Friday, 28 February 2020

உலகில் ஒரே நேரத்தில் பிறக்கும் குழந்தைகளின் வாழ்க்கை முறை எல்லாம் ஒரே மாதிரி இருப்பது இல்லையே... ஏன் ??

பொதுவாக நாத்திகம் பேசுபவர்களுக்கும் ஜோதிடம் மீது நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் ஏன் ஆன்மீகவாதிகளுக்கும் கூட சில நேரங்களில் இந்த சந்தேகம் வருவது உண்டு.

ஒரே நேரத்தில் உலகில் எத்தனையோ குழந்தைகள் பிறக்கின்றன. ஆனால் அவர்கள் எல்லோர் வாழ்க்கையும் ஒரே மாதிரி இருப்பது இல்லையே...

ஒருவர் கோடீஸ்வரர் வீட்டில் பிறக்கிறார். ஒருவர் ஏழை வீட்டில் பிறக்கிறார். ஒருவர் கலெக்டர் ஆகிறார். ஒருவர் மாடு மேய்கிறார். ஏன் இந்த மாறுபாடு.

இந்த பணம் பதவி பட்டம் எல்லாம் மனிதன் வகுத்தது தான்.

பட்டம் வாங்கியவர்கள் எல்லாம் புத்திசாலியும் இல்லை. பட்டம் வாங்காதவர்கள் எல்லாம் முட்டாள்களும் இல்லை.

உதாரணமாக படிப்பு அறிவு இல்லாத நடிகர் கமலஹாசனின் அறிவும், பட்டம் வாங்கியவர்கள் அறிவும் ஒன்று தான்.


பெற்ற பிள்ளையை இழந்தவர் வலியும், வளர்த்த நாயை இழந்தவர் வலியும் ஒன்று தான்.

பெட்டிக்கடையில் 10 ஆயிரம் ரூபாய் இழந்தவர் வலியும், மிகப்பெரிய கம்பெனி யில் 5 கோடி இழந்தவர் வலியும் ஒன்று தான்.

கார் வாங்கினால் சந்தோசப்படும் ஒருவர் இருக்கும் உலகில் சைக்கிள் வாங்கினாலே சந்தோசப்படுபவரும் இருக்கிறார்.

அழகான பெண் கிடைத்தால் சந்தோசப்படும் ஒருவர் இருக்கும் உலகில் அன்பான பெண் கிடைத்தால் சந்தோசப்படுபவரும் இருக்கிறார்.

மாதம் 50000 சம்பளம் கிடைத்தால் சந்தோசப்படும் ஒருவர் இருக்கும் உலகில் 15000 கிடைத்தால் சந்தோசப்படுபவரும் இருக்கிறார்.

வாழ்க்கை முறை வேறுபட்டாலும் சந்தோசமோ கவலையோ உணர்வுகள் என்பது எல்லாருக்கும் ஒன்றாக தான் இருக்கிறது.

மனிதன் தனக்குள்ளே உயர்ந்தவன் தாழ்ந்தவன் ஏழை பணக்காரன் படித்தவன் படிக்காதவன் அறிவாளி முட்டாள் என பல வேறுபாடுகளை உருவாக்கி வைத்து இருந்தாலும் கடவுள் எல்லாருக்கும் அவரவர் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப சமமான இன்ப துன்பங்களையே கொடுக்கிறார்.


" நாய் தானே கார் ல அடிபட்டு செத்து போச்சு" என கடந்து விடாமல், அந்த நாயை யாரோ ஒருவர் குழந்தை போல வளர்த்து இருப்பாரே என்ற எண்ணம் வர வேண்டும்.

வாழும் முறை வேறு வேறாக இருந்தாலும், வலியும் வேதனையும் எல்லாருக்கும் ஒன்று தான் என்பதை உணர வேண்டும்.

இதை உலகிற்கு உணர்த்தவே இறைவன் படைப்பில் இந்த வேறுபாடுகள்.

Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.




No comments:

Post a Comment