Wednesday, 22 April 2020

எப்பேற்ப்பட்ட தோஷத்திற்கும் இது ஒரு எளிய பரிகாரமாக இருக்கும்.!!

ஜோதிட ரீதியாக பரிகாரத்தை சொல்றதுக்கு முன்னாடி, உளவியல் ரீதியாக ஒரு விஷயத்தை சொல்லிறேன். அப்போ தான் அந்த பரிகாரத்தை பற்றி புரிய வரும்.

பொதுவா நம்ம கிட்ட நிறைய நல்ல குணங்கள் இருந்தாலும், பிடிக்காத இடத்திலோ பிடிக்காத சூழ்நிலையிலோ, பிடிக்காதவங்க கூடயோ இருந்தால் நம்ம கிட்ட இருந்து கெட்ட குணங்கள் மட்டும் தான் வெளிப்படும்.

உதாரணமாக நமக்கு பிடிக்காத ஒருத்தர் நம்ம கூட இருந்தா, நம்ம மனசு அமைதியா இருக்காது. கடுப்புல தான் இருக்கும்.

சில பேரு துஷ்டனை கண்டால் தூர விலகு என்பது போல அந்த இடத்தை விட்டு போயி தன்னுடைய இயல்பான குணத்திலேயே இருப்பாங்க.

சில பேரு இவனுக்கு பயந்து நாம ஏன் போகணும் னு அங்கேயே இருந்து தன்னுடைய நிம்மதியை கெடுத்துக்குவாங்க. வீம்புக்கு னு சில விஷயங்கள் பண்ணி கெட்ட குணங்களை வளர்த்துக்குவாங்க.


இன்னும் புரியுற மாதிரி சொல்லணும் னா இந்த android phone வரதுக்கு முன்னாடி லாம் நாம, நாம பாட்டுக்கு சில வேலைகள் பண்ணிட்டு இருப்போம். ஆனா இப்போ ஹிந்து முஸ்லீம் னு சண்டை போட்டுட்டு இருக்கோம். காரணம் என்ன.

நமக்குள்ள என்ன தான் எல்லா மதமும் சம்மதம் னு ஒரு நல்ல குணம் இருந்தாலும், சிலர் ஹிந்து மதத்தை பற்றி தப்பா சொல்லும் போது நாம தினசரி அதை பார்க்குற சூழ்நிலையில் இருக்கிறோம். So நமக்கு கோபம் வருது. மத வெறி வருது. நாம நம்ம நிம்மதியையும் கெடுத்துகிட்டு கெட்ட குணங்களையும் உருவாக்கி கொள்கிறோம்.

இதை நல்லா உணர்ந்தவங்க என்ன பண்ணுவாங்க னா.... அந்த மாதிரி பதிவு போடுற ஆளை block பண்ணிட்டு கடந்து போயிருவாங்க. இப்போ நாம  முன்ன மாதிரி சகஜமா எந்த கெட்ட குணம் மற்றும் கோபமும் இல்லாம சகஜமா இருக்க முடியும்.

சரி இப்போ பரிகாரத்துக்கு வருவோம்.

ஒரு ஜாதகத்தில் நிறைய தோஷங்கள் இருக்கு. என்ன பரிகாரம் பண்ணாலும் பிரச்சனை சரி ஆகலை. வேலை இல்லை. பணம் இல்லை. கல்யாணம் ஆகலை. குழந்தை இல்லை. கடன் பிரச்சனை.

இப்படி எதுவா இருந்தாலும், " இட மாற்றம்" ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.

நீங்க பிறந்த ஊரில் இருந்து 50 கிலோமீட்டர் தாண்டி வடக்கு அல்லது கிழக்கு திசை பக்கமாக போயிட்டீங்க னா நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றம் இருக்கும்.

இது பிரச்சனை உள்ளவர்களுக்கு மட்டும் தான். சிலருக்கு ஜாதகத்தில் நல்ல அமைப்பு இருக்கும். ஆனா வெளிநாடு போயி கஷ்டப்படுவாங்க. எங்க ஊருல ராஜா மாதிரி இருந்தேன் னு லாம் சொல்லுவாங்க.

சில அரசியல் வாதிகள் "வந்தேறி" னு சொல்லி அரசியல் செய்வது போல.... பிறப்பிடம் விட்டு வேறு இடம் சென்று விட்டாலே  நாடோடி தான்.

அவ்வாறு நாடோடியாக இருக்கும்பட்சத்தில் தோஷங்கள் குறையும். நன்மைகள் பிறக்கும்.


Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.




No comments:

Post a Comment