Wednesday, 29 April 2020

உங்கள் எதிர்காலத்தை நீங்களே கணிக்க முடியும்.!!

பொதுவாக ஜோதிடம் தவிர்த்தே எதிர்காலத்தை கணிக்க முடியும். அந்த அனுபவம் உங்கள் அனைவருக்கும் நிச்சயம் இருக்கும்.

அம்மா சொல்லுவார்கள், " நீயெல்லாம் கல்யாணம் பண்ணி என்ன பாடு பட போறியோ..."

நண்பன் சொல்லுவான், " மச்சான் உன்னால நிச்சயம் இதை பண்ண முடியும் டா"

பொண்ணு பார்க்க போகும்போது அக்கா சொல்லுவாள், " இந்த பொண்ணை பார்த்தா குடும்பத்துக்கு ஒத்து வர பொண்ணு மாதிரி தெரில "

பல நேரங்களில் உங்களுக்கே தோணும், " இப்போ வாயை திறந்தா நிச்சயம் சண்டை வரும்."

இப்படி வாழ்க்கையில் பல விஷயங்களை எதிர்காலத்தில் நடக்க போவதை உங்கள் உள்ளுணர்வும் கூட இருப்பவர்களும் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

ஆனால் நாம் தான் அதை பொறாமை போட்டி சூழ்ச்சி பயம் என கடந்து விட்டு பிறகு முழிக்கிறோம். காரணம் விதி.

நான் ஏன் இப்படி இருக்கேன். எனக்கு என்ன பிரச்சனை. என்ன பண்ணா என் நிலை மாறும். என்று தன்னைத்தானே எவர் ஒருவரால் ஆய்வு செய்ய முடிகிறதோ அவரால் நிச்சயம் தன் பிரச்சனையில் இருந்து மீண்டு வர முடியும்.


பல நேரங்களில் நம் குறை நமக்கு தெரிவது இல்லை. அதை மற்றவர்கள் சொன்னாலும் அதை மனம் ஏற்காமல் அவரை எதிரியாக பார்க்கும். இருப்பினும் அதை சொல்லும்விதமும் சொல்கின்ற ஆளும் முக்கியமான ஒன்று.

என்னை என்னால் ஆய்வு செய்ய முடியவில்லை. மற்றவர்கள் சொல்வதை ஏற்கும் மனமும் எனக்கு இல்லை. அல்லது சொல்லும் அளவுக்கு எந்த உறவும் என்னை புரிந்துகொள்ளவில்லை.

அவர்களுக்கு ஜோதிடம் ஒரு நல் வழிகாட்டியாக நிச்சயம் இருக்கும்.

இங்கு பெரும்பாலானோர் ஜோதிடத்தை கல்யாணம் குழந்தை வேலை பணம் என்பதற்கா மட்டுமே உபயோகிப்பது வேதனையான விஷயம்.

சரி தோஷமா... என்ன பரிகாரம் பண்ணனும் என்ன சாமி கும்பிடனும். அவ்ளோ தான் அவர்கள் புரிதலாக இருக்கிறதே தவிர வாழும் முறையை யாரும் உணருவதில்லை.

ஆத்மா மனம் புத்தி மூன்றையும் ஒருசேர பயணிப்பவர்களால் நிச்சயம் பிரட்சணைகளை கடந்து மகிழ்ச்சியாக மிக மகிழ்ச்சியாக வாழ முடியும்.


Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.




No comments:

Post a Comment