Sunday, 10 May 2020

அமாவாசை யில் பிறந்தவன் திருடனா ??

அமாவாசையில் பிறந்தவர்கள் திருடர்கள் என்று ஒரு பொதுவான கருத்தும், அப்படி லாம் இல்லை என்று இன்னொரு கருத்தும் உள்ளது.

ஒரு விஷயத்தை மேலோட்டமாக பார்த்து ஆம், இல்லை என்று சொல்லுவதை விட கொஞ்சம் ஆழமாக பார்க்க வேண்டும்.

பொதுவாக அமாவாசையில் பிறந்தவர்களுக்கு அடுத்தவர் பணம் மீது ஆசையோ பொறாமையோ இருக்கும். அதற்காக அவர்கள் திருடுபவர்கள் அல்ல...நைஸா பேசி வாங்கிட்டு போக கூடியவர்களாக இருப்பார்கள்.

உதாரணமாக ஏதாவது ஐஸ் வைச்சோ, அல்லது ஒரு தர்ம சங்கடத்தை உருவாக்கி பேசி பணம் வாங்கி செல்பவர்களாக இருப்பார்கள்.

மேலும் இவர்களுக்கு தோற்றத்தில் ஏதாவது ஒரு விஷயம் அழகை கெடுக்கும். முகத்தில் ஏதாவது  மரு இருக்கலாம். பல்லு நீண்டு இருக்கலாம். மூக்கு புடைப்பா இருக்கலாம். ஏதோ ஒரு குறை இருக்கும்.

இவர்கள் ஆணாக இருக்கும்பட்சத்தில் மனைவி வழியிலும், பெண்ணாக இருக்கும்பட்சத்தில் கணவன் வழியிலும் நெருக்கம் காட்டுவார்கள்.

இது அமாவாசையில் பிறந்தவர்களுக்கான பொது பலன்கள்.

ஒருவேளை ஜாதகத்தில் லக்கினம் லக்கினாதிபதி நல்ல நிலையில் இருந்துவிட்டால், அவர்களுக்கு திருட்டு அபகரிக்கும் குணங்கள் இல்லாமல் லாட்டரி race சீட்டு போன்ற அதிர்ஷ்டம் மூலம் உழைப்பு இல்லாமல் பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் இருக்கும்.


Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.



No comments:

Post a Comment