Thursday, 19 March 2020

ஜாதகம் பார்த்து உயிரோடு இருப்பவர் ஜாதகமா அல்லது இறந்தவர் ஜாதகமா என சொல்ல முடியுமா.??

ஒரு ஜோதிடர் திறமையை ஆராய்வதற்கு சிலர் இறந்தவர் ஜாதகம் கொடுத்து பலன் கேட்பது உண்டு. ஆயிரத்தில் ஒரு ஜோதிடர் அதை கண்டுபிடித்து சரியாக சொல்வதும் உண்டு.

முதலில் ஜோதிடம் என்றால் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

வாழ்க்கையில் எல்லாவற்றையும் ஜாதகம் வைத்தே செய்ய வேண்டும் என்று என்ன கூடாது.

உதாரணமாக பெரும்பாலானோர் கேட்கும் கேள்வி....

என்ன பெயர் வைக்கலாம், என்ன படிக்கலாம், என்ன வேலை செய்யலாம், என்ன குழந்தை பிறக்கும், என்ன திசையில் இருந்து வரன் அமையும், கூட பிறந்தவங்க எத்தனை பேரு இப்படி அனாவசிய கேள்விகளை லாம் கேட்பதை விட்டு விடுங்கள்.

நம்பிக்கை + தெய்வீகம் = ஜோதிடம்.

சந்தேகத்தொட வராமல் நிச்சயம் ஒரு வழி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு வரும்போது நல்ல பலன்கள் கிடைக்கும்.

ஒரு ஜோதிடர் என் திறமையால் பலன் சொல்கிறேன் என நினைக்கும்போதும், ஒருவரின் திறமையை சோதனை செய்ய கேள்விகள் கேட்கும்போதும் நிச்சயம் ஒரு நல்ல வாக்கு கிடைக்காது என்பதே நிதர்சன உண்மை.

வாழ்க்கையில் எல்லா முயற்சிகளும் செய்து விட்டேன். இனி என்ன செய்ய எது செய்ய என வழித்தெரியாது நிற்கும்போது ஜோதிடம் என்ற ஒன்றை கையில் எடுக்கும்போது அது நிச்சயம் வழி காட்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

உதாரணமாக ஒரு மருத்துவர் இருக்கிறார். நீ தான் டாக்டர் ஆச்சே எனக்கு என்ன நோய் இருக்கு. ஏன் வந்துச்சு னு சரியா கண்டு பிடி பார்ப்போம் னு சொல்லுவிண்களா....

நிச்சயம் சொல்ல மாட்டிங்க.... அதுக்கு இரண்டு காரணம் இருக்கு.

1 ) அந்தாளு பெருசா ஏதாவது ஒரு நோய் னு நினைச்சு ஏதாவது பெரிய மாத்திரை கொடுத்து நம்ம உடம்புக்கு ஏதும் ஆகிருமோ னு பயத்துல...
இல்லை டாக்டர் 2 நாளா காய்ச்சல்.... ஐஸ் சாப்பிட்டேன் னு எல்லாத்தையும் சொல்லுவாங்க.

2 ) ஓ.... நானே கண்டுபிடிச்சு சொல்லனுமா.... ஏம்மா நர்ஸ் இங்கே வாங்க.... இந்த ஆளை கூட்டிட்டு போயி இருக்குற எல்லா டெஸ்ட் ம் பண்ணுங்க... சார் நீங்க ஒரு லட்சம் ரூபாய் பில் pay பண்ணிருங்க.


மேலும் நீங்க ஒரு விஷயம் புரிஞ்சுக்கணும். ஜோதிடம் என்பது ஒரு கடல். அதுல லட்ச கணக்கான விஷயங்களை சொல்ல முடியும்.

மொத்தம் 12 கட்டங்கள். ஒவ்வொரு கட்டமும் பல விஷயங்களை கொண்டது.

ஒரு ஜோதிடர் ஒரு கட்டத்துக்கு எவ்ளோ விஷயம் தெரிஞ்சு வைச்சு இருக்கிறார் என்பதே அவரது திறமை.

உதாரணமாக ஒருவருக்கு சத்ரு ஸ்தானம் பாதிப்பு அடைச்சு இருக்கு. உடனே அந்த பாவம் சார்ந்த எல்லா விஷயமும் அவருக்கு பாதிப்பு அடையுமா னு கேட்டா நிச்சயம் இல்லை.

