Sunday, 1 March 2020

தினசரி ராசி பலன்கள் எப்படி சொல்கிறார்கள் என்று தெரியுமா??

தினசரி காலையில் டிவியில் ராசி பலன் பார்ப்பது என்பது எல்லார் வீட்டிலும் நடக்கக்கூடிய ஒரு விஷயம்.

ஒரு டிவியில் பண வரவு என்று சொல்வார். இன்னொரு டிவியில் சண்டை என சொல்லுவார். எல்லாத்தையும் பார்த்து குழம்பி போவார்கள். சில நேரங்களில் சிலருக்கு அது நடந்து விடும்.

கெட்டது மட்டும் நடக்கு நல்லது ஒன்னும் நடக்க மாட்டுக்கு என வேடிக்கையாக சொல்வதும் உண்டு.

மொத்தம் 12 ராசிகள். 2 நாளைக்கு ஒரு பலன் என்று மொத்தம் 12 பலன்கள். இந்த 12 பலன்கள் தான் மாறி மாறி வரும்.

உதாரணமாக இன்று மீன ராசிக்கு பண விரயம் என்று பலன்.

இதை ஒருவர் மீன ராசி நேயர்களே... இன்று யாருக்கும் கடன் கொடுக்காதீங்க என்று ஒருவர் சொல்லுவார். இன்னொருவர் பொருள் வாங்கும்போது கவனம் தேவை ஏமாந்து போவீங்க னு சொல்வார். இன்னொருத்தர் வீட்டுக்கு வீட்டுக்கு விருந்தினர் வருவார் என்பார்.

ஆக பலன் ஒன்று தான். நடுவுல நடுவுல மானே தேனே பொன் மானே னு சேர்த்து ஆளாளுக்கு ஒன்று சொல்வார்கள்.

சில நேரங்களில் ஜோதிடர் வராமல் இருப்பார். உடனே பழைய வீடியோ வை edit செய்து கூட போடுவார்கள்.

தற்போது நான் போடும் நட்சத்திர பலன்களும் அப்படி தான். மொத்தம் 9 பலன்கள். அது தான் மாறி மாறி வரும்.

அது எப்போ என்னைக்கு எவ்ளோ நேரம் என்பது மட்டும்தான் கணிப்பு.

பொதுவாக திருமணம் செய்வதற்கு குரு பலம் பார்ப்பார்கள். அதுபோல தினசரி நம் அன்றாட வாழ்வில் செய்யும் செயல்களுக்கு சந்திர பலம் பார்க்க வேண்டும். அது தான் ராசி பலன்கள்.

சந்திரன் உங்கள் ராசிக்கு 1,3, 6,7,10,11 இடங்களில் வரும்போது நல்லது நடக்கும்.

உதாரணமாக இன்று கார்த்திகை நட்சத்திரம். மேஷ ராசி.

அப்படி என்றால் இன்று மேஷம், மிதுனம், கும்பம், விருட்சிகம், துலாம், கடகம் ஆகிய ராசிகளுக்கு நன்றாக இருக்கும் என்று அர்த்தம்.

உடனே சில பேருக்கு தோணும். இப்போ தான் தெண்ட செலவு ஆச்சு, சண்டை வந்துச்சு, நானே கடுப்புல இருக்கேன் நல்லா இருக்கும் னு சொல்றிங்க னு தோணும்.

தின ராசி பலன் என்பது பொது பலன் மட்டுமே. இது 50% சரியா வரும். அடுத்து நட்சத்திர பலன். அது 80% சரியா வரும். 100% சரியா சொல்லணும் னா அது சுய ஜாதகம் வைத்து தான் சொல்ல இயலும்.


Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.




No comments:

Post a Comment