வாழ்க்கையில் கஷ்டம் வரும் நேரமெல்லாம் எல்லாரும் சொல்லும் ஒரு வார்த்தை " கடவுள் என்னை ரொம்ப சோதிக்கிறார் ".
சோதிப்பது என்றால் கஷ்டப்படுத்துவது என்று அர்த்தம் இல்லை. டெஸ்ட் பண்றது என்று அர்த்தம்.
புரியும்படி சொல்ல வேண்டும் என்றால்,
இப்போது ஒரு பெண்ணிற்கு 2 வரன்கள் வருகிறது. ஒன்று தங்கமான பையன்.ஆனா ஏழை. இன்னொன்று பணக்கார வீட்டு பையன்.
இப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்கிவிடுவது தான் கடவுள் செய்யும் சோதனை. ஆனால் நீங்கள் சந்தோசம் அனுவவிப்பதும் கஷ்டபடுவதும் நீங்கள் எடுக்கும் முடிவே தீர்மானம் செய்கிறது.
பணம் முக்கியம் என்று முடிவு செய்தால், பிறகு அன்பு பாசம் க்கு ஏங்கும் சூழ்நிலை உருவாகும்.
குணம் போதும் என்று நினைத்தால் திருமணத்திற்கு பிறகு வசதி வாய்ப்புகளை கடவுள் நிச்சயம் உருவாக்கி தருவார். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
அட போங்க பாஸ்.... நான் பணத்தை பெருசா நினைக்காமல் கஷ்ட படுற ஒரு ஏழை பெண்ணை தான் கல்யாணம் பண்ணேன். ஆனா அவ என்னை அம்மா அப்பா கிட்ட இருந்து பிரிக்க பார்க்குறா... பணம் காசு னு பேயா அலையுறா னு நீங்க சொல்றது கேட்குது.
உண்மை என்னவென்றால் நிச்சயம் உங்கள் நோக்கம் நல்ல மனசை காட்டுவதாக இருந்து இருக்காது. ஏழை பெண்ணா யாரும் சப்போர்ட் க்கு வர மாட்டாங்க... அடிமை மாதிரி வேலை வாங்கலாம். நம்மளை விட்டு எங்கும் போக முடியாது என்று தான் இருந்து இருக்கும்.
அதன் விளைவு எதிர்மறையாக நடக்கிறது.
கடவுள் எப்போதும் யாரையும் கஷ்டப்படுத்துவது இல்லை. நீங்கள் எடுக்கும் முடிவுகள் தான் நிச்சயம் உங்கள் கஷ்டத்துக்கு காரணமாக இருந்து இருக்கும்.
உங்களுக்கு இன்னொரு உதாரணம் சொல்கிறேன். கல்லூரியில் நன்கு படித்து பட்டம் வாங்கிய ஒருவன் வேலை இல்லாமல் இருப்பான். ஒழுங்கா படிக்காமல் arrear வைத்தவன் நல்ல வேலையில் இருப்பான்.
இங்கு காரணம் நோக்கம் மட்டுமே....
நல்லா சம்பாதிக்கணும் வீடு வாங்கணும் கார் வாங்கணும் ஜாலியா இருக்கணும் என்று சுய நல நோக்கம் ஒருவருக்கு.
அம்மாவை காப்பாத்தனும். தங்கச்சியை கட்டி கொடுக்கணும். கடனை அடைக்கணும் என்ற நோக்கம் ஒருவருக்கு.
இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி வரும். இவ்ளோ நல்ல நோக்கம் இருக்கிறவன் ஒழுங்கா படிச்சு இருப்பான் ல....
உலகில் எல்லாமே விதிபடியே நடக்கிறது. எதையும் மாற்ற இயலாது. ஆனால் நோக்கம் சரியானதாக இருந்தால் நிச்சயம் ஒரு வழி கிடைக்கும். ஒரு கதவு அடைத்தால் மறு கதவு திறக்கும் என்பார்களே.... அது தான் இது.
நான் என் பொண்டாட்டி பிள்ளைக்கு உழைச்சு 3 வேலை கஞ்சி ஊத்தினா போதும் னு தான் நினைக்கேன். ஆனால் என்னால் அது கூட முடில... இதுல என்ன தப்பான நோக்கம் இருக்கு. என்னால ஏன் அது முடில... அப்படி னு இன்னொரு கேள்வி வரலாம்.
இந்த பிரச்சனையை அப்படியே நூல் பிடிச்சு பின்னால போனீங்க னா.... நீங்கள் எடுத்த ஒரு முடிவு தான் முழு காரணமா நிச்சயம் இருக்கும்.
உலகில் எல்லாமே இரண்டு தான்.
அம்மா அப்பா, இன்பம் துன்பம், இரவு பகல், காதல் காமம், அன்பு பணம், அமைதி கோபம், அழுகை சிரிப்பு......
இரண்டையும் உங்களிடம் கொடுத்து ஒன்று தேர்வு செய்ய சொல்வது தான் கடவுளின் சோதனை.
பின்பு நீங்கள் எடுக்கும் முடிவே உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கிறது.
ஆனால் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் கேட்டதை தான் கடவுள் நிச்சயம் கொடுத்து இருப்பார்.....

Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.
No comments:
Post a Comment