ஒன்னு அவருக்கு உடல் நல பாதிப்பு இருக்கலாம், இல்லை கடன் பிரச்சனை இருக்கலாம். இல்லை தலை மறைவா வாழுற அளவுக்கு எதிரிகள் இருக்கலாம்.

இதுல ஒன்னு னு குறிப்பிட்டு சொல்ல முடியாது.

சிலருக்கு படிப்பு பாதிக்கணும் னு அமைப்பு இருக்கும். ஆனால் நல்லா படிச்சு இருப்பாங்க. ஆனா அம்மாவை பாதிச்சு இருக்கும். அம்மா படிப்பு 2ம் இருக்கு னா அது சார்ந்த வேறு விஷயங்களை பாதிச்சு இருக்கும்.

ஒரு ஜோதிடர் அவர் பார்வைக்கு தெரிஞ்ச.... அவசியமான முக்கியமான விஷயங்களை சொல்லுவார். அது போக சில விஷயங்களில் உங்களுக்கு பாதிப்பு இருந்தா அது ஏன் எதனால னு பார்த்து காரணம் சொல்லுவார். பிறகு அதை சரி செய்ய முயற்சி செய்யலாம்.

அதுக்காக நீங்களே எல்லாத்தையும் சொல்லணும் னு சொல்லல... அனாவசியமான கேள்விகளை கேட்காதீங்க னு சொல்றேன்.

ஒரு ஜோதிடர் வடக்கு திசையில் இருந்து தான் வரன் வரும் னு சொன்னா... தெற்கு திசையில் இருந்து வர நல்ல வரனை வேணாம் னு விட்டுருவிங்களா ?

அனுபவ ரீதியா பல ஜாதகங்கள் பார்த்துட்டு தான் பலன் சொல்றேன். 35 வயசுல இருந்துருவ னு ஒரு ஜோசியர் சொல்லியும் 60 வயசு வரை நல்லா இருக்க கூடிய ஆளு இருக்கு. குழந்தை பிறக்காது னு சொல்லியும் குழந்தை இருக்குற ஆளு இருக்கு. அப்பா இறந்து போவார் னு சொல்லியும் அப்பா இருக்குற ஜாதகம் இருக்கு.

அப்பா இறக்க கூடாது னா இறந்தும் போகலாம் பிரிஞ்சும் போகலாம் ஓடியும் போகலாம்.
அதுல பல சூட்சுமம் இருக்கு. இது தான் னு குறிப்பிட்டு சொல்ல முடியாது. எல்லாம் இறைவன் செயல்.

வரனோட குணம் என்ன... நல்லா சேர்ந்து வாழ்வாங்களா... குழந்தை அமைப்பு இருக்கா... ஆயுள் பாதிப்பு இருக்கா னு அவசியமான கேள்வி கேட்டா ஒரு நியாயம் உண்டு.

ஒருதங்க என்கிட்ட கேட்குறாங்க... பொருத்தம் பார்க்கும்போதே மாமனார் மாமியார் ஆயுள் எப்படி இருக்கு னு....

எனக்கு அந்த ஜாதகத்தையே தூக்கி விசிட்டு ஏதாவது சாபம் கொடுக்குற அளவுக்கு கோபம் வந்துச்சு. But ஜாதகம் பார்க்குற நேரத்துல நான் கட்டுப்பாடு உடன் தான் இருப்பேன். அமைதியா விட்டுட்டேன்.

சரி இப்போ தலைப்புக்கு வரேன்.

ஒரு ஜோதிடர் ஜாதகம் வைத்து இறந்தவர் ஜாதகம் என்று சொல்ல முடிந்தால், ஒருவர் எப்போது இறப்பார் என்றும் சொல்ல முடியும் தானே.... ஆனால் அது கடினமான ஒன்று. ஆனால் சிலர் ராசி கட்டம் பார்த்தே.... எந்த திசாபுத்தி கணக்கும் இல்லாமல் இறந்தவர் ஜாதகம் என்று சொல்லுவார்.

அது தான் தெய்வீகம். பிரசன்னம். ஒருவர் ஜாதகம் பார்க்க வரும் நோக்கத்தை அறிந்து கொள்ளுதல். இவன் ஏதோ விதண்டா வாதம் பண்ணவே வந்து இருக்கான் னு கண்டு பிடிக்க முடியும்.


Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.





No comments:

Post a Comment