பொதுவாக சனி திசை, சனி புத்தி, ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டக சனி நடப்பவர்கள் எல்லாரும் ஹனுமனை வழிபாடு செய்தால் நன்மை பெற முடியும்.
ஹனுமன் சாலிஸா பாடல் ஹனுமன் வழிபாட்டுக்கு சிறப்பு வாய்ந்தது.
ஹனுமன் சாலிஸாவை இயற்றிய துளசி தாசர், ஸ்ரீராமபிரான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் அவதாரத் தலமான கோகுலத்தில் இருப்பதைக் கண்டார். அதன் பின் ஒரு நாள் மகாராஜா ஒளரங்கசீப் அவர்களை சந்தித்து தன் கண்ட காட்சியைப் பற்றி விவரித்தார். மகாராஜா துளசிதாசரிடம், தனக்கும் ஸ்ரீராமனை காண்பிக்குமாறு சொல்ல, அதற்கு கோஸ்வாமி துளசிதாஸ் உண்மையான பக்தி இல்லாமல் ராமனை காண்பது இயலாது என்று பதிலளித்தார். கோபம் அடைந்த மகாராஜா துளசிதாஸரை சிறையிலடைத்தாகவும், அப்பொழுது அனுமனை வேண்டி பிரார்த்தித்து துளசி தாசர், ஹனுமான் சாலீஸாவை இயற்றியதாகவும் கூறப்படுகிறது.
ஹனுமான் சாலீஸாவை இயற்றி முடித்ததும், முகலாயர்களின் தலைநகரமாக விளங்கிய டெல்லி நகரமே அணி அணியாக படையாக திரண்ட குரங்குகளின் அட்டகாசத்தால் திக்கித் தவித்தது. தடுக்க முயன்ற அனைத்து முயற்சிகளும் தோல்வியை தழுவின. கடைசியால் இது ஹனுமானின் கோபத்தால் உண்டான விளைவு என்று உணர்ந்து சிறையில் இருந்த துளசிதாசரை விடுவித்து அனுமானின் கோபத்திலிருந்து காத்தருளுமாறு வேண்டிக்கொண்டார்.
துளசிதாசர் விடுதலை ஆனதும் குரங்குகள் அனைத்தும் மாயமாக மறைந்தன.
பூரண பக்தியுடன் சாலீசாவை பாராயணம் செய்பவர், அனுமானின் அருளை நிச்சயம் பெறுவர் என்று துளசிதாசர் கூறுகிறார்.
ஹனுமன் சாலிஸா பாடல் MP3 வடிவில்
Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.

No comments:
Post a Comment