Monday, 20 April 2020

உங்கள் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா....

மேஷம் :
பொறுப்பு உணர்வுகள் குறைவாக இருக்கும். ஊர் சுற்றும் குணம் இருக்கும். ஆசைகள் அதிகம் உடையவர்கள். Boy/girl friends அதிகம் இருக்கும். ஒரு வேலையில் நிரந்திரமாக இருக்க மாட்டார்கள். அல்லது நிலையான புத்தியுடன் வேலை செய்ய மாட்டார்கள். அழகாக இருப்பார்கள். அதேசமயம் " நான் " என்ற கர்வம் உடையவர்கள். கணவன் / மனைவி மூலம் பண வரவு இருக்கும்.

ரிஷபம் :
வாழ்க்கை துணை மூலமாக பண வரவு இருக்கும். அதே நேரத்தில் அவர்கள் மூலமாகவே பிரச்சனைகளும் அவமானங்களும் ஏற்படும்.

மிதுனம் :
நிறைய boy / girls friends இருக்கும். அவர்களுக்கு பிடித்தவர்களாக இருப்பார்கள். தைரியசாலியாக இருப்பார்கள். வாழ்க்கை துணையின் பணத்தை பெற முயற்சிப்பார்கள். எந்த வேலை மற்றும் வருமானமும் இல்லை என்றாலும் சுகவாசியாக வாழ்வார்கள்.

கடகம் :
இவர்களுக்கு குடும்பம் என்ற ஒன்றே திருமணத்திற்கு பிறகு தான் அமையும். சிலருக்கு சொந்தத்தில் வரன் அமையலாம். அடிக்கடி இடமாற்றம், வண்டி வாகன மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் வாழ்க்கை துணையின் செல்வாக்கு அதிகம் இருக்கும்.

சிம்மம் :
குழந்தை அமைப்பில் பிரட்சணைகள் இருக்கும். சிலருக்கு குழந்தை இல்லாமலே இருக்கலாம். மன சஞ்சலம், ஞாபக சக்தி குறைவு இருக்கும். குடும்ப பெரியவர்களிடம் சண்டை சச்சரவுகள் ஏற்படும். வம்பு வழக்குகள் பிரட்சணைகள் இருக்கும். கொஞ்சம் பிரட்சணைகள் வந்து திருமணம் நடைபெறும்.

கன்னி :
வாழ்க்கை துணையின் வழியில் எந்த ஒரு ஆதரவும் இருக்காது. வாழ்க்கை துணையுடன் சண்டைகள் அல்லது உடல் நல பாதிப்புகள் இருக்கும். சிலருக்கு ரத்தம் மற்றும் தோல் சமந்தப்பட்ட பிரட்சணைகள் இருக்கும்.


துலாம் :
சொந்தத்தில் திருமணம் அல்லது வீட்டோட மாப்பிள்ளையாக செல்ல நேரலாம். அல்லது வாழ்க்கை துணைக்கு அடங்கி இருக்க வேண்டிய நிலை இருக்கும்.

விருட்சிகம் :
வாழ்க்கை துணையுடன் அன்பாக நடந்து கொள்ள மாட்டார்கள். வாழ்க்கை துணையினால் பிரட்சணைகள் அவமானங்கள் ஏற்படும். எல்லாரும் இகழும்படியான வாழ்க்கை இருக்கும். ஆனால் ஆயுள் தீர்க்கம் இருக்கும்.

தனுசு :
குடும்பத்திற்கு ஆன்மீக ஈடுபாடு கொண்ட, அடக்கமான வாழ்க்கை துணை அமையும். தந்தை சொத்துக்கள் மூலம் லாபங்கள் கிடைக்கும்.

மகரம் :
சொல் பேச்சு கேட்காத, தனக்கு அடங்காத வாழ்க்கை துணை அமையும். சிலருக்கு இருதார அமைப்பு ஏற்படலாம். வாழ்க்கை துணை மூலம் பணவரவு இருக்கும்.

கும்பம் :
திருமணத்திற்கு பிறகு நன்றாக இருக்கும். ஆன்மிக ஈடுபாடு கொண்ட வாழ்க்கை துணை மூலம் பணவரவு இருக்கும்.

மீனம் :
வாழ்க்கை துணை மூலம் அதிக செலவுகள் ஏற்படும். தியாகங்கள் செய்ய வேண்டி இருக்கும். சில நேரங்களில் பிரிவும் ஏற்படலாம்.


Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.




No comments:

Post a Comment