Wednesday, 4 March 2020

உடல் நல பாதிப்புகள் குறைய எளிய பரிகாரம்.!!

உடல் நல பாதிப்புகள் என்பது எல்லாருக்கும் இருக்க கூடிய ஒன்று தான். ஆனால் சிலருக்கு அடிக்கடி உடல் நல பாதிப்புகள் இருக்கும்.

காய்ச்சல், தலைவலி, ஜலதோஷம் னு நோய் எதிர்ப்பு சக்தி கம்மியா உள்ள உடலாக இருக்கும்.

சிலருக்கு ஏழரை சனி அல்லது திசாபுத்தி காலத்தில் மட்டும் உடல் நல பாதிப்புகள் இருக்கும்.

இவர்களுக்கு ஒரு எளிய பரிகாரம் என்ன என்றால் தினசரி ஏதேனும் ஒரு கசப்பை உட்கொள்ள வேண்டும்.


சுண்ட வத்தல், பாகற்காய், நிலவேம்பு னு ஏதேனும் ஒரு கசப்பை உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

இது ஜோதிட ரீதியான பரிகாரம். இதனை அறிவியல் பூர்வமாகவும் எடுத்தர்த்துக்கொள்ளலாம்.

அதாவது அறுசுவை உணவு உட்கொள்ளும் மனிதன் ஆரோக்கியமாக இருப்பான். ஆனால் நாம் அறுசுவையில் கசப்பு, துவர்ப்பு போன்ற சுவைகளை தவிர்த்து விடுவதே நோய்களுக்கு காரணமாகிறது.

6ம் இடத்தில் செவ்வாய், ராகு மற்றும் ராகு செவ்வாய் திசாபுத்தி காலத்தில் உடல் நல பாதிப்புகள் ஏற்படுபவர்களும் அன்றாடம் ஏதேனும் ஒரு கசப்பை உணவாக எடுத்து வர உடல் நல பாதிப்புகள் குறையும்.

அதற்காக கசப்பு தெரியாதவாரு வாய்க்கு ருசியா சமைச்சு சாப்பிட கூடாது. குடிப்பது போல எடுத்துக்கொள்ள வேண்டும்.


Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.



No comments:

Post a Comment