Thursday, 26 March 2020

குரு பெயர்ச்சியும் உலக பொருளாதாரமும்.!!

குரு பெயர்ச்சி என்பது தனி நபருக்கு மட்டுமல்லாமல் உலகளவிலும் தாக்கம் ஏற்படுத்தும்.

பொதுவாக மகரத்துக்கு வரும் குரு பொருளாதார பிரட்சணையை கொடுப்பார். வேலையில் பிரச்சனைகளை கொடுப்பார். வேலை இழப்பு அல்லது வேலை பளு ஆகியவற்றை கொடுப்பார்.


இப்போது இருக்கும் நிலவரத்தை பார்த்தால் நிலைமை அப்படி தான் ஆகும் என்று எல்லோராலும் ஓரளவு யூகிக்க முடியும்.

மேலும் குருவானவர் பெயற்சிக்கு 2 மாதத்திற்கு முன்பே தாக்கத்தை ஏற்படுத்துவார். அப்படி இருக்க ஜனவரி முதல் தான் வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியது.

எல்லாவற்றையும் பொருத்தி பார்க்கும்போதும் அடுத்த ஒரு வருடத்திற்கு உலகளவில் பொருளாதாரம் மற்றும் வேலை அமைப்பு பாதிக்கப்படும் என்று சொல்லலாம்.

வரும் குரு பெயர்ச்சி மார்ச் 28 முதல் ஜூலை 8 வரை உள்ளது.

இதனை ஒரு trailer ஆக எடுத்துக்கொண்டு பார்த்தால், இந்த கால கட்டத்தில் நடக்கும் விஷயங்கள் தான் நவம்பர் 15 முதல் 1 வருட காலத்திற்கு நீடிக்கும்.

கடந்த 2009 ஆண்டு மகர குரு ஏற்படுத்திய தாக்கத்தை செய்திகள் மூலம் புரிந்து கொள்ளலாம்.


ஆனால் டிசம்பர் 27 க்கு பிறகு சனியும் சேர்ந்து பெயர்ச்சி ஆவதால் பிரட்சணைகளை சமாளித்து மீண்டு வர முடியும்.

இதனை எல்லாம் சிலர் இல்லை என்று மறுக்கலாம். இப்படி தான் ஆகும் என்று நானும் உறுதியாக சொல்லவில்லை.

நான் ஒரு வளர்ந்து வரும் ஜோதிடன் மட்டுமே....
இருப்பினும் ஒரு எச்சரிக்கையாக இதனை எடுத்துக்கொள்ளலாம்.


Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.






No comments:

Post a Comment