Wednesday, 15 April 2020

புராண கதைகளும்.!! வாழும் தத்துவங்களும்.!!

சின்ன வயசுல எல்லாருமே இந்த ராமாயண மகாபாரத படங்களை ஆஆ.... னு வாயை பொழந்து பார்த்தவங்க தான். தப்பு செஞ்சா சாமி கண்ணை குத்திரும் னு பயந்தவங்க தான்.

அப்புறம் டீனேஜ் ல வயசு கோளாறு வந்ததும் புழுத்த அறிவு னு பேருல கடவுள் லாம் இல்லை னு சொல்லிட்டு இருப்பாங்க....

இப்போ நிறைய பேரோட கவனம் சாய் பாபா மேல போயி இருக்கு. இதுக்கு காரணம் 2 பேரு. ஒன்னு ஜோசிய காரர்கள். இன்னொன்னு சன் டிவி.

அந்த பரிகாரம் பண்ணு இந்த கோவிலுக்கு போ னு நிறைய காசு பிடிங்கியது. எல்லாத்தையும் பண்ணி ஒன்னும் நடக்கல னதும் மாற்று அரசியல் மாதிரி மாற்று கடவுள் எதிர்பார்த்துட்டு இருந்தவர்களுக்கு சன் டிவி ல சாய் பாபா நாடகம் போட்டாங்க....

சாய் பாபாவை கிண்டல் பன்றேன் னு நினைக்க வேணாம். எனக்கு அல்லா ஏசு முருகர் எல்லாம் ஒன்னு தான். கடவுள் ஒருவரே என்னும் குரூப் னு நினைக்க வேணாம். பாவ புண்ணியங்களுக்கு அஞ்சி தர்மம் கடை பிடிப்பதே இறைவழிபாடு னு நினைக்குற ஆளு.

சரி. மேட்டர் க்கு வருவோம்.

இப்போ உள்ள பிள்ளைகளுக்கு டிவில கார்ட்டூன் போட்டு சோறு ஊட்டுறாங்க. அதற்கு பதில் ராமாயண மகா பாரத படங்களை போட்டு காட்டலாம்.

இப்போ உள்ள உள்ள குழந்தைகளுக்கு தைரியம் முயற்சி உழைப்பு போன்ற உணர்வுகள் இருக்கிறது. ஆனால் வாழ்க்கைக்கு அதை விட முக்கியம் பாவ புண்ணிய தர்மம்.


வெறும் உழைப்பு முயற்சி தைரியம் இருக்குறவங்க லாம் நான் படிச்சேன் உழைச்சேன் நல்லா வாழுறேன் னு சுயநலமா போயிருவாங்க....
பாவ புண்ணியங்களை உணரும்போது தான் அடுத்தவங்களுக்கு உதவனும் னு தோணும்.

ஒரு குழந்தைக்கு சுயநலத்தை முதன் முதலில் கற்று கொடுக்கிறது யார் தெரியுமா.... அம்மா அப்பா தான்.

" செயின் மோதிரம் யாரு கேட்டாலும் கொடுத்திர கூடாது சரியா..... மாமா சாப்பிட்டுரும்.... அதுக்குள்ள நீ சாப்பிட்டுரு.... " இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்கள் மூலம் சுய நலத்தை விதைக்கிறார்கள்.

ஒன்னு செயின் மோதிரமை நாம கவனமா பார்த்துக்கணும். இல்லை பணம் போனா பரவாயில்ல என் பிள்ளைக்கு சுய நலம் கற்று கொடுக்க மாட்டேன் னு இருக்கணும்.

இதுலாம் பேச நல்லா இருக்கும். உழைச்சு வாங்குறவனுக்கு தான் கஷ்டம் தெரியும் ங்குற உங்க mind voice கேட்குது.

பணம் எப்போ வேணா சம்பாதிக்கலாம். ஆனால் நல்ல குணத்தை கோடி ரூபாய் கொடுத்தாலும் வாங்க முடியாது. அதை விதைக்க கூடிய பருவம் குழந்தை பருவம் தான்.

அப்புறம் அம்பு எப்படி போகுது பாரு....சாப்பாடு எப்படி மறையுது பாரு.... எப்படி உருவத்தை மாத்துறான் பாரு  எனும் நோக்கில புராண கதைகளை பார்க்காமல்....அதன் அர்த்தத்தை உள் வாங்கி கொள்ளவேண்டும்.

உதாரணமாக...... எல்லாரும் சன் டிவில ஜெய் ஹனுமான் பார்த்து இருப்பீங்க....

அதுல ஆஞ்சநேயர் சிவன் அம்சம். மகா சக்திகளை கொண்டவர். தேவர்கள் ஆசி பெற்றவர். அவ்ளோ பெரிய ஆளு மிக பணிவாக வாயில் காப்பாளரிடம் உள்ளே செல்ல அனுமதி தாருங்கள் என்று கேட்பார். நீ இதை பண்ணு னு கட்டளை இடாமல் உதவி செய்யுங்கள் என்று வேண்டுவார்.

இது தான் வாழ்க்கை தத்துவம். எவ்வளவு திறமை அறிவு பணம் இருந்தாலும் பணிவு முக்கியம்.

ஆனா இப்போ காமெடி னு வயது வித்தியாசம் இல்லாமல் எல்லாரையும் கலாய்கிறோம். தைரியம் எனும் பெயரில் யாரையும் மதிக்காமல் இருக்கிறோம். அப்புறம் my life my ruleனு வேற ஒரு கேவலமான தத்துவம்.

இந்த மாதிரி இருக்குறவங்க லாம் வாழ்க்கை ல ரொம்ப கஷ்டப்படுவாங்க.அடிப்படுவாங்க. இதை என்னால் 100 % உறுதியா சொல்ல முடியும்.

ஆனா அவங்க லாம் மத்தவங்களை தான் குறை சொல்லிட்டு இருப்பாங்க ளே தவிர, தன் தவறை உணரவே மாட்டாங்க.... அவங்க கஷ்டத்துக்கு காரணம் அவங்க மட்டும் தான்.

அப்புறம் சாய் பாபா சீரியல்.....அதை நல்லா கவனிச்சா ஒரு விஷயம் புரியும்.

அதுல பிரச்சனை னு பாபா கிட்ட போனா அவர் உடனே எல்லாருக்கும் உதவி பண்ண மாட்டார்.

அவன் life ல பண்ண ஒரு தப்பை அவனுக்கு உணர வைப்பார். அவனை திருந்த வைப்பார். அவன் திருந்திய அடுத்த நிமிஷமே அவன் நோய் குணமாகும் அல்லது அவன் பிரச்சனை தீர்ந்து இருக்கும்.

இங்கே எல்லாருமே தன் தப்பை உணராமல் வேண்டுதல் மட்டுமே வைக்கிறார்கள்....அது நடக்கல னதும் கடவுள் இல்லை னு சொல்லிட்டு இருக்காங்க......

உங்க தப்பை லாம் நீங்க உணராமல், கேட்ட உடனே எல்லாம் செய்ய அவர் வேலைகாரரும் இல்லை. காசு பெற்று கொண்டு செய்து கொடுக்க அவர் கூலிப்படை யும் இல்லை.

எல்லா கடவுளும் ஒருவரே.... எல்லா கடவுளுக்கும் ஒரே தத்துவம் தர்மம்.....

ஜெய் ஸ்ரீராம்.


Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.




No comments:

Post a Comment