ஏற்படலாம்

ரிஷபம் :
தாயார் உடல் நிலை பாதிப்பு. மன குழப்பம். மன பயம் ஏற்படுதல்.

உடல் நல பாதிப்புகள். கணவன் / மனைவி உறவில் சண்டைகள் ஏற்படுதல். கலகங்கள் உண்டாகுதல். எதிரிகள் தொல்லைகள். அலைச்சல்கள் ஏற்படலாம்.

மிதுனம் :
இடமாற்றம் ஏற்படுதல். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். தியாகங்கள் செய்ய நேருதல்.

பொன் பொருள் நகை பண சேர்க்கை ஏற்படும். அதே நேரத்தில் செலவுகளும் இருக்கும். எதிரிகள் தொல்லைகள் மற்றும் மன பயம் நீங்கும்.

கடகம் :
பண வரவு ஏற்படும். கணவன் / மனைவி உறவில் மகிழ்ச்சி ஏற்படுதல். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவர். காதல் விவகாரங்கள் வெற்றி அடையும். திருமண வாய்ப்புகள் கூடி வரும்.

உடல் நல பாதிப்புகள். குழந்தைகளால் மன கவலைகள் ஏற்படலாம். எதிரிகளால் மன பயம் ஏற்படுதல். நண்பர்களிடத்தில் கவனம் தேவை.

சிம்மம் :
வேலையில் பிரட்சணைகள் ஏற்படுதல். கெட்ட சகவாசங்கள் ஏற்படலாம். புதிய நட்பில் கவனம் தேவை. கௌரவ பாதிப்புகள் ஏற்படலாம். வயிறு சமந்தப்பட்ட பிரட்சணைகள் ஏற்படும். ஜலதோஷம் சளி தொந்திரவுகள் ஏற்படலாம். சிலருக்கு ரத்த சமந்தமாக பிரட்சணைகள் ஏற்படலாம்.

கன்னி :
பணவரவு ஏற்படும். கடின முயற்சிகளுக்கு பின்னே நல்ல பலன் கிடைக்கும். எதிரிகள் தொல்லைகள் ஏற்படும். இருப்பினும் எதிரிகளை சாமாளித்து வெற்றி பெறவும் முடியும்.  சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அமைதியாக கடந்து செல்லும் நிலை ஏற்படும்.



துலாம் :
காரிய தடைகள் ஏற்படுதல். இட மாற்றங்கள் ஏற்படுதல். வம்பு வழக்கு பிரட்சணைகள் ஏற்படுதல்.

பயங்கர கோபங்கள் ஏற்படும். சண்டைகள் ஏற்படும். விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிரிகள் தொல்லைகள் ஏற்படுதல். சிலருக்கு களவு ஏற்படலாம். சிலருக்கு தீ காயங்கள் ஏற்படலாம்.

விருட்சிகம் :
தாயார் உடல்நிலை பாதிப்பு. இடமாற்றம் ஏற்படுதல். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இரத்த சமந்தமான பிரட்சணைகள் ஏற்படுதல். ஆன்மீக ஈடுபாடு அதிகரித்தல். ஆன்மீக பயணங்கள் ஏற்படுதல். தான தருமங்கள் செய்தல்.

காரிய தடை ஏற்படுதல். உடல் நல பாதிப்பு, உறவுகளுடன் சண்டை சச்சரவுகள் ஏற்படுதல். எதிரிகள் தொல்லை.

தனுசு :
காரிய வெற்றி ஏற்படுதல். எதிரிகளை  ஜெயித்தல். நோய்கள் குணமாகுதல்.

பண விரயங்கள் ஏற்படும். சிலருக்கு கண் சமந்தப்பட்ட பிரட்சணைகள் வரலாம்.

மகரம் :
பணவரவு ஏற்படும். கணவன் / மனைவி உறவில் பிரிவு. மன குழப்பம். கவலைகள் ஏற்படுதல்.

கும்பம் :
தாயின் உடல் நிலை பாதிப்பு. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள். இட மாற்றம் ஏற்படுதல். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

உடல் நல பாதிப்புகள் ஏற்படும். தோல் சமந்தப்பட்ட பிரட்சணைகள் ஏற்படலாம். ஆயுதங்களை கவனமாக கையாள வேண்டும். காயங்கள் ஏற்படலாம். சிலருக்கு களவு ஏற்படலாம்.

மீனம் :
கடின முயற்சிகளுக்கு பின்னே நல்ல பலன் கிடைக்கும்.

பண விரயங்கள் ஏற்படும். உடல் நல பாதிப்புகள் இருக்கும்.

பி.கு :
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் அவரவர் தனிப்பட்ட ஜாதகத்தில் இருக்கும் கிரக நிலை பொறுத்தே அமையும். எனவே இது ஒரு பொதுவான பலன்களே...

மேலும் ஜூலை முதலே ராகு கேது தங்கள் பலன்களை காட்ட துவங்கி விடுவர்.

Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.



No comments:

Post a Comment